ஆகஸ்ட் மாத ராசி பலன் 2018

August matha rasi palan
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்கு இந்த மாதம் உங்களுக்கு தனவரவுகள் தாராளமாக இருக்கும். எடுக்கும் எவ்வகையான முயற்சிகளிலும் வெற்றிகள் குவியும். வியாபாரங்களில் நிகர லாபம் ஏற்படும். ஆன்மீக யாத்திரைகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் மகழ்ச்சி நிறைந்திருக்கும். வாங்கிய கடன்கள் அனைத்தையும் கட்டி முடிப்பீர்கள். திருமண வயதை எட்டியவர்களுக்கு திருமணம் நடத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் வெற்றியடையும்.

திருமண பொருத்தம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

- Advertisement -

ரிஷபம்
Rishabam Rasiரிஷப ராசியினருக்கு இம்மாதம் உடல் நிலையில் அவ்வப்போது சிறு சிறு பாதிப்புகள் வந்து போய்க்கொண்டிருக்கும். உங்கள் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ளும் முயற்சிகளில் வெற்றிகிட்டும். வெளிநபர்களுடன் தேவையற்ற பேச்சுகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. நல்ல பண வரவுகள் இருந்தாலும் வீண் விரயங்கள் ஏற்படும். வேலை சம்பந்தமான முயற்சிகளில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படும்.

மிதுனம்
Mithunam Rasi
மிதுன ராசியினருக்கு இம்மாதம் எதிர்பாராத பல பெரிய இடத்து மனிதர்களின் உதவிகள் கிட்டும். குடும்பம் மற்றும் நண்பர்களால் மகிழ்ச்சி ஏற்படும். திருமண வயதில் இருக்கும் பெண்களுக்கு நல்ல வரன்கள் கிடைக்கும். புதிய மனை மற்றும் வாகனம் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் சிறந்த பெயர் உண்டாகும். விவசாய தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் ஏற்படும். சொந்தபந்தங்களிடம் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசியினருக்கு இம்மாதம் குடும்பத்தில் உள்ளவர்களுடன் அடிக்கடி சிறு சண்டைகள் ஏற்படலாம். உங்கள் பேச்சுகளாலும் சில இடங்களில் தேவையற்ற பிரச்சனைகள் உண்டாகும். பணியிடங்களில் பிறரின் சூழ்ச்சிக்கு ஆளாகி அவப்பெயரை எடுக்க நேரிடும். பணி விவகாரங்களில் வெளி மனிதர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்களின் பொருளாதார நிலை நன்றாகவே இருக்கும். உடல்நலத்தில் அக்கறை கொள்ள வேண்டும்.

சிம்மம்
simmam
சிம்ம ராசியினருக்கு பணியிடங்களிலும் வியாபாரத்திலும் மறைமுக எதிரிகளின் தொல்லைகளுக்கு உள்ளாக நேரிடும். உடல் அடிக்கடி ஆரோக்கிய பின்னடைவை சந்திக்கும். பண வரவுகள் அவ்வளவு தாராளமாக இருக்காதென்றாலும் சிக்கலின்றி இம்மாத செலவுகளை சமாளித்து விட முடியும். உற்றார் உறவினர்களின் உதவிகள் தக்க சமயங்களில் கிட்டும். வெளியூர் மற்றும் வெளிநாடுகள் செல்லும் முயற்சிகளில் நன்மை ஏற்படும்.

கன்னி
Kanni Rasi
அரசியலில் இருப்பவர்களுக்கு மக்கள் செல்வாக்கு உண்டாகும். புதிய சொத்துக்களை வாங்கும் முயற்சிகள் தடங்கலின்றி வெற்றியடையும். பணியில் இருப்பவர்களுக்கு தாங்கள் விரும்பிய இடங்களில் பணி மாறுதல்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட தூர ஆன்மீக பயணங்களை சிலர் மேற்கொள்வீர்கள். பண வரவுகள் சரியான காலத்தில் வந்து சேரும்.

