ஆகஸ்ட் மாத ராசி பலன் – 2020

august

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மகிழ்ச்சியான மாதமாக தான் இருக்கப் போகின்றது. குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று வரக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். மனநிம்மதி ஏற்படும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு, அவ்வபோது, பிரச்சினைகள் வந்துபோகும். தொழிலில் எவ்வளவு உழைப்பு போடுகிறீர்களோ, அவ்வளவு லாபம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. செவ்வாய் கிழமைகளில், துர்க்கை அம்மன் வழிபாடு மன அமைதியைத் தரும்.

ரிஷபம்
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வெற்றி தரும் மாதமாக அமையப்போகின்றது. நீண்ட நாட்களாக, இழுபறியாக இருந்து வந்த பிரச்சினைகள், தானாகவே ஒரு முடிவுக்கு வந்துவிடும். கோர்ட், கேஸ், சொத்துப் பிரச்சனைகள் உங்கள் பக்கம் சாதகமாகும். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு, எதிர்பாராத சம்பள உயர்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சொந்த தொழில் முன்னேற்ற தோடு செல்லும். வாகனத்தில் செல்லும்போது மட்டும் சற்று கவனம் தேவை. சனிக்கிழமை அனுமன் வழிபாடு நன்மையை தரும்.

மிதுனம்
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வருமானத்தைத் தேடித்தர போகிற மாதமாக இருக்கப்போகின்றது. நீங்கள், வரவே வராது, என்று முடிவு வைத்திருந்த கடன் தொகையில் இருந்து ஒரு பகுதி உங்கள் கைக்கு வரலாம். சம்பள உயர்வு, தொழிலில் எதிர்பாராத லாபம், இப்படி வருமானம் பல வழிகளில் அதிகரித்து உங்களை சந்தோஷப்படுத்த போகின்றது. உடன் பணிபுரிபவர்களாக இருந்தாலும், உங்கள் தொழிலில் பங்குதாரர்களாக இருந்தாலும், சில விஷயங்களை அவர்களிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. திங்கட்கிழமைகளில் விநாயகர் வழிபாடு நன்மை தரும்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நிறைவான மாதமாக இருக்கப்போகின்றது. நீண்ட நாட்களாக பிரிந்திருந்த நண்பரை சந்திக்க வாய்ப்பு உண்டு. உறவினர்கள் தேடிவந்து, உங்களுக்கான உதவியை செய்வார்கள். குடும்பத்தில் இதுநாள் வரை இருந்த பிரச்சினைகள் நீங்கி, சந்தோஷம் நிலவும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் தேவை. அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலை நிலவும். சொந்த தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டு. தொழிலில் புதிய முதலீடுகளை செய்யலாம். தினந்தோறும் சூரிய நமஸ்காரம் செய்வது நன்மை தரும்.

சிம்மம்
simmam
சிம்மராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வெற்றி தரும் மாதமாக இருக்கப்போகின்றது. எந்த ஒரு முயற்சியையும், மன தைரியத்தோடு செயல்படுத்துங்கள். வெற்றி கட்டாயம் உங்கள் வசம் இருக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகளும், இந்த மாதம் ஒரு முடிவுக்கு வரும். அதாவது, உங்களுக்கு வரவேண்டிய கடன் தொகையும், வசூலாகும். நீங்கள் கொடுக்க வேண்டிய கடன் தொகையையும் கொடுத்து முடிப்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. தினம் தோறும் பெருமாள் வழிபாடு வெற்றியை தேடித்தரும்.

கன்னி
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்கள், இந்த மாதம் சற்று விட்டுக் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அலுவலகப் பணியில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லுங்கள். வியாபாரிகள், வாடிக்கையாளர்களை அனுசரித்துச் செல்லவேண்டும். வீட்டில் குடும்ப தலைவர்கள், தங்களுடைய மனைவியை விட்டுக் கொடுத்து செல்லுங்கள். வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம். கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். உடல் நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். முடிந்தவரை இறைவழிபாட்டில், உங்களது மனதை ஈடுபடுத்துங்கள். பயணங்களின் போது கவனம் தேவை. தினம்தோறும் சிவ வழிபாடு மிகவும் நல்லது.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சற்று சுமாரான மாதமாகத்தான் இருக்க போகின்றது. மற்றவர்களிடம், நீங்கள், நல்லதுக்காக சொல்லப்போகும் விஷயங்கள் கூட, உங்களுக்கு கெட்ட பெயரை வாங்கித் தரும். முடிந்தவரை அனாவசிய பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். தவறு என்று உங்கள் கண்களுக்கு தெரிந்தாலும், மௌனமாக அதை கடந்து செல்வதுதான் நல்லது. இல்லை என்றால் வேண்டாத விவகாரங்கள் உங்களுக்கு வரும் வாய்ப்பு உள்ளது. சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். பொருளாதார ரீதியாக முன்னேற்றம் இருக்கும் திருமணத்தடை நீங்கும். தினம்தோறும் அம்மன் வழிபாடு மன தைரியத்தை அதிகரிக்கும்.

