வீடு கட்டுதல், நிலம் வாங்குதல் போன்றவற்றில் இருக்கும் பிரச்சனைகள் தீர இங்கு வழிபடுங்கள்

perumal
- Advertisement -

நாம் வாழ்கின்ற ஒவ்வொரு நொடிக்கும் அடுத்த நொடி என்ன நடக்கும் என்பது நம்மை படைத்த இறைவனை தவிர வேறு எவருக்கும் தெரியாது. அப்படி வாழும் காலத்தில் நமக்கு ஏற்படும் எத்தகைய ஆபத்துகள், பிரச்சனைகள் நீங்க இறைவனை தான் அனைவருமே வழிபடுவோம். அந்த வகையில் தன்னை ஆபத்துக்காலங்களில் அழைத்தவர்களுக்கு உடனே வந்துதவிய அருள்மிகு அஷ்டபுஜகர பெருமாள் கோயிலின் சிறப்புக்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Perumal

அருள்மிகு அஷ்டபுஜபெருமாள் திருக்கோயில் வரலாறு

2000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாக இருக்கிறது இந்த அஷ்டபுஜப்பெருமாள் கோயில். இக்கோயிலின் இறைவனான திருமால் ஆதிகேசவப்பெருமாள் என்றும், தாயார் அலர்மேல்மங்கை, பத்மாசினி ஆகிய பெயர்களிலும் அழைக்கப்படுகின்றனர். கோயிலின் தீர்த்தம் கஜேந்திர புஷ்கரணி என்றழைக்கப்படுகிறது. புராண காலத்தில் இந்த ஊர் அட்டபுயகரம், அஷ்டபுஜகரம் என்கிற பெயர்களில் அழைக்கப்பட்டது. திருமங்கை ஆழ்வார், பொய்கையாழ்வார் போன்றோர்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக இருக்கிறது இக்கோயில்.

- Advertisement -

தல புராணங்கள் படி முற்காலத்தில் மகாசந்தன் என்கிற யோகி பூவுலக வாழ்வை விடுத்து சீக்கிரத்திலேயே இறைவனின் லோகத்திற்கு செல்ல விரும்பி கடும் தவம் இயற்ற ஆரம்பித்தார். இதைக் கண்டு அஞ்சிய தேவர்களின் தலைவனான இந்திரன் மகாசந்தனின் தவயோகத்தை கலைக்க தேவலோக கன்னிகளை அனுப்பினான். இது எவற்றிற்கும் அசையாத உறுதியுடன் இருந்தார் மகாசந்தன். இறுதியில் இந்திரனே ஆண் யானை வடிவம் எடுத்து முனிவரின் குடிலுக்கு வந்தான். அந்த யானையின் அழகில் மயங்கிய மகாசந்த முனிவரும் யானை வடிவம் எடுத்து யானை கூட்டத்தோடு கூட்டமாக திரியலானார்.

Sudarshana vishnu

ஒருமுறை நதியில் நீராடிய போது யானைக்கு தனது முந்தைய வாழ்வில் மகாசந்த யோகியாக வாழ்ந்தது நினைவிற்கு வந்தது. இதை எண்ணி வருந்திய யானை பல பெருமாளின் திவ்ய தேச கோயில்களுக்கு சென்று வணங்கி வந்தது. அப்போது மிருகண்டு முனிவர் அந்த யானையிடம் காஞ்சிபுரத்தில் இருக்கும் வரதராஜ பெருமாளை வழிபட்டால் நன்மையுண்டாகும் என்று அறிவுறுத்தினார். யானையும் அவரின் அறிவுரை படி காஞ்சிபுரம் வரதராஜ பெருமாளை வழிபட்டு வந்தது. அப்போது ஒரு நாள் இந்த அஷ்டபுயக்கர பெருமாள் கோயில் தரிசனம் யானைக்கு கிடைத்தது. அந்த பெருமாளுக்கு 14,000 மலர்களை சாற்றி வழிப்பட்டது யானை

- Advertisement -

ஒரு நாள் பூஜைக்கு பூக்கள் கிடைக்காமல் போக அருகிலுள்ள குளத்தில் இறங்கி தாமரை பூவை பறித்தது, அப்போது அக்குளத்திலிருந்த முதலை யானையின் காலை கடித்திழுக்கும் போது, பெருமாளை நினைத்து ஆதிமூலமே தன்னை காக்குமாறு வேண்டியது. இதற்கு முன்பு கஜேந்திரன் எனும் யானையை காப்பாற்றியது போலவே இம்முறையும் பெருமாள் கருட வாகனத்தில் தோன்றி சக்ராயுதத்தால் முதலையின் தலையை வெட்டி யானையை காப்பாற்றினார்.

