நாளை பொங்கல் தினத்தன்று இதை செய்து சாப்பிடுங்கள்

akaravadaisal
- Advertisement -

“அக்காரவடிசல்” என்பது திருச்சியை பூர்விகமாக கொண்ட ஒரு பொங்கல் வகை. மார்கழி மாதத்தின் கடைசி சில தினங்களில் அனைத்து வைணவ கோயில்களிலும் “ஆண்டாள்” நாச்சியாரை வழிபடும் கூடாரை வல்லி தினத்தன்று அக்கார வடிசில் எனப்படும் பால் கொண்டு செய்யப்படும் சர்க்கரை பொங்கல் செய்யப்பட்டு பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படும்.சாதாரணமாக பொங்கல் செய்வது பற்றி நமக்கு தெரியும். அப்படி என்ன இந்த அக்காரவடிசல் பொங்கலில் சிறப்பு உள்ளது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.

akara_1

அக்காரவடிசல் செய்ய தேவையான பொருட்கள்:

- Advertisement -

பச்சரிசி – 1 டம்ளர்
பாசிப்பருப்பு – 1/4 டம்ளர்
கேசரி பவுடர் – ஒரு சிட்டிகை
பால் – 1/2 லிட்டர்
முந்திரி – 8
காய்ந்த திராட்சை – 8
சக்கரை – 2 டம்ளர்
நெய் – 50 மிலி
ஏலக்காய் பொடி – 2 சிட்டிகை

அக்காரவடிசல் செய்முறை :

சூடான வானலில் நெய் ஊற்றி பச்சரிசி மற்றும் பாசிபருப்பினையும் போட்டு நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ளவும். பிறகு, அதனை குக்கரில் போட்டு 3 முதல் 6 விசில் வரை விடவும். பிறகு அதனை மத்தினை கொண்டு நன்றாக கடைந்து கொள்ளவேண்டும்.

- Advertisement -

akara_2

பிறகு கடைந்த பொங்கலில் பால் மற்றும் கேசரி பவுடரினை சேர்க்கவும். இதையும் நன்றாக மிதமான தீயில் கலக்கவும். அதன்பிறகு அதில் ஏலக்காய் பொடி சேர்த்து அதனுடன் நெய் சேர்த்து நன்றாக கிண்டவும்.

பிறகு அதனுடன் சக்கரை சேர்த்து நன்றாக கலக்கவும். அதன்பிறகு முந்திரியை நெய் கொண்டு வறுத்து அதில் சேர்க்கவேண்டும். கூடவே, காய்ந்த திராச்சை சேர்த்தால் அக்காரவடிசல் தயார்.

- Advertisement -

akara_3

சமைக்க ஆகும் நேரம் – 30 நிமிடங்கள்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 3

இதையும் படிக்கலாமே:
பிராக்கோலி பொரியல் செய்யும் முறை

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.akaravadaisal

Here we have Akkaravadisal recipe in Tamil. It is also called as Akkaravadisal seimurai or Akkaravadisal seivathu eppadi in Tamil or Akkaravadisal preparation in Tamil.

- Advertisement -