இந்த டிப்ஸை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க! 1 மூட்டை அரிசியில், 1 வருடம் ஆனாலும், 1 வண்டு கூட பிடிக்காது.

rice
- Advertisement -

அந்தக் காலத்தில் நம்முடைய முன்னோர்கள் எல்லாம் அரிசியை மூட்டை மூட்டையாக தான் வைத்து பயன்படுத்தி வருவார்கள். இதற்கு நிறைய காரணங்கள் உண்டு. குடும்பம் கூட்டுக் குடும்பமாக இருந்தது, ஒரு மூட்டை அரிசி வண்டு பிடிக்கும் அளவிற்கு எல்லாம் இருக்காது. சீக்கிரமே தீர்ந்து போய்விடும். அது மட்டுமல்லாமல் அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட அரிசி, மருந்து போடாமல், பாலிஷ் போடாமல், இயற்கையான உரங்களை வைத்து மட்டுமே தயாரிக்கப்பட்ட அரிசி என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். சரி, நம்முடைய வீட்டில் இப்போது அரிசியை, மூட்டையாக வாங்கி வைக்க வேண்டும் என்றாலே பயம். காரணம் அதில் புழு பூச்சி பிடிக்கிறது.

rice1

அரிசி மூட்டையில் புழு பூச்சி பிடிக்காமல் இருக்க அதை எப்படி பாதுகாப்பது. அரிசியை முடிந்தவரை மூட்டையாக கோணிப்பையில் வைத்துக்கொள்ளாமல், ஒரு பிளாஸ்டிக் டப்பில் அல்லது எவர்சில்வர் டிரம்மில் கொட்டி வைத்து கொள்ள வேண்டும். இந்த அரிசியில் பூச்சி வராமல் இருக்க லவங்கம், பிரியாணி இலை, கிராம்பு, பெருங்காயம், இந்த பொருட்களை எல்லாம் அரிசியில் போட்டு வைக்கலாம்.

- Advertisement -

எல்லா பொருட்களையும் போட்டு விடாதீர்கள். இதில் ஏதாவது ஒரு பொருளை மட்டும் போட வேண்டும். சில பேருக்கு லவங்க வாசனை, பிரியாணி இலை, கிராம்பு பெருங்காய வாசனை எல்லாம் அரிசியில் வந்துவிடுமோ என்ற பயம் இருக்கும். அளவோடு இந்த பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் எந்த ஒரு வாசனையும் அரிசியில் வராது. தேவைப்பட்டால் இந்த பொருட்களை ஒரு வெள்ளை துணியில் வைத்து கட்டி அதன் பின்பு அந்த முடிவினை அரிசியில் புதைத்து வைக்கலாம். இது ஒரு வழி. (பெருங்காயத்தில், தூள் பெருங்காயம் சேர்க்கக்கூடாது. கட்டிப் பெருங்காயத்தை பயன்படுத்துங்கள்.) ஒரு மூட்டை அரிசிக்கு 2 சிறிய துண்டு பெருங்காயம், 5 லவங்கம், 2 பிரியாணி இலை, என்ற கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.

sukku

இது அல்லாமல் அரிசியில் சுக்கு துண்டுகளை போட்டு வைக்கலாம். அடுத்தபடியாக வசம்பு. உங்களுக்கு வசம்பு கிடைத்தால் மிக சௌகரியமாக இருக்கும். மேல் சொன்ன எல்லா பொருட்களையும் விட வசம்பு நல்ல பலனைக் கொடுக்கும். வசம்பை வாங்கி உடைக்க வேண்டாம். அப்படியே முழு முழு துண்டுகளாக அரிசியில் புதைத்து வைத்தோமேயானால் அரிசியில் அவ்வளவு சீக்கிரத்தில் வண்டு பிடிக்காது.

- Advertisement -

அடுத்தபடியாக அரிசியில் வண்டு பிடிப்பதற்கு காரணம் ஈரக் கையுடன் அரிசியை எடுப்பதுதான். முடிந்தவரை அரிசியை ஈரம் படாமல் பார்த்துக்கொண்டால் நீண்ட நாட்களுக்கு பூச்சி படிக்காமல் இருக்கும். சரி அரிசியில் வண்டு வந்து விட்டது. அரிசியை வெயிலில் உலர வைத்து எடுத்தாலும் இரண்டாக உடைய தொடங்கிவிடும். என்ன செய்யலாம்.

vasambu 3

வெயில் இல்லாத சமயத்தில் வீட்டிற்கு வெளியே பக்கத்தில் அரிசியை பரவலாக கொட்டி வைக்க வேண்டும். இரவு நேரத்தில் கொட்டி வைத்தாலும் சரிதான். அரிசியில் இருக்கும் வண்டுகள் பரவலாகக் கொட்டி வைக்கும் போது வெளியே சென்றுவிடும். மூன்று நாட்கள் இப்படி அரிசியை பரவலாகக் கொட்டி புடைத்து சுத்தம் செய்து மீண்டும் ஸ்டோர் செய்தால் அதில் இருக்கும் வண்டுகள் வெளியே சென்றுவிடும். மீண்டும் வண்டுகள் வராமலிருக்க மேல் சொன்ன விஷயங்களில் உங்களுக்கு எது விருப்பமோ அதை பின்பற்றிக் கொள்ளலாம்.

- Advertisement -