வெள்ளிக்கிழமையில் காலை பூஜையில் ‘5 ரூபாய்’ நாணயத்தை இப்படி வைத்தால் வீட்டில் மகாலட்சுமி நிரந்தரமாக தங்கி விடுவாள் தெரியுமா?

lakshmi-5-rupee-coin

வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் அதிகரிக்க செய்ய தினந்தோறும் செய்ய வேண்டிய பரிகாரங்கள் ஏராளம் உள்ளன. நாம் கடைபிடிக்கும் சிறு சிறு விஷயங்களிலும் கூட மகாலட்சுமியை எளிதாக நம் வீட்டின் பக்கம் அழைத்து வந்து விடலாம். பணம் என்பது நிலையான பொருள் அல்ல. ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரிடம் மாறிக் கொண்டே இருக்கும் ஒரு விஷயமாகும். இது போன்ற தருணங்களில் நம்மிடம் மகாலட்சுமி எப்பொழுதும் இருப்பாள் என்று கூறி விட முடியாது. எனவே லக்ஷ்மியை நம் வீட்டில் நிரந்தரமாக தங்க செய்ய என்ன செய்யலாம்? என்று இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

Sudarshana vishnu

நாம் வெள்ளிக் கிழமையில் செய்யும் பூஜையில் இதனை செய்ய வேண்டும். எந்த ஒரு வீட்டில் காலையில் எழுந்ததும் சுப்ரபாதம் போட்டு ஒலிக்க விடுகிறார்களோ! அந்த வீட்டில் செல்வ வளம் பெருகும் என்பது நம்பிக்கை. அதனால் தான் கோவில்களில் முதல் பாடலாக சுப்ரபாதம் ஒலிக்கப்பட செய்கிறது.

தினமும் அபிராமி அந்தாதி பாடல்கள், விஷ்ணு சஹஸ்ரநாமம் போன்றவற்றை ஒலிக்க விட்டால் அந்த வீட்டில் அதிர்வலைகள் நல்லவையாக மாறும். தீய சக்திகள், துர் தேவதைகள், சூனியம் போன்ற கெட்ட சக்திகளை வெளியில் துரத்தி விடும் ஆற்றல் இந்த பாடல்களுக்கு உண்டு. இதனை நாம் உச்சரிக்க முடியாவிட்டாலும், வீட்டில் ஆடியோ வடிவில் கேட்க விடுவது மிகவும் நல்லது.

vetrilai pakku

வெள்ளிக் கிழமையில் காலை, மாலை இருவேளையும் விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும். காலையில் செய்யப்படும் பூஜையில் இந்த பரிகாரத்தை செய்வதற்கு தேவையான பொருட்களை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். பரிகாரம் செய்ய நமக்கு தேவையான பொருட்கள், ஐந்து வெற்றிலைகள், கொட்டைப்பாக்கு என்று சொல்லப்படும் பாக்கு ஐந்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதே போல் ஐந்து ரூபாய் நாணயம் வைத்துக் கொள்ள வேண்டும். பூஜைக்கு தேவையான 5 ரூபாய் நாணயங்களை முன்கூட்டியே நாம் சேகரித்து வைத்துக் கொண்டால் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த பரிகாரத்தை செய்வதற்கு வசதியாக இருக்கும்.

- Advertisement -

வெற்றிலை, பாக்கு என்பது தாம்பூலம் கொடுக்க பயன்படுத்தும் பொருட்களாகும். இப்பொருட்களை மங்களப் பொருட்கள ஆன்மீக சாஸ்திரமும் எடுத்துரைக்கிறது. கலைகளை கற்கும் பொழுது குருவிற்கு தட்சிணை கொடுப்பது போல நம் வாழ்வு வளமாக ஒவ்வொரு வெள்ளிக் கிழமையிலும் இறைவனிடத்தில் தட்சிணை கொடுப்பது நல்ல ஒரு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.

5-rupee-coin

காலையும் சுத்தம் செய்து வைத்த பூஜை அறையில் வழிபாடு செய்யும் பொழுது ஒரு சிறிய தாம்பூல தட்டில் நீங்கள் எடுத்து வைத்துள்ள 5 வெற்றிலைகளை சுத்தம் செய்து காம்பு நீக்கி வைத்துக் கொள்ள வேண்டும். வெற்றிலையின் காம்பில் மூதேவி வாசம் செய்வதாக ஐதீகம் உள்ளது. எனவே பரிகாரம் செய்பவர்கள் காம்பை நீக்கி விடுவது மிகவும் நல்லது. வெற்றிலையின் மேல் எடுத்து வைத்துள்ள 5 கொட்டை பாக்கு பக்குகளை வைக்க வேண்டும். அதற்கு தட்சணையாக ஐந்து ரூபாய் நாணயத்தை சமர்ப்பணம் செய்ய வேண்டும்.

kamatchi-vilakku

பிறகு அன்றாட பூஜையில் செய்வது போல் தூப, தீப ஆராதனையை காண்பிக்க வேண்டும். இதே போல ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் செய்ய வேண்டும். முதல் வெள்ளிக்கிழமையில் நீங்கள் செய்தவற்றை அடுத்த வெள்ளிக்கிழமையில் செய்யும் பொழுது புதிதாக மாற்றி விட்டு பழையதை ஒரு வெள்ளைத் தாளில் மடித்து அப்படியே கொண்டு போய் அருகில் இருக்கும் கோவிலில் உள்ள உண்டியலில் சேர்த்து விட வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து செய்து வர மகாலட்சுமி உடைய அருள் பரிபூரணமாக உங்களுக்கு கிடைத்துக் கொண்டே இருக்கும்.