இந்த நாளில், ஒரே ஒரு தேங்காயை மட்டும் உடைத்து பாருங்கள்! உங்கள் வாழ்க்கையில் ஜென்மத்துக்கும் பணக்கஷ்டம் வரவே வராது.

coconut-kethu

இன்றைக்கு இருக்கும் காலகட்டத்தில் யாருக்கு, எப்போது கஷ்டம் வரும் என்றே சொல்ல முடியவில்லை. சூழ்நிலை அவ்வளவு மோசமாக இருக்கிறது. அன்றாட வாழ்க்கைக்கையையும், அன்றாட அத்தியாவசியமான தேவையையும் பூர்த்தி செய்து கொள்வதே சில குடும்பங்களுக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது. நாம் மனதில் நினைத்து வைத்திருக்கும் குறிக்கோளை எட்ட வேண்டும் என்றால் அதற்கு பல போராட்டங்களை கடக்க வேண்டி இருக்கிறது. வியாபாரத்தில் அதிக லாபத்தை பார்க்க வேண்டும் என்றாலும் அதிகப்படியான கஷ்டத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.

kethu

நாம் பார்க்கும் வேளையில் ஒரு அடி முன்னே எடுத்து வைக்கவேண்டும் என்றாலே, பல தடைகளைத் தாண்டி வர வேண்டும். இப்படியிருக்க நம்முடைய ஜாதகத்தில் கேது பகவான் சரியான இடத்தில் அமரவிரவில்லை என்றாலும், அவருடைய ஆசிர்வாதம் நமக்கு சரியாக கிடைக்கவில்லை என்றாலும், முடிந்தது. ஒரு அடி ஏறினால், 10 அடி இருக்க வேண்டியதாக இருக்கும்.

ஒருவருடைய ஜாதக கட்டத்தில் கேது பகவானின் அம்சம் பொருந்தாமல் இருந்தால் கூட, அவரது வாழ்க்கையில் பல போராட்டங்களை சந்திக்க நேரிடும். இதற்காக கேது பகவானால் தோஷம் உள்ளவர்கள் மட்டும் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. நம்முடைய வாழ்க்கையில் எந்தவிதமான தடைகளும் ஏற்படாமல், நம் மனதில் நினைத்திருக்கும் குறிக்கோளை விரைவாக செயல்படுத்த வேண்டுமென்றால் என்று நினைப்பவர்கள் எல்லோருமே இந்த பரிகாரத்தை செய்யலாம்.

kethu

பரிகாரம் என்று கூட சொல்ல முடியாது. இது ஒரு வழிபாடுதான் குறிப்பிட்ட இந்த தினத்தில் செய்தாலே போதும். அது என்ன தினம்? யாரை வழிபட வேண்டும்? எப்படி வழிபட வேண்டும்? என்பதைப் பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

கேது பகவானுக்கு உரிய நட்சத்திரமாக சொல்லப்படும் அசுபதி நட்சத்திரம் வரும் நாளில், உங்கள் வீட்டு அருகில் இருக்கும் ஏதாவது ஒரு விநாயகர் கோவிலுக்கு சென்று, சிதறு தேங்காய் உடைப்பது மிகவும் நல்லது. முடிந்தால் கையோடு அருகம் புல்லையும், எருக்கம் பூவையும் வாங்கிச் செல்லுங்கள். மூன்று தோப்புக்கரணம் போட்டு விட்டு வாருங்கள். உங்களுக்கு இருக்கும் தொழில் முடக்கமாக இருந்தாலும், கடன் பிரச்சினையாக இருந்தாலும், அது விரைவாக தீரும் என்பது நம்பிக்கை.

stars

இதே தினத்தில் அனுமனை வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. முடிந்தால், அனுமனுக்கு வெற்றி மாலையை சூட்டி உங்களது பெயரை சொல்லி அர்ச்சனை செய்து கொள்ளுங்கள். கூடிய விரைவில் நல்லது நடக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

vetrilai-malai-hanuman

எப்படிப்பட்ட கஷ்டங்களையும் தீர்க்கும் விநாயகரையும், அனுமனையும் குறிப்பிட்ட இந்த தினத்தில் வழிபடும்போது நமக்கு ஜாதகத்தில் இருக்கும் தடைகள் கூட சுலபமாக நீங்கிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. மனதார இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வாருங்கள். இக்கட்டான சூழ்நிலையில் வரும் நஷ்டம் கூட, லாபமாக மாறுவதற்கு பல வழிகளை, இந்த வழிபாடு நமக்கு காட்டும். அசுபதி நட்சத்திரம் என்றைக்கு வருகிறது என்பது நாள்காட்டியை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம். இந்த நட்சத்திரத்தை இனி தவறவிடாதீர்கள். விநாயகரின் அருளும் ஹனுமனின், அருளும் நமக்கு வெற்றியை பெற்றுத்தர, வழிபாடு செய்ய வேண்டிய சிறப்பான தினம் இந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே
‘பறவைகள்’ இது போன்று உங்கள் கனவில் வந்தால், நல்லது நடக்குமா? கெட்டது நடக்குமா?

இது போன்ற ஜோதிடம் சார்ந்த பல தகவல்களை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Asupathi natchathira palan in Tamil. Asupathi star. Asupathi star in Tamil. Asupathi nakshatra in Tamil. Asupathi natchathiram.