அம்மன் அருள் கிடைக்க, ஆடி மாதம் அம்மனுக்கு விசேஷமாக வைக்கும் பாயாசம் எப்படி செய்வது?

- Advertisement -

ஆடி மாதம் என்றாலே தனி சிறப்பு வாய்ந்தது தான். வீடாக இருந்தாலும் சரி, கோவிலாக இருந்தாலும் சரி, ஆடி மாதத்தில் மட்டும் கோலாகலமாக இருக்கும். ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி மற்றும் நல்ல நாட்களிலெல்லாம் வீட்டில் அம்மனுக்கு விசேஷமான பூஜைகள் செய்வது உண்டு. அப்படி ஆடி மாதத்தில் ஒவ்வொரு செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமையும் விசேஷமாக பாயாசம் நிவேதனமாக வைப்போம். இந்த பாயாசம் மற்ற பாயாசங்களை விட சற்று வித்தியாசமானது. ஆடி மாதம் அம்மன் அருள் பெற இந்த பாயசத்தை நீங்களும் செய்து பலனடையுங்கள். அம்மனுக்கு விசேஷமான இந்த பாயாசத்தை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

thengai-payasam

பாயாசம் செய்ய தேவையான பொருட்கள்:
சிறுபருப்பு – ஒரு கப், பச்சரிசி – ஒரு கப், வெல்லம் – ஒரு கப், முந்திரிப் பருப்பு – 10, ஏலக்காய் – 4, நெய் – தேவையான அளவு.

- Advertisement -

பாயாசம் செய்முறை விளக்கம்:
பாயாசம் செய்வதற்கு முதலில் சிறு பருப்பை எடுத்துக் கொண்டு வெறும் கடாயில் பொன்னிறமாக வறுத்து எடுக்க வேண்டும். அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் 2 கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வறுத்து வைத்த சிறு பருப்பை சேர்க்கவும். சிறு பருப்பு நன்றாக வேகவிடவும்.

thengai-payasam1

இப்போது மிக்ஸி ஜாரில் தேங்காய், ஏலக்காய், பச்சரிசி இவற்றை சேர்த்து நன்றாக நைசாக அரைத்துக் கொள்ள வேண்டும். சிறு பருப்பு வெந்து வந்ததும் இந்த கலவையை அதனுடன் சேர்த்துக் கொதிக்க விட வேண்டும். மறுபுறம் தண்ணீர் ஊற்றி வெல்லம் சேர்த்து பாகு காய்ச்சவும். வெல்லத்தை எப்பொழுதும் அப்படியே போடுவதை விட பாகு காய்ச்சி ஊற்றுவது தான் நல்லது. ஏனெனில் அதில் கண்ணுக்கு தெரியாத மண் துகள்கள் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. பாகு காய்ச்சி வடிகட்டி ஊற்றும் பொழுது அதிலிருக்கும் மண் துகள்கள், கசடுகள் போன்றவை அகற்றப்படும். ஒரு கப் வெல்லத்திற்கு 2 கப் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வெல்லம் முழுவதும் கரைந்து வந்ததும் வடிகட்டி சிறு பருப்புடன் சேர்த்துக் கொள்ளுங்கள். நெய்யில் வதக்கிய முந்திரிப் பருப்புகளையும் சேர்க்கவும். பாயாசத்தில் நாம் நெய் சேர்க்கப் போவதில்லை. அதனால் முந்திரிப்பருப்பை வறுக்கும் பொழுதே உங்களுக்கு தேவையான அளவிற்கு அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள்.

thengai-payasam2

பின்னர் ஒரு ஐந்து நிமிடம் கொதித்ததும் இறக்கி விடலாம். எப்பொழுதுமே ஒரு இனிப்பு வகை செய்யும் பொழுது நாம் ஒரு சிட்டிகை அளவாவது உப்பு சேர்த்துக் கொள்வோம் அல்லவா? ஆனால் அம்மனுக்கு அல்லது பூஜைகளுக்கு தயார் செய்யும் நைவேத்தியங்களில் நிச்சயம் உப்பு சேர்க்கக் கூடாது என்பதை கவனமாக நினைவில் கொள்ளுங்கள்.

- Advertisement -

thengai-payasam3

இப்போது சூடான சுவையான தேங்காய் அரிசிபாயாசம் தயாராகி விடும். இந்த பாயாசத்தை செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் ஆடிமாதத்தில் அம்மனுக்கு நைவேத்தியமாக படைத்து வழிபடுவதன் மூலம் நமக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்கப் பெறும் என்பது ஐதீகம். அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் உகந்த இந்த தேங்காய் அரிசி பாயாசத்தை நீங்களும் உங்களது வீட்டில் செய்து அம்மன் அருள் பெற்றுக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
மொறு மொறு கடலைப்பருப்பு மசாலா வறுவல்! வீட்டிலேயே சுலபமாக செய்வது எப்படி?

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -