சாப்பாட்டிற்கு தொட்டுக்கொள்ள சுவையான அரிசி வடாகம் செய்யும் முறை

arisi-vadagam
- Advertisement -

நம் வீட்டில் அன்றாடம் மீறும் சாதத்தினை தண்ணீர் ஊற்றி அடுத்த நாள் காலையில் நாம் சாப்பிட்டு இருப்போம். அதே போன்று மீறும் சாத்தினை வடகமாக மாற்றி அதனை சாப்பாட்டிற்கு தொட்டுகையாக சாப்பிடலாம். இந்த பதிவில் அரிசி வடகம் எப்படி செய்வது என்று பார்ப்போம் வாருங்கள்.

vadagam 1

அரிசி வடகம் செய்ய தேவையான பொருட்கள்:

- Advertisement -

சாதம் – 2 கப்
சீரகம் – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு

அரிசி வடகம் செய்முறை:

வடகம் தயார் செய்ய முதலில் ஒரு மிக்சி ஜாரில் சாதம் மற்றும் சீரகம், மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். நன்றாக அரைக்காமல் பாதி நிலையில் அரைக்கும் போது மிக்சியை நிறுத்தி எடுத்து கொள்ளவும்.

- Advertisement -

vadagam 2

பிறகு அரைத்த வடகத்தினை ஒரு தட்டில் சிறு சிறு உருண்டைகளாக வைத்து 2 நாட்கள் வரை நன்றாக வெயிலில் காயவைத்து எடுக்கவும். இப்போது கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் காயவைத்த இந்த வடகத்தினை போட்டு பொரித்து எடுத்தால் சுவையான அரிசி வடகம் தயார்.

ஒரே நேரத்தில் எல்லாவற்றினையும் பொரிக்காமல் தேவைப்படும்போது போட்டு பொரித்து சாப்பிட்டு கொள்ளலாம்.

- Advertisement -

vadagam 3

சமைக்க ஆகும் நேரம் – 2 நிமிடம்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 4

இதையும் படிக்கலாமே:
பூ போன்ற இட்லி செய்வது எப்படி

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புகள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Arisi Vadagam recipe in Tamil. It is also called Arisi Vadagam ingredients in Tamil or Arisi Vadagam preparation in Tamil or Arisi Vadagam seimurai in Tamil or Arisi Vadagam seivadhu eppadi in Tamil.

- Advertisement -