இந்த பழைய பொருட்களை இந்த திசையில் மட்டும் உங்கள் வீட்டில் வைத்து விடாதீர்கள்! பணம் செலவாகிக் கொண்டே இருக்குமாம்.

ammi-kal-aattu-kal-lakshmi

ஒரு வீட்டில் வழிவழியாக சில பொருட்களை நம் முன்னோர்களுடைய நினைவாக நாம் இந்த காலத்தில் பயன்படுத்தவில்லை என்றாலும் கூட பாதுகாத்து வருகிறோம். அந்த வகையில் இந்த இரண்டு பொருட்களை பெரும்பாலானோர் இப்போதும் கூட பாதுகாத்து வருவது மிகப்பெரிய விஷயம். ஆனால் அதை எந்த திசையில் எப்படி வைத்து பாதுகாக்கிறோம்? என்பது மிகவும் முக்கியமாக இருக்கும் ஒன்று. அப்படி ஒரு பொருளை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் இப்போது தெரிந்து கொள்ள இருக்கின்றோம்.

mahalakshmi

இப்போது இருக்கும் நவீன நாகரீகத்தில் எல்லாவற்றுக்கும் மின்சார இயந்திரங்கள் வந்து விட்டது. ஆனால் அந்த காலத்தில் இயற்கையாக கிடைக்கும் பொருட்களை கொண்டே வீட்டுத் தேவைகளை, வீட்டு வேலைகளை செய்து வந்தனர். அப்படி ஒரு பொருள் தான் அம்மிக்கல்லும், ஆட்டுக்கல்லும். இந்த இரண்டு பொருட்களும் மஹாலக்ஷ்மிக்கு இணையாக அந்த காலத்தில் பார்க்கப்பட்டது. அதில் கால் வைக்கவோ அல்லது அமர்ந்து உட்காரக் கூட அப்போதெல்லாம் அனுமதிக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு மிகவும் புனிதமாகப் போற்றி பாதுகாத்து வந்தனர்.

அதன் பிறகு மின்சார இயந்திரங்கள் அதற்கு என்று பிரத்யேகமாக தயாரித்த பிறகு அதன் பயன்பாடு மிகவும் குறைந்து வந்தது. இருப்பினும் அவற்றை வழிவழியாக முன்னோர்களின் நினைவாக, அவர்களின் சந்ததியினர் பத்திரப்படுத்தி வந்து கொண்டிருக்கின்றனர். ஆனால் அதை சரியாக பாதுகாக்காமல் குப்பை போல் போட்டு வைத்திருப்பார்கள். தெய்வாம்சம் பொருந்திய இந்த இரண்டு பழங்கால பொருட்களை சரியான திசையில் வைத்தால் மிகவும் நல்லது.

ammi-kal

அம்மிக் கல்லையும், ஆட்டு கல்லையும் பயன்படுத்தா விட்டாலும் வீட்டில் வைத்திருப்பது மிகவும் சுபீட்சமான சூழ்நிலையை உருவாக்கும். அதைப் பாதுகாத்து வருபவர்களின் சந்ததியினர் மகிழ்ச்சியுடன், செல்வ செழிப்புடன் வாழ்வதற்கு அந்த மகாலட்சுமி தேவியே துணைபுரிவார். வாஸ்து படி ஒரு வீட்டின் வடகிழக்கு மூலையில் பாரம் நிறைந்த பொருட்களை வைக்கக் கூடாது என்பார்கள். அந்த வகையில் இந்த இரு பொருட்களையும் வடகிழக்கு மூலையில் நாம் வைப்பதால் வீட்டில் செல்வ வளம் தடைபடும். இதன் பாரம் காரணமாக வாஸ்து குறைபாடு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதனால் தான் அந்த காலத்தில் கூட கொல்லைப்புறம் போன்ற இடங்களில் தான் வைப்பார்கள்.

- Advertisement -

இப்போது கொல்லைப்புறம் எல்லாம் வைத்து வீடுகள் இல்லை என்பதால் வீட்டின் ஏதாவது ஒரு மூலையில் நாம் போட்டு வைத்து விடுகிறோம். அது வடகிழக்கு மூலையாக அமைந்து விட்டால் அந்த வீட்டில் பண வரவு தடைபடும். எவ்வளவு தான் சம்பாதித்தாலும் போதவில்லை என்ற நிலை இருக்கும். கஷ்டப்பட்டு முன்னேற நினைத்தாலும் தடைகள் பல ஏற்படலாம். இதனால் வீட்டில் செலவுகள் அதிகமாகிக் கொண்டே இருக்கும்.

ammi-kal-aattu-kal

வீட்டின் தென்கிழக்கு மூலை தான் இது போன்ற பொருட்களை வைப்பதற்கு மிகச்சரியான திசையாக இருக்கும். வீட்டில் மற்ற அறைகளை காட்டிலும் சமையலறையில் தென்கிழக்கு பகுதியில் இவற்றை வைத்து பாதுகாத்து வந்தால் நல்லது நடக்கும். அப்படி இல்லாமல் உங்கள் வீட்டில் பின்புறத்தில் இடம் இருந்தால் தாராளமாக அங்கு நீங்கள் வைத்துக் கொள்ளலாம். வீட்டிற்குள் வைப்பதை விட வீட்டிற்கு பின்புறத்தில் வைப்பது நல்ல பலன்களை தரும் என்பார்கள். எந்த திசையில் வைத்தாலும் வடகிழக்கு திசையில் மட்டும் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே
எந்த பொருளை வாங்குவதற்கு பணத்தை செலவு செய்து கொண்டே இருந்தால், பணவரவு அதிகரித்துக்கொண்டே போகும்! அது எந்தப் பொருள்? அதை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.