2019 ஆண்டு அத்தி வரதர் தரிசன விழாவின் கடைசி தீபாராதனை வீடியோ

athi-varadhan

பக்தர்கள் வேண்டுகின்ற எத்தகைய வரங்களையும் அருளிபாலிக்கும் “வரம் தரும் ராஜாவாக” காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் இருக்கிறார். அந்த வரதராஜப் பெருமாளின் பிரதான மூலவர் விக்கிரகம் தான் பிரம்மதேவர் ஆணைப்படி அத்தி மரத்தில் செய்யப்பட்ட, அத்திவரதர் சிலையாகும். பன்னெடுங்காலம் காஞ்சி வரதராஜ பெருமாள் கோவிலில் மூலவராக இருந்த அத்திவரதர் சிலை, மத்திய கால நூற்றாண்டில் பல்வேறு காரணங்களால் பெருமாள் கோயிலில் குளமான அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டு, ஒவ்வொரு 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை வெளியில் எடுத்து, அத்தி வரதர் வைபவம் என்கிற பெயரில் 48 தினங்களுக்கு பூஜைகள் செய்து செய்யப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக வைக்கப்படுகிறது. அந்த அத்தி வரதர் பற்றிய ஒரு அற்புத காணொளியை இங்கு காணலாம்.

athi vardhar

பல நூற்றாண்டாக காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் அத்தி வரதர் வைபவம் கடந்த நூற்றாண்டில் 1937 மற்றும் 1979 ஆம் ஆண்டுகளில் சிறப்பாக நடைபெற்றது. அதன் பிறகு தற்போது நடைபெறும் 2019 ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த அத்தி வரதர் வைபவம் 20 ஆம் நூற்றாண்டின் முதல் அத்தி வரதர் வைபவம் ஆகும். கடந்த 47 தினங்களுக்கும் விசேஷ அலங்காரங்கள் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டு தரிசனம் நடைபெற்றது.

தற்போது உலகெங்கிலும் இருந்து வந்த சுமார் ஒரு கோடி அளவிலான பக்தர்கள் அத்தி வரதராஜ தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது. எனினும் அத்தி வரதர் இருக்கின்ற பெருமாள் கோவிலுக்கு நேரில் வந்து வழிபட முடியாமல் போன பக்தர்கள் பல கோடி பேர் உண்டு. நவீன விஞ்ஞான வளர்ச்சியின் வரமாக அத்தகைய பக்தர்களுக்காக தினந்தோறும் அத்திவரதர் குறித்த காணொளி காட்சிகள், புகைப்படங்கள் தொலைக்காட்சிகளிலும், பத்திரிகைகளிலும் வெளி வந்து அவர்களுக்கு ஆறுதல் தந்தன.

Athi-Varadar-Kanchi

நேற்றைய 16.08.2019 தினம் தான் அத்தி வரதர் தரிசனம் செய்வதற்கு இறுதியான நாள் என்பதை அறிந்த பக்தர்கள் திரண்டு வந்து தரிசனம் செய்தனர். இரவு நெடுநேரம் வரை பக்தர்கள் அனைவரும் அத்தி வரதர் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அப்போது அத்திவரதருக்கு இறுதியாக செய்யப்பட்ட தீபாராதனை ஒரு பக்தரால் தனது செல்பேசி காமெராவில் பதிவு செய்யப்பட்டது.அந்த அற்புதமான காணொளி தான் இது.

இதன்பிறகு 40 ஆண்டுகள் கழித்து 2059 ஆம் ஆண்டு மட்டுமே அத்திவரதர் மீண்டும் பக்தர்களுக்கு தரிசனம் தருவார். அதுவரை தற்போது பதிவு செய்யப்பட்ட இந்த ஒரு காணொளி காட்சி பக்தர்களுக்கு அத்தி வரதர் பெருமாளின் திவ்ய தரிசனத்தை தந்து கொண்டிருக்கும் என்பதில் ஐயமேதுமில்லை.

English overview:
Here we have Athi varadhar dharshan video in Tamil. It is also called as Athi vardhar in Tamil or Athi varadhar last pooja video in Tamil.