அம்மன் ஊஞ்சலாடிய CCTV காட்சி – இணையத்தில் வைரலாக பரவும் வீடியோ இதோ

Anthiyur amman video

கலியுகத்தில் கடவுள் நேரடியாக வருவது சாத்தியமில்லை. ஆனால் சில இடங்களில் பிள்ளையார் பால் குடிப்பது, அம்மன் கண்களைத் திறந்து பார்த்தது, அம்மன் கண்களில் கண்ணீர் வருவது, இதுபோன்ற அதிசயங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. இந்த வரிசையில் அம்மன் ஊஞ்சல் ஆடிய ஒரு அதிசய நிகழ்ச்சியும் இந்தப் பட்டியலில் சேர்ந்துவிட்டது. ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் தான் இந்த அதிசயம் நடந்திருக்கிறது. ‘அந்தி’ என்றால் ‘இறுதி’ என்ற பொருளைக் குறிகின்றது. பக்தர்களுக்கு ஏற்படும் துன்பங்களுக்கெல்லாம் இறுதியான முடிவை அளிக்கும் பத்ரகாளி இந்த ஊரில் இருப்பதால், இந்த இடத்திற்கு அந்தியூர் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

பத்ரகாளியம்மன் கோவில்
அந்தியூரை அடுத்து எண்ணமங்கலம் என்னும் கிராமத்தில் கணவனின் கொடுமையை தாங்க முடியாமல் ஒரு பெண் தன்னுடைய கைக்குழந்தையுடன் இரவு நேரத்தில் தற்கொலை செய்யது கொள்வதற்காக கிணற்றில் குதித்து இருக்கிறாள். தூங்கிக்கொண்டிருந்த அம்மன் கோவில் பூசாரியின் கனவில், ‘பத்ரகாளி அம்மன் தோன்றி, உடனடியாக சென்று அந்த பெண்ணையும், குழந்தையையும் காப்பாற்ற வேண்டும் என்று’ கூறியிருக்கின்றாள். உடனடியாக கண்விழித்த அந்தப் பூசாரி சம்பவம் நடந்த இடத்திற்கு வந்து கிணற்றில் குதித்த அந்தப் பெண்ணையும் குழந்தையையும் காப்பாற்றிவிட்டார். இந்த அதிசய சம்பவத்திற்க்கு பிறகு, அந்தியூர் பத்ரகாளி அம்மன், தன் பக்தர்களின் கனவில் வந்து நல்ல பலன்களை சொல்லும் அம்மனாக இன்றுவரை புகழ் பெற்று விளங்குகின்றாள். இந்த அம்மனை மனதார நினைத்து வனங்குபவர்களுக்கு, அம்மன் கனவில் வருவாள் என்பது இந்த கோவிலில் உள்ள நம்பிக்கை. அதுமட்டுமல்லாமல் தவறு செய்பவர்களுக்கு தண்டனையை உடனடியாக, இந்த அந்தியூர் காளியம்மன் வழங்குவாள் என்பதும் இந்த ஊர் மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இப்படிப்பட்ட பல அதிசய வரலாற்றை கொண்ட இந்த தளத்தில் தற்சமயம் கார்த்திகை தீபத்தன்று மற்றொரு அதிசயமும் நடந்து இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடியுமா? இந்த கலியுகத்திலும் அம்மன் தன் திருவிளையாடலை பக்தர்களுக்கு காட்சி அளித்திருக்கின்றாள்.

Anthiyur amman video

ஆங்கிலேயர்களின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்த கோவில் தற்போது, இந்து அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது. கோவிலின் பாதுகாப்பிற்காக பொருத்தப்பட்டுள்ள கேமராவை, கண்காணிக்கும் போது தான் இந்த அதிசயமானது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்தக் கோவிலில் உள்ள பத்ரகாளி அம்மன், கோவில் கருவறையில், பூஜைக்காக அமைக்கப்பட்டிருந்த ஊஞ்சலில், கார்த்திகை தீபத்தன்று தொடர்ந்து 2 மணி நேரம் ஊஞ்சல் ஆடிய காட்சி அரங்கேறியிருக்கிறது. கேமராவில் பதிவாகியிருந்த இந்தக் காட்சியைக் கண்ட ஊழியர்களும் கோவில் நிர்வாகிகளும் ஆச்சரியத்தில் திகைத்துப் போனார்கள். இந்தக்காட்சி வெளிவந்தவுடன் இதனை கண்ட பக்தர்கள் மெய்சிலிர்த்துப் போகிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கனவில் வந்து பக்தர்களின் கஷ்டங்களை போக்கும் அந்த பத்ரகாளியம்மன் கார்த்திகை தீபத்தன்று நேரில் வந்து ஊஞ்சல் ஆடி இருக்கின்றாள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருக்கிறது. உண்மையான பக்தி கொண்டவர்கள் இதை அம்மனின் அருளாக நினைத்தாலும், கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்று ஆராய்ச்சி செய்து பார்க்கும் சிலருக்கு, இந்த சம்பவம் ஒரு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.