பாம்பை கழுத்தில் சூடும் அகோரி வீடியோ

agori cobra
- Advertisement -

இந்து மதத்தை பொறுத்தவரை பாம்புகள் தெய்வமாக வணங்கப்படுகிறது. அதே போல இந்து மாதத்தில் உள்ள அகோரிகள் பலர் சிவ வழிபாட்டில் ஈடுபட்டு தங்களை ருத்ரனின் வடிவம் என்று கூறிக்கொள்வதும் வழக்கம். அந்த வகையில் அகோரி ஒருவர் சிவனை போல தன்னுடைய கழுத்தில் பாம்பை சூடிக்கொண்டு பக்தர்களை காண்கிறார். இதோ அதன் வீடியோ.

- Advertisement -

தகவலை வாட்சாப்பில் பகிர கிளிக் செய்யவும்:
அகோரிகள் பலர் கங்கை கரையோர பகுதிகளிலே வாழ்கின்றனர். இவர்களின் வாழ்க்கை முறை என்பது சாதாரண மனிதர்களை போல இருப்பதில்லை. மாறாக இவர்களுக்கென ஒரு வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டு அதன் படி வாழ்கின்றனர். கங்கையில் மிதந்து வரும் பிணங்களை தின்னும் பழக்கம் இன்றளவும் இவர்களிடம் உள்ளதாக கூறப்படுகிறது.

இறந்தவர்களின் உடலில் இருந்து எடுக்கப்படும் கபால ஓட்டிலேயே இவர்கள் உணவருந்துவதை வழக்கமாக வைத்துள்ளனர். இவர்களில் பலர் ஆடைகள் எதுவும் அணியாமல் இருக்கும் வழக்கத்தை வைத்துள்ளனர். அதோடு மண்டை ஓட்டு மாலை அணிவது கையில் ஒரு தடி வைத்திருப்பது போன்ற சில அடையாளங்கள் மூல இவர்களை எளிதில் அறியலாம்.

காசி நகரில் அகோரிகளின் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. இவர்களின் வினோதமான வாழ்கை முறைக்கு முன்பு ஒரு புராண காலத்து வரலாறு இருப்பதாகவும் இவர்கள் கூறுகின்றனர். இவர்களுக்கு தீயவர்களை கண்டறியும் சக்தி இருப்பதாகவும் நம்பப்படுகிறது.

- Advertisement -