மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களும் அவசியம் போக வேண்டிய கோவில்கள் எதுவென்று தெரியுமா? ஏன் போக வேண்டும்? என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.

12-rasi-lucky-temples

ஒவ்வொரு ராசிக்குரிய கோவில்களாக 12 ராசிக்காரர்களுக்கும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கோவில்களை ஒருமுறையாவது அந்தந்த ராசிக்காரர்கள் தங்களுடைய ராசிக்கு ஏற்ப சென்று விட்டு வந்தால் வாழ்க்கையில் நிச்சயம் மாற்றங்கள் நிகழும் என்பது ஐதீகம். இந்தந்த ராசிக்காரர்களுக்கு ஏற்படும் மிகப்பெரிய பிரச்சனைகளில் இருந்து மீண்டு வருவதற்கு இக்கோவில்களில் அருள்பாலிக்கும் மூலவர் உறுதுணையாக இருப்பார் என்பது நம்பிக்கை. அவ்வகையில் 12 ராசிக்காரர்களும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ராசிக்குரிய கோவில்கள் பற்றிய தகவல்களைத் தான் இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

மேஷம்
Mesham Rasi
முதலாவதாக இருக்கும் மேஷ ராசிக்காரர்கள் உங்களுக்கு தடைகள் வரும் பொழுது ராமேஸ்வரம் மாவட்டத்தில் இருக்கும் ராமநாதசுவாமி கோவிலுக்கு உங்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது நீங்கள் சென்று வந்தால் நிச்சயம் தடைகள் தகர்ந்து விடும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் முன்னேற கூடிய வாய்ப்புகள் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடும் நிலை இருக்கும். இவ்வாறு இருப்பவர்கள் உங்கள் ராசிப்படி திருவிசநல்லூரில் இருக்கும் சிவயோகிநாதர் திருக்கோவிலுக்கு செல்லுங்கள். அங்கிருக்கும் மூலவரை தரிசனம் செய்து வர குப்பையில் இருந்தாலும் கோபுரத்திற்கு சென்று விடுவீர்கள்.

மிதுனம்
Gemini zodiac signமிதுன ராசிக்காரர்கள் பொறுத்தவரை கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை கிடைக்கின்ற பொழுதே பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதிர்ஷ்டம் ஒரு முறை தான் கதவை தட்டும் என்ற பழமொழிக்கு ஏற்ப உங்களுடைய வாழ்க்கையிலும் அதிர்ஷ்டம் என்பது ஒரு முறைக்கு மேல் வருவதில்லை. உங்கள் ராசிப்படி நீங்கள் பழனி மலையில் இருக்கும் அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை வழிபட்டு வர நிறைய நன்மைகள் உண்டாகும் என்பது நிச்சயம்.

கடகம்
Kadagam Rasiகடக ராசிக்காரர்கள் உங்களுடைய கடின உழைப்பு நிச்சயம் பலன் தருவதாக இருக்கும். வெற்றியை நோக்கிய பயணத்தில் விடாமுயற்சியுடன் செயல்படும் நீங்கள் இறுதிகட்டத்தை நெருங்கும் பொழுது சோர்ந்து விடுகிறீர்கள். 99 முறை முயன்று பார்த்து தோற்று விட்டதாக எண்ணிக் கொண்டிருக்கும் உங்களுக்கு 100வது அடியில் தான் தங்கம் இருக்கிறது என்பது தெரியாமலே போய்விடும். இத்தகையவர்கள் உங்கள் ராசிப்படி திருந்துதேவன்குடியில் அருள் பாலிக்கும் கற்கடேஸ்வரரை வணங்கி வந்தால் நல்லது நடக்கும்.

சிம்மம்
Leo zodiac signசிம்ம ராசிக்காரர்களுக்கு தொடர்ந்து தோல்வியை தழுவிக் கொண்டு இருந்தாலும் வெற்றியின் இலக்கு உங்களுக்கு எப்பொழுதும் மாறுவதில்லை. ஒரே இலக்கை நோக்கிய பயணத்தில் நீங்கள் வெற்றி பெற உங்கள் ராசிப்படி திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீவாஞ்சியம் கோவிலுக்கு சென்று வருவது நன்மைகளை அளிக்கும்.

