அ‌ம்‌மி ‌மி‌தி‌த்து அரு‌ந்த‌தி பா‌ர்‌‌ப்பது ஏன்?

320
- விளம்பரம் -

நமது கலாச்சாரத்தில் திருமண நாள் அன்று முக்கிய சடங்காய் விளங்குவது அம்மி மிதித்து அருந்ததி பார்ப்பது. பலரும் இந்த சடங்கை கிண்டல் செய்வதுண்டு அனால் இந்த சடங்கிற்கு பின் ஒரு முக்கிய காரணம் உண்டு. வாருங்கள் அதை பற்றி பார்ப்போம்.

அம்மி மிதிப்பது ஏன்?
அடி மேல் அடி அடித்தால் தான் அம்மியும் நகரும் என்பது பழமொழி. அத்தகைய உறுதியானது அம்மி. திருமண நாள் அன்று மணமகன் மணமகளின் கால் கட்டை விரலை பிடித்து அம்மியில் மீது வைப்பதற்கு காரணம், மணமகள் எப்போதும் அம்மியை போல் உறுதியாக மனம் கலங்காமல் இருக்கவேண்டும் என்பதை உணர்த்தவே.

- Advertisement -

அதோடு கூட்டு குடும்பத்தில் மணியார், நாத்தனார் என்று பல உறவுகள் இருப்பார்கள். அவர்கள் மூலம் சில நேரங்களில் இன்பங்களும் சில நேரங்களில் துன்பங்களும் வரும். அவை இரண்டையும் சமாளித்து குடும்பத்தின் நலனுக்காக உறுதியாக வாழ வேண்டும் என்று மணமகன் மனோரீதிகாய மணமகளுக்கு தைரியம் சொல்லும் சடங்கே அம்மி மிதிக்கும் சடங்கு.

அருந்ததி பார்ப்பது ஏன்?
மணநாள் அன்று மணமக்கள் இருவரும் சேர்ந்து அருந்ததி நட்சத்திரத்தை பார்க்கிறார்கள். பகலில் எப்படி நட்சத்திரம் தெரியும் என்று பலரும் இந்த சடங்கை பார்த்து கிண்டல் அடிப்பதுண்டு. அருந்ததி என்பவர் சப்த ரிஷிகளும் ஒருவரான வசிஷ்டரின் மனைவி. இவர் கற்பில் மிக சிறந்தவராக விளங்குபவர்.

அதோடு வானில் உள்ள சப்தரி ரிஷி நட்சத்திர மண்டலத்தில் நட்சத்திரமாய் ஜொலிக்கும் வசிஷ்டரோடு இவரும் நட்சத்திரமாக இருந்து அவரை என்றும் பிரியாமல் வாழ்கிறார். அதுபோல மணமக்கள் இருவரும்  வாழ்வின் எந்த நிலையிலும் ஒருவரை ஒருவர் பிரியாமல் வாழ வேண்டும் என்பதை குறிக்கவே இந்த சடங்கு.

Advertisement