கண் திறந்த அம்மன் சிலை – சென்னையில் பரபரப்பு

Amman
- Advertisement -

விக்ரக ஆராதனை என்பது இந்து மதத்தில் பின்பற்றப்படும் ஒரு வழிபாட்டு முறையாகும். ஞானிகள், யோகிகள் போல் அல்லாது ஆன்மீகத்தின் ஆரம்ப நிலையில் நிலையில் உள்ள பெரும்பான்மையான மக்களை இறையனுபவம் பெற செய்யும் முறையாக விக்ரக ஆராதனை எனப்படும் சிலை வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. நமது நாட்டில் இருக்கும் கோயில்களில் பல ஆகம விதிப்படி செய்யப்பட்ட இறைவனின் விக்ரகங்களும், சில கோயில்களில் சுயம்புவாக தோன்றிய சிலைகளும் இருக்கின்றன. இத்தகைய சிலைகளில் ஏற்படும் சில மாறுதல்கள் தெய்வீக நிகழ்வுகளாகவே கருதப்படுகின்றன. அப்படி சமீபத்தில் பக்தர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ஒரு தெய்வச்சிலை பற்றிய காணொளி தான் இது.

- Advertisement -

புத்தாண்டு ராசி பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்

வட சென்னை பகுதியான திருவொற்றியூர் ஆன்மீக சிறப்புக்கள் கொண்ட மிகப்பழமை வாய்ந்த ஒரு ஊராகும். அருட்பிரகாச வள்ளலாருக்கு அவரது அண்ணியார் வடிவில் வந்து உணவளித்த வடிவுடையம்மன் இந்த திருவொற்றியூரில் தான் கோயில் வீற்றிருக்கிறாள். பட்டினத்தார் சித்தர் ஜீவ சமாதியடைந்ததும் இந்த புனிதமான திருவொற்றியூர் பகுதியில் தான். திருவொற்றியூரில் இருக்கும் பேசின் சாலையில் இருக்கும் திருவுடை அம்மன் கோயில் மிகவும் பழமை வாய்ந்தது.

- Advertisement -

வாரத்தில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் மற்றும் விஷேஷ தினங்களில் அதிகம் பக்தர்கள் வந்து வழிபடும் ஒரு கோயிலாக இந்த திருவுடை அம்மன் கோயில் இருக்கிறது. கடந்த கார்த்திகை மாதத்தின் இறுதி வெள்ளிக்கிழமை தினத்தன்று இக்கோயிலில் இருக்கும் திருவுடையம்மனின் சிலை கண் திறந்த நிலையில் இருக்கும் செய்தி வேகமாக பரவியது.

இந்த செய்தியை அறிந்த அப்பகுதியில் வசிக்கும் மக்கள் ஏராளமானோர் உடனே திருவுடையம்மன் கோயிலுக்கு சென்று அம்மனின் கண் திறந்திருக்கும் தரிசனத்தை காண அக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் கூடி அம்மனின் தரிசனத்தை பெற்றனர். வெள்ளிக்கிழமை என்பதே அம்மன் போன்ற பெண் தெய்வ வழிபாட்டிற்கு மிகவும் உகந்த தினமாகும். அதிலும் கார்த்திகை மாதத்தின் இறுதியான வெள்ளிக்கிழமையன்று இந்நிகழ்வு நடைபெற்றது நன்மையான விடயமாகவே பக்தர்கள் எடுத்துக்கொள்கிறார்கள்.

- Advertisement -