வேர்கடலைக்குள்ள இதெல்லாம் கூடவா வெச்சு கடத்துவாங்க? மிரண்டு போன அதிகாரிகள்.

delhi-airport1

சில சுவாரசியமான சம்பவங்களை எல்லாம் நாம் திரைப்படங்களில் தான் கண்டிருப்போம். ஆனால் அதைவிட சுவாரசியமான சம்பவங்கள் எல்லாம் நிஜவாழ்க்கையில் நடப்பதை பார்த்தால் ஆச்சரியப்பட வைக்கிறது. இந்த சம்பவங்களைப் பார்த்துதான் சினிமா படங்கள் எடுக்கப்படுகிறதா? அல்லது சினிமாப் படங்களைப் பார்த்து இப்படிப்பட்ட சுவாரசியமான சம்பவங்கள் நடைபெறுகிறதா? என்று கேட்டால்! அந்த கேள்விக்கு பதிலே இல்லை. எது எப்படியாக இருந்தாலும் இப்படிப்பட்ட குறுக்குவழிகளை நேர்மையான முறையில் பயன்படுத்தினால் நம் நாடு எங்கோ சென்றிருக்கும். டெல்லி விமான நிலையத்தில் நேற்றையதினம் வெளிநாட்டிலிருந்து வித்தியாசமான முறையில், வெளிநாட்டு பணத்தை கடத்திக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

hiding-currency-in-peanut2

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தான் இந்த பரபரப்பு சம்பவமானது நடந்துள்ளது. வெளிநாட்டிலிருந்து டெல்லிக்கு வந்த ஒரு நபரின் பையை சோதனையாளர்கள் சோதனை செய்து உள்ளார்கள். சோதனையின்போது அந்த பயணி கொண்டுவந்த உணவுப் பொருட்களில் ஒன்றான வேர்க்கடலைக்குள் வெளிநாட்டுப் பணத்தை பதுக்கி கொண்டுவந்ததை கண்டுபிடித்துள்ளார்கள்.

வேர்க்கடலையை இரண்டாக உடைத்து, உள்ளே இருக்கும் கடலைகளை வெளியே எடுத்து விட்டு அதனுள் வெளிநாட்டு ரூபாய்களை சுருட்டி வைத்து, மீண்டும் முழு வேர்க்கடலை போன்று சித்தரித்து நூதனமான முறையில் இந்த கடத்தல் சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த கடத்தல் சம்பவம் தவறாக இருந்தாலும் இந்த சம்பவம் சுவாரசியமானது தான்.

hiding-currency-in-peanut0

இப்படிப்பட்ட ஐடியாக்களை நம் மக்கள் ஏன் நல்ல விஷயத்திற்காக பயன்படுத்தக் கூடாது? எது எப்படியாக இருந்தாலும் திருட்டு திருட்டு தான். அதில் மாற்றமில்லை. அந்த நபர் கடத்திக் கொண்டு வந்த வெளிநாட்டுப் பணத்தின் இந்திய மதிப்பானது ரூபாய் 45 லட்சம் என்று சோதனையாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை காணும்போது ஒரு நிமிஷம் அயன் படம் நினைவுக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

English Overview:
Here we have Foreign currency seized at delhi airport. Foreign currency seized. Currency smuggling in delhi airport. Foreign currency seized at airport