2019 ல் மீண்டும் மழையால் அழிவு – உறுதி செய்த பஞ்சாங்கம்

Rain

பஞ்சாங்கம் என்பது வானியல் சாஸ்திர அடிப்படையில் ஒரு வருடத்திற்கான பலன்களை தெரிவிக்கும் ஒரு ஜோதிட அறிக்கை என்று கூறலாம். பஞ்சாங்கத்தில் அனைவரும் தெரிந்துகொள்ள விரும்பும் பலனாக இருப்பது அந்த ஆண்டின் மழைப்பொழிவு பற்றியது தான். 2018 ஆம் ஆண்டு தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, கஜா புயல் போன்றவை அந்த ஆண்டிற்கான பஞ்சாங்கத்தில் கூறப்பட்டதை போன்றே நடந்தது. அந்த வகையில் பிறக்கின்ற 2019 ஆம் ஆண்டு பஞ்சாங்க பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

rain

2019 ஆண்டின் சித்திரை மாதத்தில் பிறக்கும் தமிழ் புத்தாண்டு “விகாரி” ஆண்டு எனப்படுகிறது. இந்த விகாரி ஆண்டு தமிழ் புத்தாண்டு பஞ்சாங்க கணிப்பு படி வருகிற 2019 ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் வெயில் வாட்டியெடுக்கும் என்றும், கோடை வெப்ப புழுக்கம் மிக அதிகளவில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் வெப்ப காற்று அதிகம் வீசும். சென்னை நகரவாசிகள் இக்காலங்களில் மிகுந்த சிரமப்படுவார்கள் என்றும் பஞ்சாங்கம் கூறுகிறது.

விகாரி தமிழ் ஆண்டின் அதிபதியாக சனி பகவான் வருவதால் புயல் காற்றுடனான மழை பரவலாக பெய்யும். மக்கள் எதிர்பார்க்கும் நேரத்தில் மழைப்பொழிவு இருக்காது. ஆனால் எதிர்பாரா சமயங்களில் பரவலான மழைபொழிவு இருக்கும். ஆடி, ஆவணி மாதங்களில் பகல், மாலை, இரவு என மூன்று வேளைகளிலும் நல்ல மழைப்பொழிவு இருக்கும். 2018 ஆம் ஆண்டு போலவே இந்த ஆண்டும் தென் மாவட்டங்களில் வெள்ள பெருக்கு ஏற்படும்.

rain

ஐப்பசி பிறக்கும் அக்டோபர் மாதத்தில் தமிழகத்தின் பெரும்பாலான ஆறுகளில் வெள்ள பெருக்கு ஏற்படும் சூழல் இருப்பதாக பஞ்சாங்கம் கூறுகிறது. மேலும் இந்த ஐப்பசி மாதத்தில் புயல்காற்றுடன் கூடிய அடைமழை எங்கும் பெய்யும். சென்னை தாம்பரத்திற்கு கிழக்கே மிகுதியான மழையை கொடுக்கும் புயல் உருவாகும் என்றும், அந்தமான் பகுதிகளில் சூறாவளியுடன் மழை பெய்யும் என்றும் பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

பொதுவாக 2019 ஆண்டு மழைப்பொழிவு அதிகம் ஏற்பட்டு, விளைச்சல் அமோகமாக இருக்கும் என்று விகாரி ஆண்டிற்கான பஞ்சாங்கம் கூறுகிறது. கோவை, மதுரை, திருநெல்வேலி, விருதுநகர், நாகர்கோவில்,கேரளா போன்ற பகுதிகளில் வெள்ள பாதிப்பு ஏற்படும் எனவும், இந்தாண்டு தீபாவளி காலத்தில் மிகுதியான மழைப்பொழிவு இருக்கும் எனவும் பஞ்சாங்கம் கூறுகிறது.

இதையும் படிக்கலாமே:
சூரிய திசை பலன்கள் மற்றும் பரிகாரங்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have 2019 palan in Tamil. It is also called as Vikari varusham panchangam in Tamil or Vikari varudam 2019 in Tamil or Vikari varusha palangal in Tamil or 2019 Tamil varuda palangal in Tamil.