விருச்சிகம்
Virichigam Rasi
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அமோகமான மாதமாக தான் இருக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைக்கு நல்ல தீர்வு கிடைக்கப்போகிறது. உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். வேலையில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. சொந்தத் தொழிலில் புதிய முதலீடு செய்யலாம். கணவன்-மனைவிக்கிடையே மட்டும், சற்று விட்டுக்கொடுத்து சென்றால் குடும்பத்தில் பிரச்சனை இருக்காது. தினம் தோறும் வீட்டில் மகாலட்சுமி வழிபாடு நன்மையை தேடித்தரும்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சற்று சிக்கலான  மாதமாகத்தான் இருக்கப் போகின்றது. உறவினர்களின் வருகையால், வீட்டில் செலவு ஏற்படும். அதோடு மட்டுமல்லாமல், உறவினர்களுக்கு இடையே சின்ன சின்ன பிரச்சினை வர வாய்ப்பு உள்ளது. அனாவசியமாக வார்த்தையை விட்டு விடாதீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி முக்கியம் என்றால், உங்களது கோபத்தை கட்டுப்படுத்தி தான் ஆக வேண்டும். வருமானம் எப்போதும் போல் இருக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களிடம் சில பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு உள்ளது, உஷாராக நடந்து கொள்ள வேண்டும். தினந்தோறும் முருகர் வழிபாடு நன்மை தரும்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் வெற்றி தரும் மாதமாக இருக்கப்போகின்றது. புதிய முயற்சிகளில் தாராளமாக ஈடுபடலாம். சொந்த தொழிலில் புதிய முதலீடு செய்து, புதிய யுத்திகளைக் கையாளலாம். புதிய வேலைவாய்ப்புகளை தேடினால், நல்ல பலன் உண்டு. புதிய வீடு வாகனம் வாங்குவதற்கு யோகம் இருக்கிறது. பண பரிமாற்றத்தில் கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வும் சில பேருக்கு கிடைக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது. தினம் தோறும் விநாயகர் வழிபாடு தடைகளை தகர்த்தெறியும்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இதுநாள் வரை, குடும்பத்தில் இருந்த கருத்துவேறுபாடு நீங்கி, நிம்மதியான சூழ்நிலை நிலவும். இந்த மாதம் தொடங்கிய நாள் முதலே, உங்களுக்கு வெற்றிப் தொடங்கிவிட்டது என்றே சொல்லலாம். முன் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு, அனாவசிய வார்த்தைகளை பேசாமல், சூழ்நிலைக்கு தகுந்தார் போல், உங்களது நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பட்சத்தில், வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முடிந்த வரை சேமிக்க பழக்குங்கள். வீண் செலவுகளை, உங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்வது, உங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு நல்லது. தினம்தோறும் கண்களை மூடி சிவபெருமானை நினைத்து தியானத்தில் ஈடுபடுவது அமைதியை தேடி தரும்.

மீனம்
Meenam Rasi
மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சந்தோஷமான மாதமாக தான் இருக்கப்போகிறது. எடுத்த காரியத்தில் வெற்றி, புதிய வேலைவாய்ப்பு, சந்தோஷம், வருமானம், ஒருசேர வந்து மகிழ்ச்சி கடலில் மூழ்க போகிறீர்கள். இருப்பினும், எந்த இடத்திலும் தலைகணம் மேலே எழாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் கையில்தான் உள்ளது. குடும்பத்தில் அவ்வப்போது சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளதால், அனுசரித்து செல்வது நல்லது. வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. தினந்தோறும் சூரிய நமஸ்காரம் செய்து வருவது நன்மை தரும்.

English Overview:
Here we have May month Rasi palan 2020 in Tamil or May matha Rasi palangal in Tamil. This May month Rasi palangal covers Mesham to Meenam Rasi.