கடன் தொல்லை கழுத்தை நெரிக்கிறதா? தொடர்ந்து கடன் ஏற்பட இது தான் காரணமா? இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!

astro-cash

கடன் வாங்காத நபர்களே இந்த உலகத்தில் இருக்க முடியாது. ஏழையாக இருந்தாலும், பணக்காரனாக இருந்தாலும் அவரவர்களின் தகுதிக்கு ஏற்ப நிச்சயம் கடன்கள் வாங்க வேண்டிய சூழ்நிலை ஒரு கட்டத்தில் வரும். ஆக கடனே இல்லாமல் வாழ்வது என்பது கடினம் தான். இப்படி இருக்க ஒரு சிலருக்கு அந்த கடனே வாழ்க்கையாக அமைந்து விடுவதையும் பார்த்திருப்போம். ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன், அதை அடைக்க இன்னொரு கடன் என்று வாங்கிக் கொண்டே இருந்தால் இறுதியில் வாழ்வை முடித்துக் கொள்ளும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விடுவார்கள். இப்படி கடனே வாழ்க்கையாக அமைய என்ன காரணம்? யாருக்கு கடன் பிரச்சனைகள் வரும்? அதை எப்படி சரி செய்வது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

kadan

ஒருவருடைய ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 6-ஆம் இடத்தில் தான் கடனுக்கு உரிய இடமாக சொல்லப்பட்டுள்ளது. ஆறாம் இடத்தில் இருக்கும் ராசியின் கிரகம் வலுப்பெற்று இருந்தால் அந்த ஜாதகருக்கு கடன் சுமை ஏற்பட்டு விடுகிறது. பகைவர்களையும், கடன்களையும், நோய்களையும் தீர்மானிக்கும் இந்த ஆறாம் இடம் வலுப்பெறுவது வாழ்வில் பிரச்சனைகளை உண்டு பண்ணும். அவற்றில் இருந்து தப்பித்துக் கொள்ள ஒவ்வொரு லக்னத்திற்கும் பரிகாரங்கள் உண்டு. அவ்வகையில் 12 லக்னக்காரர்களும் செய்ய வேண்டிய பரிகாரம் என்ன?

மேஷ லக்னக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்:
Mesham Rasi
மேஷ லக்னக்காரர்களுக்கு ஆறாம் இடமாக இருக்கும் கன்னி ராசியின் கிரகமாக புதன் கிரகம் விளங்குகிறது. இந்த இடத்தில் புதன் கிரகம் வலுப்பெற்று இருந்தால் அந்த ஜாதகருக்கு கடன் பிரச்சனை ஏற்படும். புதனுக்குரிய பச்சைநிற வஸ்திரத்தை பிறருக்கு தானம் கொடுத்தாலும், ராகு கால துர்க்கை பூஜையை மேற்கொண்டாலும் கடன்கள் நீங்கும்.

ரிஷப லக்னக்காரர்கள் செய்ய வேண்டியவ பரிகாரம்:
Taurus zodiac sign
உங்கள் லக்னத்திற்கு ஆறாமிடத்தில் இருக்கும் துலாம் ராசியின் கிரகமாக சுக்கிரன் இருப்பதால் சுக்கிரன் அங்கு வலுபெறும் சமயத்தில் கடன்கள் ஏற்படும். சுக்கிரனுக்கு உரிய வெள்ளைநிற வஸ்திரம், மொச்சை தானியம் தானம் செய்தாலும், ரங்கநாதரை தரிசித்தாலும் கடன் சுமை குறையும்.

மிதுன லக்னக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்:
Gemini zodiac sign
உங்கள் லக்னத்திற்கு ஆறாமிடத்தில் விருச்சிக ராசியின் அதிபதியாக இருக்கும் செவ்வாய் வலுப்பெற்று இருந்தால் கடன் சுமை ஏற்படும். செவ்வாய் பகவானுக்கு உரிய சிவப்பு நிற வஸ்திரம், துவரை தானம் செய்து வரலாம். மேலும் வைத்தீஸ்வரன் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

- Advertisement -

கடக லக்னக்காரர்கள் செய்ய வேண்டியவை பரிகாரம்:
Kadagam Rasi
உங்கள் லக்னத்திலிருந்து ஆறாம் இடத்தில் இருக்கும் தனுசு ராசியின் கிரகமாக விளங்கும் குரு பகவான் வலுப்பெற்று இருந்தால் கடன் சுமை அதிகரிக்கும். இதனால் குரு பகவானுக்குரிய தளங்களை தரிசனம் செய்வதும், மஞ்சள் நிற வஸ்திரம் மற்றும் மஞ்சள் நிற கொண்டைக்கடலை தானம் செய்வதும் நல்ல பலன் தரும்.

சிம்ம லக்னக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்:
Leo zodiac sign
உங்கள் லக்னத்திலிருந்து ஆறாம் இடமாக மகர ராசிக்கு உரிய கிரகமாக விளங்கும் சனி பகவான் பலம் பெற்று இருந்தால் கடன் சுமை கூடும். அந்த சமயத்தில் சனிபகவானுக்கு எள் தீபம் ஏற்றுவதும், காக்கைக்கு எள் கலந்த சோறு வைப்பதும், கருநீல வஸ்திரம், வெல்லம் தானம் செய்வதும், சனிக்குரிய குச்சனூர் கோவிலுக்கு சென்று வருவதும் யோக பலன்களை கொடுக்கும்.

