ஆவியை நைவேத்தியம் செய்யும் வினோத கோவில் பற்றி தெரியுமா ?

vinayagar3-1

பொதுவாக ஒவ்வொரு கோவிலிலும் அர்ச்சனை அபிஷேகதோடு பல வகையான பழங்களையும் உணவையும் கடவுளுக்கு நைவேத்தியமாக படைப்பது உண்டு. ஆனால் ஒரு கோவிலில் இதை எல்லாம் தாண்டி ஆவியை நைவேத்தியமாக படைக்கின்றனர். வாருங்கள் இது குறித்து விரிவாக பார்ப்போம்.

Aavidiyar temple

புதுக்கோட்டையில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது “ஆவுடையார் கோவிலில்”. கிட்டத்தட்ட 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாறூர் சிறப்பு மிக்க இந்த கோவிலில் அன்னத்தின் ஆவியே நைவேத்தியமாக படைக்கப்படுகிறது.

பெரிய பாத்திரம் ஒன்றில் சாதத்தை சுட சுட சமைத்து பின் அந்த சாதத்தை மூலஸ்தானத்தில் உள்ள அமுது மண்டபத்தில் இருக்கும் ஒரு பெரிய திட்டுக்கல்
மீது கொட்டிவிட்டு கதவை மூடிவிடுவது வழக்கம். அந்த அன்னத்தில் இருந்து வரும் ஆவியே நைவேத்தியமாக கருதப்படுவதாக கூறப்படுகிறது. சுமார் 3 அடி உயரம் 7 அடி நீளம் 6 அடி அகலம் கொண்ட இந்த திட்டுக்கல் மீதே 6 கால பூசைகளுக்கும் உரிய அன்னமும் கொட்டப்படுகிறது.

Aavidiyar temple

பொதுவாக மற்ற கோவில்களில் பச்சரிசி கொண்டே அன்னம் சமைத்து இறைவனுக்கு படைப்பது வழக்கம். ஆனால் இங்கு மட்டுமே புழுங்கல் அரிசி கொண்டு அன்னம் சமைத்து இறைவனுக்கு படைக்கப்படுகிறது. பல விசித்திர முறைகளை கொண்ட இந்த கோவிலை பூதம்தான் காட்டியது என்று அந்த பகுதியில் வசிக்கும் சிலர் கூறுவதுண்டு.

- Advertisement -

இங்குள்ள இறைவனுக்கு தினமும் 6 கால பூசைக்கு அமுதம் படைப்பதால் அன்னத்தை சமைக்க பயன்படும் அடுப்பானது ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக அணைந்ததே இல்லை என்று கூறப்படுகிறது.

Aavidiyar temple

இதையும் படிக்கலாமே:
ராமர் பாலத்தில் உள்ள கற்கள் இன்றுவரை மிதப்பதற்கான காரணம் தெரியுமா ?

சிதம்பரம் நடராஜர் கோவிலின் மேற்கூரையில் 21,600 தங்க ஓடுகள் வேயப்பட்டுள்ளதை போல ஆவுடையார் கோவிலின் கருவறை விதானத்தில் 21,600 செப்பு ஆணிகள் அடிக்கப்பட்டுள்ளன. இது ஒரு நாளைக்கு ஒரு மனிதன் 21,600 மூச்சிக்கள் விடுவதை குறிப்பதாக உள்ளது. இப்படி பல சிறப்புகள் மிக்க இந்த கோயிலிற்கு சென்று இறைவனின் அருளை பெற்று இன்புற்று வாழ்வோம்.