அருள்மிகு அஷ்டபுஜபெருமாள் திருக்கோயில் சிறப்புகள்

- Advertisement -

ஒருமுறை பிரம்மதேவன் பூமியில் தனக்கு விக்கிரக ஆராதனை இல்லையென்று சரஸ்வதியை தனியாக விடுத்து ஒரு மிக பெரும் யாகம் ஒன்றை நடத்தினான். இதனால் கோபம் கொண்ட சரஸ்வதி சரபாஸ்வரன் உட்பட பல அரக்கர்களை யாகத்தையும், பூமியையும் அழிப்பதற்கு அனுப்பினாள். இதனால் பயந்த பிரம்மன் பெருமாளிடம் தன்னை காக்கும் படி சரணடைந்தார். பெருமாளும் 8 திருக்கரங்களுடன் தோன்றி அரக்கர்களை அழித்து யாகத்தை சிறப்பாக நடைபெற செய்தார்.

vishnu

பெருமாள் இக்கோயிலில் அஷ்டபுஜகர பெருமாளாக அருள்பாலிப்பதற்கு முன்பாகவே இக்கோயிலில் ஆதிகேசவபெருமாள் கோயில் கொண்டுள்ளார். ஆழ்வார்கள் இங்கு மங்களாசாசனம் செய்த பிறகே அஷ்டபுஜகர பெருமாள் புகழ் பெற்றதாக கூறப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் இங்கு மட்டும் தான் பெருமாள் அஷ்டகரங்களுடன் காட்சியளிக்கிறார். மேலும் இங்கு மகாலட்சுமியான தாயாரை தனியாக பாடி மங்களாசாசனம் செய்தது தனி சிறப்பாகும். இந்த தலத்து பெருமாள் தனது வலது நான்கு திருக்கரங்களில் சக்கரம், கத்தி, அம்பு, புஷ்பம் என்றும் இடது திருக்கரத்தில் சங்கு, வில், கேடயம், கதை என்கிற நான்கையும் கொண்டு அருள்பாலிக்கிறார்.

mahalakshmi

பொதுவாக பெருமாள் கோயில்களில் ராஜகோபுர நுழைவாயில் ஒரு திசையிலும், சொர்க்க வாசல் ஒரு திசையிலும் இருக்கும் ஆனால் இங்கு இந்த இரண்டு வாயில்களும் வடக்கு திசை நோக்கி இருப்பது கூடுதல் சிறப்பாகும். பூமாதேவியை அழிக்க வந்த அரக்கர்களை பெருமாள் வதம் செய்ததால் புதிய வீடு கட்ட, வாங்கும் போதும், புதிய நிலங்கள் வாங்கும் போது ஏற்படுகின்ற பிரச்சனைகள் நீங்க இங்கு வந்து வழிபடுவதால் அவை சீக்கிரத்தில் தீரும் என கூறப்படுகிறது.

கோயில் அமைவிடம்

அருள்மிகு அஷ்டபுஜபெருமாள் திருக்கோயில் காஞ்சிபுரம் நகரத்தில் அமைந்துள்ளது.

கோயில் நடை திறப்பு

காலை 7 மணி முதல் மதியம் 12 வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

கோயில் முகவரி

அருள்மிகு அஷ்டபுஜபெருமாள் திருக்கோயில்
காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம் – 631501

தொலைபேசி எண்

44 – 27225242

இதையும் படிக்கலாமே:
பதவி உயர்வு கிடைக்க செய்யும் கோயில்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Ashtabhuja perumal temple history in Tamil. It is also called as Ashtabhuja perumal temple in Tamil or Ashtabhuja perumal kovil in Tamil or Kanjipuram temples in Tamil or Ashtabhuja perumal in Tamil.

- Advertisement -