ஆதி தமிழன் வணங்கிய உலகின் பழமையான முருகன் கோவில் கண்டுபிடிப்பு.

murugan-kovil
- Advertisement -

ஆதி தமிழன், முருகனையே முதற்கடவுளான வழிபட்டான் என்று பலர் கூறினாலும், அதை உண்மையாகும் விதத்தில் தற்போது குமரிக்கண்டம் காலகட்டத்தை சார்ந்த முருகன் கோவில் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வாருங்கள் இதை பற்றி விரிவாக பார்ப்போம்.

மாமல்லபுரத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்ட இந்த கோவில் கிமு 3ம் நூற்றாண்டிலிருந்து கிபி 3ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

சுடு செங்கற்களால் கட்டப்பட்டுள்ள இந்த கோவிலின் கருவறை வெறும் 2 மீட்டர் நீலமே உள்ளது. இவளவு சிறிய கருவறையில் எந்த ஒரு தெய்வமும் இருந்திருப்பதற்கான சாத்தியம் இல்லை என்று ஒரு சாரார் கூறினாலும். இங்கு முருகன் குடிகொண்டிருந்ததற்கான ஆதாரமாக கருங்கல்லால் ஆனா வேல் ஒன்று இன்றும் அங்கு கம்பீரமாக நிற்கிறது.

இந்த காலத்தில் உள்ள பெரும்பாலான கோவில்கள் கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி கட்டப்பட்டிருப்பதை போலல்லாமல் இந்த கோவில் வடக்கு திசை நோக்கி கட்டப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்த கோவில் இருக்கும் இடத்தை அகழ்வாய்வுக்கு உட்படுத்தப்பட்ட ஆரம்ப கட்டத்தில் இங்கு நிறைய கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கீரர் பிரியன் என்பவர் இந்த கோயிலுக்கு 10 பொற்களஞ்சியங்களை நன்கொடையாக தந்திருப்பதாக ஒரு கல்வெட்டு தெரிவிக்கிறது.

அதேபோல் கோவில் தீபத்தின் பராமரிப்பு செலவிற்காக 16 பொற்களஞ்சியங்களை வசந்தனார் என்னும் பெண் ஒருவர் நன்கொடையாக தந்திருப்பதாக கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முருகனின் கருங்கல் வேல், சுடு செங்கற்களால் ஆனா நந்திகியின் சிலை, சுடுமண் விளக்குகள், பச்சைக் கல்லினால் ஆன சிவலிங்கம் போன்றவை இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 2200 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட சுனாமி போன்ற பேரலையால் இந்த கோவில் சிதிலமடைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதோடு இதுவே உங்கள் பழமையான கோவிலாக இருக்கக்கூடும் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -