1000 கைகள் சேர்ந்து ஆடும் புத்த நடனம் – வீடியோ

Budha nadanam

வீடியோ கீழே உள்ளது:
நமது கடவுள்களுக்கு பல கைகள் உண்டு என்று படிதித்துள்ளோம் அதை சிலை வடிவில் பார்த்துள்ளோம். ஆனால் உண்மையில் கடவுளை நேரில் காண்கயில் அவருக்கு 1000 கைகள் இருந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்தாலே நமக்கு வியப்பாக இருக்கிறது. ஆனால் அது போன்ற ஒரு கட்சியை நடனம் மூலம் சிலர் வெளிப்படுத்தி உள்ளனர். இதோ அதன் வீடியோ காட்சி.

உங்கள் ராசிக்கான 2018 தமிழ் புத்தாண்டு பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

இந்த நடனத்திற்கு ஆயிரம் கைகள் நடனம் என்று பெயர். அப்படியானால் இந்த நடனத்தை 500 பேர் சேர்ந்து ஆடுவார்களா என்றால் இல்லை. பதினைந்து முதல் இருப்பது நபர்கள் சேர்ந்து இந்த நடனத்தை ஆடுவர். ஆனால் அவர்களின் கை அசைவை பார்க்கையில் அது 1000 கைகள் சேர்ந்து ஆடுவது போல இருக்கும். அந்த அளவிற்கு மிக நேர்த்தியாக இதை ஆடுவர். இதற்காக அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பல மணி நேர பயிற்சியை மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிட தக்கது.

புத்தரை போற்றும் வகையில் அவர்கள் இந்த நடந்தை ஆடுவதாக கூறப்படுகிறது. புத்தருக்கு ஆயிரம் கைகள் இருந்தால் எப்படி இருக்கும் என்பதை வெளிப்படுத்தும் ஒரு காட்சியாகவே அவர்கள் இந்த நடனத்தை ஆடுகிறார்கள் என்று கூறப்படுகிறது. இந்த நடனத்தை ஆடுபவர்கள் பலருக்கு காது கேட்காது என்றும் அவர்களை வழி நடத்தும் வகையில் சிலர் பக்கவாட்டில் நின்று, செய்கை மூலம் அவர்களுக்கு சிலவற்றை கூறுவார்கள் என்று கூறப்படுகிறது. சீன பகுதிகளில் புத்த வழிபாடு அதிகம் என்பதால் இது போன்ற நடனங்கள் அங்கு பிரபலமாக இருக்கிறது