- Advertisement -

கன்னி
kanniகன்னி ராசிக்காரர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் ஆலயத்திற்கு உங்களுடைய வாழ்க்கையில் ஒருமுறையாவது சென்று வருவது பல பலன்களை தரும். முன்ஜென்ம பாவங்கள் காரணமாக நீங்கள் இந்த ஜென்மத்தில் அனுபவித்துக் கொண்டிருக்கும் மிகப் பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்ள இந்த கோவிலுக்கு சென்று வாருங்கள். நிச்சயம் மாற்றம் நிகழும் என்பதில் சந்தேகமில்லை.

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை நேர்மையாக நடந்து கொள்வதில் மனநிம்மதியும் அதே சமயத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகளையும் சந்திப்பீர்கள். எல்லோரையும் திருப்திப்படுத்துவது என்பது இயலாத காரியம். இதை உணர்ந்து செயல்பட்டால் நீங்கள் வெற்றி அடைவது நிச்சயம். உங்கள் ராசிப்படி திருத்தணியில் அமைந்திருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று வருவது மிகவும் நல்லது.

விருச்சிகம்
Scorpius zodiac signவிருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை அடிக்கடி வாழ்க்கையையே வெறுக்கும் அளவிற்கு பேசிக் கொண்டிருப்பார்கள். ஏதோ இவர்களுக்கு மட்டும் தான் கஷ்டம் என்பது போல் மற்றவர்கள் எல்லாம் சந்தோஷமாக இருப்பது போல் ஒரு நினைப்பு இவர்களுக்கு இருக்கும். அக்கரைக்கு இக்கரை பச்சை என்பது நீங்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கும். உங்கள் ராசிப்படி காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலுக்கு சென்று வர நன்மைகள் நடைபெறும்.

தனுசு
dhanusuதனுசு ராசிக்காரர்களுக்கு மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. உங்களுடைய ராசிப்படி இந்த கோவிலுக்கு ஒரு முறையாவது சென்று வாருங்கள் முன்னேற்றம் நிச்சயமாக இருக்கும். எப்போதும் விதண்டாவாதம் பேசும் நீங்கள் மற்றவர்களின் கருத்துக்கு முன்னுரிமை கொடுப்பது அடுத்த படிக்கு செல்ல உதவி செய்யும் வகையில் அமையும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மகரம்
Magaram rasiமகர ராசிக்காரர்களுக்கு சிதம்பரத்தில் இருக்கும் தில்லை நடராஜர் சுவாமியை தரிசனம் செய்துவர இதுவரை இல்லாத மாற்றங்களை நிச்சயம் சந்திப்பீர்கள். தெரிந்தோ தெரியாமலோ நீங்கள் அந்த கோவிலுக்கு சென்று வந்து இருந்தால் நடராஜரே உங்களை அழைத்து இருப்பதாக அர்த்தம் படுகிறது. எவ்வளவு கஷ்டங்களை சந்தித்திருந்தாலும் இந்த கோவிலுக்கு சென்று வந்தால் கஷ்டங்கள் தீர்ந்து நல்ல வழி பிறக்கும் என்பது ஐதீகம்.

கும்பம்
Kumbam Rasiகும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை தேவிபட்டினத்தில் இருக்கும் திலகேஸ்வரர் கோயில் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்பட்டுள்ளது. பண ரீதியாக பல பிரச்சினைகளை சந்தித்து கொண்டிருக்கும் கும்ப ராசிக்காரர்கள் தவறான வழியை தேர்ந்தெடுக்காமல் நேர்மையான வழியிலேயே மனதை செலுத்துவது மிகவும் நல்லது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் என்கிற கருத்திற்கு ஏற்ப அறவழி போராட்டமும் நிச்சயம் வெல்லும்.

strong>மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு வைத்தீஸ்வரன் கோவில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக சொல்லப்பட்டுள்ளது. மீன ராசிக்காரர்களுக்கு ஏற்ற இறக்கத்துடன் எந்த விஷயத்தையும் கையாள்வதாக இருக்கும். எதுவாக இருந்தாலும் ஒருமுறை அதிகமாகவும் ஒருமுறை குறைவாகவும் தான் உங்களுக்கு கிடைக்கும். இது நன்மையாகவும், தீமையாகவும் கூட இருக்கலாம். இத்தகையவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்த கோவிலுக்கு சென்று வந்தால் நல்லது நடக்கும்.

இதையும் படிக்கலாமே
குரு பெயர்ச்சி துல்லியமான பலன்கள் 2020-2021 – மேஷம்

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.