மூடி இருக்கும் அம்மன் கோவிலில் 700 வருடங்களாக கெடாமல் இருக்கும் நெய் – வீடியோ

Amman temple
- Advertisement -

கோவில் என்றாலே கருவறை தான் பக்தர்களை ஈர்க்கும் ஒரு இடமாக இருக்கும். ஆனால் ஒரு காமாட்சி அம்மன் கோவிலில் பல நூறு வருடங்களாக கருவறை மூடப்பட்டு இருக்கிறது. ஆனாலும் அங்கு தொடர்ந்து கருவறை கதவுகளுக்கு வழிபாடு நடக்கிறது அதோடு அங்கு உள்ள நெய் 700 வருடங்கள் தாண்டியும் கெடாமல் உள்ளது. வாருங்கள் அது பற்றி இந்த வீடியோவில் பார்ப்போம்.

- Advertisement -

உங்கள் ராசிக்கான தமிழ் புத்தாண்டு பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்.

தேனீ மாவட்டத்தில் உள்ள தேவதானப்பட்டி என்னும் ஊரில் அமைந்துள்ளது ஸ்ரீ காமாட்சி கோவில். இந்த கோவிலை கதவு கோவில் என்றும் சிலர் அழைக்கிறார்கள். சூரனை வதம் செய்த பிறகு அதனால் ஏற்பட்ட தோஷத்தை போக்க அம்மன் இங்கு உள்ள மலையில் வந்து தவம் செய்ததாகவும் அதன் பிறகு மக்களுக்கு அருள் பாலிக்க இந்த கோவிலில் வந்து அமர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த கோவிலின் கருவறை கதவுகள் பல நூறு ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. இந்த கோவில் கருவறை கதவுகளை திறந்தால் மரணம் ஏற்படும் என்று நம்பப்படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த கோவில் கருவறை கதவை திறந்த ஒருவர் தலை வெடித்து இறந்ததாகவும் அதன் பிறகு யாரும் அந்த கதவை திறக்க முற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இன்று வரை அங்கு மூடப்பட்டுள்ளன கருவறை கதவுகளுக்கே தினம்தோறும் பூஜைகள் நடக்கின்றன.

பழங்காலம் முதல் இன்றுவரை இங்கு நெய் சேமிக்கப்பட்டு வருகிறது. இந்த நெய்யானது 700 வருடங்கள் பழமையாக இருந்தாலும் இன்று வரை துளி கூட கெடாமல் இருப்பது இங்கு பெரும் வியப்பை தருகிறது. அதோடு அந்த நெய் முழுவதும் அம்மனுக்கு உரியது என்பதால் அது மக்கள் பயன்பாட்டிற்கு இல்லை. மீறி யாரேனும் பயன்படுத்தினால் மரணம் நிகழும் என்று கூறப்படுகிறது. இப்படி பல அமானுஷ்யங்கள் நிறைந்ததாக இருக்கிறது இங்குள்ள காமாட்சி அம்மன் கோவில்.

- Advertisement -