600 வருடங்களாக பூமியில் புதைந்திருந்த பாஷாண லிங்கம் வெளிப்பட்ட அதிசயம் – வீடியோ

Sivan lingam
- Advertisement -

வீடியோ கீழே உள்ளது
நாடி ஜோதிடம் பற்றி நம்மில் பலர் கேள்விப்பட்டிருப்போம். கந்த நாடி மூலம் 600 வருடங்களாக பூமியில் புதைந்திருந்த பாஷாண லிங்கம் ஒன்றை கண்டறிந்து அதை வெளியில் எடுத்து பூஜைகள் நடக்கின்றனர். இந்த நிகழ்வுக்கு பின்னால் 600 வருட வரலாறு ஒன்றும் உள்ளது. வாருங்கள் இந்த லிங்கம் பற்றிய சுவாரஸ்யங்களை கீழே வீடியோவில் பார்ப்போம்.

- Advertisement -

2018 தமிழ் புத்தாண்டு ராசி பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

வேலூர் மாவட்டத்தில் உள்ள திமிர என்கிற ஊரில் தான் இந்த பாஷாண லிங்கம் உள்ளது. இந்த பாஷாண லிங்கமானது 600 வருடங்களுக்கு முன்பு இந்த பகுதியில் வாழ்ந்த ஒரு ராஜ வைத்தியரால் பூமியில் புதைத்து வைக்கப்பட்டது. அந்த ராஜ வைத்தியர் 600 வருடங்களுக்கு பிறகு மறு பிறவி எடுத்து அந்த லிங்கத்தை புதைத்த இடத்தில் இருந்து மீண்டு தோண்டி எடுத்து பிரதிஷட்டை செய்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்த கோவிலை நிர்வகித்து வருபவர் திரு ராதாகிருஷ்ணன். இவர் ஒரு தீவிர ஐயப்ப பக்தர். ஆகையால் இவர் ஐயப்பனுக்கு ஒரு கோவில் எழுப்ப வேண்டும் என்று எண்ணியுள்ளார். எண்ணியதோடு நிற்காமல் அதற்கான வேலையிலும் இறங்கி உள்ளார். ஆனால் கோவில் கட்டும் பணியில் அவரும் பெரும் தடைகள் பல வந்துள்ளது. இதனால் அவர் கந்த நாடியை பார்த்துள்ளார். அதில் அவருடைய பூர்வ ஜென்ம ரகசியங்கள் பல வெளிப்பட்டுள்ளன. அதோடு பாஷாண லிங்கம் இருக்கும் இடம், அதை எப்படி மீண்டும் பிரதிஷ்டை செய்ய வேண்டும் போன்ற பல தகவல்கள் இருந்துள்ளன. அதை பின்பற்றி அந்த பாஷாண லிங்கம் மீண்டும் இங்கு பிரதிஷட்டை செய்யப்பட்டுள்ளது.

- Advertisement -