நீங்கள் மனதில் வைராக்கியமாக நினைக்கும் சில காரியங்கள் நிறைவேற செய்ய வேண்டிய பரிகாரம் என்ன? அனைவரும் கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்!

pradakshinam-temple

ஒவ்வொருவருடைய மனதிலும் ஒவ்வொரு விஷயங்கள் நிறைவேற வேண்டும் என்கிற வேண்டுதல் இருக்கும். அதிலும் குறிப்பாக சிலர் மிகவும் வைராக்கியத்துடன் இந்த விஷயத்தை நடத்தி காட்டுவோம்! இந்த செயலை செய்து காட்டுவேன்! என்று உறுதியாக இருப்பார்கள். யாருடைய துணையும் இல்லாமல் நானே அதைச் செய்து முடிப்பேன் என்கிற வைராக்கியத்துடன் இருக்கும் செயல்களுக்கு இறைவன் கட்டாயம் துணை புரிவார்! அதற்கு நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

sad-crying3

நம்பிய சிலர் கைவிட்டு விட்டு செல்லும் பொழுது நமக்குள் புது உத்வேகம் பிறக்கும். அவர்கள் முன்னிலையில் சிறப்பாக வாழ வேண்டும் என்கிற வைராக்கியம் இருக்கும். எந்த நேரத்திலும் யாரும் நம்மை பார்த்துக் கொள்வார்கள் என்கிற அலட்சியம் இருக்கக்கூடாது. நமக்கு நாம் மட்டுமே இறுதி வரை இருப்போம் என்கிற வைராக்கியம் இருக்க வேண்டும். பெற்றோர்களுக்கு பிள்ளைகள் உடைய வளர்ச்சியில் வைராக்கியம் இருக்கும். நன்கு படிக்க வைப்பேன், நல்ல இடத்தில் திருமணம் முடித்து வைப்பேன், நல்ல நிலைக்கு கொண்டு வருவேன் என்கிற வைராக்கியம் பெற்றோர்களுக்கு பிள்ளைகள் மீது இருக்கும். சிறுவயதிலிருந்தே கஷ்டப்பட்டு வளர்த்த பெற்றோர்களுக்கு, பெரிதாகி நான் அவர்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற வைராக்கியம் ஒவ்வொரு பிள்ளைகளுக்கு இருக்கும்.

தொழில் நஷ்டம், வியாபார நஷ்டம் போன்றவற்றை சந்திப்பவர்களுக்கு மீண்டும் மீண்டும் தளர்ந்து விடாமல் ஏதாவது செய்து எப்படியாவது முன்னேற வேண்டும் என்கிற வைராக்கியம் இருக்கும். உத்தியோகத்தில் மனதிற்கு பிடிக்காத வேலையை செய்து கொண்டிருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்கிற வைராக்கியம் இருக்கும். அல்லது புதிதாக சுய தொழிலை செய்ய வேண்டும் என்கிற வைராக்கியம் இருக்கும்.

sad

இதுவரை மற்றவர்களின் கையை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு தாமே சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்கிற வைராக்கியம் இருக்கும். தோல்வியிலும் துவண்டு போகாமல் எப்படியும் நாமும் முன்னேற வேண்டும் என்கிற வைராக்கியம் ஒரு சிலருக்கு இருக்கும். பல இடங்களில், பல பேர் முன்னிலையில் அவமானப் பட்டவர்களுக்கு வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்கிற வைராக்கியம் இருக்கும். இப்படி வைராக்கியம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக நிச்சயமாக இருக்கும். அப்படி வைராக்கியத்துடன் நீங்கள் ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்று நினைக்கும் பொழுது இந்த எளிய பரிகாரத்தை செய்தால் நூறு மடங்கு பலன்களை பெறலாம்.

தன்னைத் தானே சுற்றிக் கொண்டு பிரகாரத்தை வலம் வருவது ‘ஆத்ம பிரதக்ஷிணம்’ என்பார்கள். அங்கங்களை பூமியில் படும்படி பிரகாரத்தை சுற்றிலும் உருள்வது ‘அங்கப் பிரதட்சணம்’ என்பார்கள். இந்த வகையில் கால்களை அடி மேல் அடி வைத்து பிரகாரத்தை சுற்றி வலம் வருவது ‘அடிப்பிரதட்சணம்’ என்பார்கள். இதில் அடிப்பிரதட்சணம் மிகவும் விசேஷமானது. அடி மேல் அடி வைத்து நடக்கும் பொழுது உடலும் மனமும் ஒருமுகப்படும். உங்களுடைய இருதயத்தின் ஒலியை நீங்களே நன்றாக உணரலாம். முழு கவனமும் இறை சிந்தனையில் ஆட்கொள்ளும்.

pradakshinam

இறைவனைத் தவிர வேறு ஒரு சிந்தனை அடி பிரதட்சிணம் செய்யும் பொழுது நமக்கு ஏற்படுவதில்லை. 1, 3, 9, 11, 21, 48, 108, 1008 ஆகிய எண்ணிக்கையில் அடிப் பிரதட்சணம் செய்வது உத்தமம். கோவிலை சுற்றிலும் அம்பாளை நினைத்து பிரகாரத்தை அடிமேல் அடி வைத்து வலம் வந்து வணங்குபவர்களுக்கு எத்தகைய வைராக்கியமான வேண்டுதல்கள் இருந்தாலும் அது விரைவாக நிறைவேறும் என்கிறது சாஸ்திரம். எனவே வைராக்கியத்துடன் வாழ நினைப்பவர்கள் அடிப்பிரதட்சணம் வாரம் ஒருமுறை கோவில்களில் செய்வது நல்ல பலன் கொடுக்கும்.