அமாவாசை, திதி அல்லாத மற்ற நாட்களில் காகத்திற்கு உணவிடுவது நல்லதா? அதனால் ஏதேனும் பலன் உண்டா?

- Advertisement -

இந்து சமைய நம்பிக்கை படி பொதுவாக அமாவாசை மற்றும் திதி நாட்களில் நாம் காகத்திற்கு உணவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளோம். இந்த பழக்கத்திற்கான விளக்கம் என்ன? மற்ற சாதாரண நாட்களில் காகத்திற்கு உணவிடலாமா? அப்படி உணவிட்டால் அதனால் ஏற்படும் பலன் என்ன? வீட்டின் அருகில் காகம் இல்லாத சமயத்தில் நாம் என்ன செய்யலாம்? காகத்திற்கு மட்டும் அப்படி என்ன விசேஷம் உள்ளது? இப்படி பல தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

water-for-crow

காகம் என்பது சனீஸ்வர பகவானின் வாகனம் என்பது நாம் அறிந்ததே. அதே சமயம் காகமானது எமலோகத்தின் வாயிலில் வீற்றிருந்து எமதூதுவனாக செயல்படும் ஒரு பறவை என்று நமது சாஸ்திரம் கூறுகிறது. அப்படியான காகத்திற்கு அமாவாசை மற்றும் திதி நாட்களில் உணவு வைப்பதன் மூலம் அந்த உணவானது நமது முன்னோர்களை சென்றடைகிறது என்பது நம்பிக்கை.

- Advertisement -

ஒரு சிலர் காகத்திற்கு தினமும் உணவிடுவது வழக்கம். அப்படி உணவிடுவதால் ஏதேனும் பலன் உண்டா என்றால் நிச்சயம் உண்டு. நாம் காகத்திற்கு உணவிட்டு அது அந்த உணவை உண்டபின் நமக்குள் ஒரு தன்னிறைவும் மகிழ்ச்சியும் ஏற்படும். நமக்குள் ஏற்படும் அந்த தன்னிறைவானது நம்மை மேலும் மேலும் சிறப்போடு இயங்கச்செய்யும். அதுவே ஒரு மிகசிறந்த பலன் தானே.

Crow

சரி, ஒருவேளை நாம் வசிக்கும் இடத்தில் காகமே இல்லை என்றால் என்ன செய்வது என்ற கவலை சிலருக்கு ஏற்படும். கவலை வேண்டாம். காகம் இல்லாத சமயத்தில் மற்ற விலங்குகளுக்கும் உணவிடலாம். எந்த ஒரு விலங்கிற்க்கோ பறவைக்கோ உணவிட்டாலும் நமக்குள் நிச்சயம் ஒரு மகிழ்ச்சி உருவாகத்தான் செய்யும். அதோடு எந்த ஒரு பலனையும் எதிர்பாராமல் உணவிடுவதே சிறந்தது. அப்படி உணவிடுவதன் மூலம் இறைவனின் அருள் நிச்சயம் நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

மற்ற பறவைகளுக்கு இல்லாத ஒரு விசேஷம் காகத்திற்கு உண்டு அது என்னவென்றால் காகம் என்பது எமதர்ம ராஜாவுக்கும் சனீஸ்வரனுக்கு உரியதாக இருக்கிறது.எமதர்ம ராஜா காகத்தின் மீது அமர்ந்து பூலோகத்தை சுற்றி பார்ப்பார் என்பது நம்பிகை. அப்படி இருக்கையில் காகத்திற்கு உணவிடுவதன் மூலம் எமன் மகிழ்வார் என்று கருதப்படுகிறது.

crow-sani

எமதர்ம ராஜாவும் சனீஸ்வரனுக்கு சகோதரர்கள். ஆகையால் காக்கைக்கு உணவிடுவதன் மூலம் இருவரின் ஆசியையும் நம்மால் பெற முடியும் என்பது நம்பிக்கை.

- Advertisement -