கன்னி லக்னக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்:
kanni
கன்னி லக்னத்தில் இருந்து ஆறாம் இடத்தில் இருக்கும் கும்ப ராசிக்கு உரிய கிரகமாக விளங்கும் சனி பகவான் அங்கேயே வலுப்பெற்று இருந்தால் அந்த ஜாதகருக்கு கடன் சுமை கூடும். நீங்களும் குச்சனூர், திருநள்ளாறு போன்ற ஸ்தலங்களுக்கு சென்று வரலாம். ஏழைகளுக்கு வஸ்திர தானம் செய்யலாம்.

துலா லக்னக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்:
Thulam Rasi
துலாம் லக்னத்தில் இருந்து ஆறாம் இடமான மீன ராசிக்கு உரிய கிரகமாக விளங்கும் குரு பகவானுக்கு உரிய ஆலங்குடி கோவிலுக்கு நீங்கள் சென்று வரலாம். குரு தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றி, கொண்டைக் கடலை தானம் செய்யலாம்.

விருச்சிக லக்னக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்:
Scorpius zodiac sign
உங்கள் லக்னத்திலிருந்து ஆறாமிடத்தில் மேஷ ராசியில் செவ்வாய் பகவான் வலுப்பெற்று இருந்தால் கடன் சுமை கூடும். செவ்வாய்க்கு உரிய சிவப்பு நிற வஸ்திரம், துவரை தானம் செய்து பயனடையலாம். திருச்செந்தூர் முருகப் பெருமானை வழிபட கடன்கள் குறையும்.

தனுசு லக்னக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்:
dhanusu
தனுசு லக்னத்தில் இருந்து ஆறாம் இடமான ரிஷப ராசிக்கு உரிய சுக்கிரன் வலுப்பெற்று இருந்தால் சுக்கிர பகவானுக்கு வெண்ணிற வஸ்திரம் சாற்றி வழிபடுவது, மொச்சை தானம் செய்வதும் சுக்கிர பகவானுக்கு உரிய கஞ்சனூர் தளத்திற்கு சென்று வருவதும் நல்ல பலன் தரும்.

மகர லக்னக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்:
Magaram rasi
மகர லக்னகாரர்களுக்கு உங்கள் லக்னத்தில் இருந்து ஆறாம் இடத்தில் இருக்கும் மிதுன ராசிக்கு உரிய கிரகமாக புதன் பகவான் உச்சம் பெற்று இருந்தால் கடன் சுமை கூடும். இதற்கு திருவெண்காடு புதன் பகவானை தரிசனம் செய்வதும், பச்சை பயறு, பச்சை நிற வஸ்திரம் தானம் செய்வதும் உயர்ந்த பலன்களைக் கொடுக்கும்.

கும்ப லக்னக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்:
Kumbam Rasi
கும்ப லக்னத்தில் இருந்து ஆறாம் இடமாக இருக்கும் கடக ராசியின் கிரகமாக விளங்கும் சந்திரன் வலுப்பெற்று இருந்தால் திங்களூர் சென்று சந்திரனை வழிபடுவதும், வெண்ணிற வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்வதும், பச்சரிசி தானம் செய்வதும் கடன்களை குறைக்கும்.

மீன லக்னக்காரர்கள் செய்ய வேண்டிய பரிகாரம்:
meenam
மீன லக்னத்தில் இருந்து ஆறாம் இடமாக இருக்கும் சிம்ம ராசியின் அதிபதியாக விளங்கும் சூரிய பகவான் வலுப்பெற்று இருந்தால் கடன் சுமை கூடும். இதற்கு சூரிய பகவானை வழிபடுவது சூரியனார் கோவிலுக்கு செய்வதும் ஆரஞ்சு நிற வஸ்திர தானம் மற்றும் சூரியனுக்கு உரிய கோதுமை தானம் செய்ய கடன்கள் குறையும்.

astrology wheel

இந்த பரிகாரங்களை அந்தந்த லக்னகாரர்கள் தங்களுடைய கைகளாலேயே செய்வது உத்தமம். அப்படி செய்ய முடியாத பட்சத்தில் உங்களுடைய லக்னத்திலிருந்து ஆறாம் இடமாக இருக்கும் ராசியின் கிரகமாக விளங்கும் பகவான்கள் வழுப்பெற்று இருக்கும் சமயத்தில் தொடர்ந்து ஆறு வாரத்திற்கு பசு மாட்டிற்கு அகத்திக் கீரை, பச்சரிசி கலந்த வெல்லம் இவற்றை தானம் கொடுத்து வாருங்கள். பகைவர் தொல்லை, நோய்கள் மற்றும் கடன்கள் போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.

இதையும் படிக்கலாமே
இந்த 4 ராசிக்காரர்களுக்கு மட்டும் மனைவி சொல் தான் மந்திரமாம்? அது உண்மையா? பொய்யா?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.