துலாம்
Thulam Rasi
துலாம் ராசியினருக்கு கல்வியில் நல்ல முன்னேற்றமான நிலையிருக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பணமும், புகழும் பெறக்கூடிய யோகம் ஏற்படும். எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். நீண்ட நாட்கள் வசூலாகாமல் இருந்த கடன் தொகைகள் வந்து சேரும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். உடல் நலத்தில் அக்கறை எடுத்து கொள்ள வேண்டும். குடும்பத்தில் மங்களகரமான நிகழ்வுகள் ஏற்படும்.

விருச்சகம்
Virichigam Rasi
விருச்சிக ராசியினர் கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. புதிய முயற்சிகளையும் சற்று ஒதுக்கி வைப்பது நல்லது. குடும்பத்தின் பொருளாதார நிலை நன்றாகவே இருக்கும். பெண்களுக்கு சற்று ஆரோக்கிய குறைவு ஏற்படும். உங்கள் சகோதர வழியில் தன வரவுகள் ஏற்படும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. உங்களின் உடல் நலம் நன்றாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரங்களில் சராசரியான லாபம் ஏற்படும்.

தனுசு
Dhanusu Rasi
தனுசு ராசியினருக்கு இம்மாதம் அலைச்சல்களால் உடல் மற்றும் மன சோர்வு உண்டாகும். உணவு விடயங்களில் கவனமுடன் இல்லாவிட்டால் ஆரோக்கிய குறைவை ஏற்படுத்தும். வாகனங்களில் பயணிக்கும் போது வேகத்தை குறைத்து செல்வது நல்லது. குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் சற்று அனுசரித்து செல்வது நலம். அரசியலில் இருப்பவர்கள் பிறரின் சதிச்செயல்களுக்கு உள்ளாக நேரிடும் என்பதால் கவனம் தேவை.

மகரம்
Magaram rasi
மகர ராசியினருக்கு உடலாரோக்கியத்தில் மந்த நிலை உண்டாகும். உங்களை தேடி வம்பு வழக்குகள் வரலாம் என்பதால் எதிலும் பொறுமையை கடைபிடித்தால் அவசியம். பிறருடனான பண விவகாரங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கலைஞர்கள் சராசரியான வாய்ப்புகளையே பெறுவார்கள். உத்தியோகஸ்தர்கள் தாங்கள் விரும்பிய பதவி உயர்வுகள் மற்றும் பணியிட மாற்றங்களை பெறுவார்கள்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசியினருக்கு உற்றார் உறவினர்களிடையே உங்களின் மதிப்பு உயரும். கணவன் மனைவி இடையே கருத்துவேறுபாடுகள், மனஸ்தாபங்கள் நீங்கும். திருமணம் கால தாமதம் ஆனவர்களுக்கு திருமணம் நடக்கும். வியாபாரம் மற்றும் தொழில்களில் எதிர்பாராத லாபம் கிட்டும். சமூகத்தில் பெரிய மனிதர்களின் உதவிகள் தக்க சமயத்தில் கிட்டும். குழந்தைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

மீனம்
Meenam Rasi
மீன ராசியினருக்கு எந்த ஒரு போராட்டங்களை கடந்த பின்பே எடுத்த காரியங்கள் வெற்றியடையும். வெளியூர் மற்றும் வெளிநாடுகள் செல்லும் முயற்சிகள் நினைத்தபடி நடக்கும். அவ்வப்போது உடல்நலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவ செலவுகளை ஏற்படுத்தும். உடன் பணிபுரிவோர்களிடம் எதிலும் சற்று நிதானத்தை கடைபிடிப்பதை நல்லது. பண வரவுகள் சராசரியான நிலையிலேயே இருக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு பதவிகள் கிடைக்கும் நிலை உண்டாகும்.

தின பலன், வார ராசி பலன், மாத ராசி பலன், திருமண பொருத்தம், பெயர் பொருத்தம் உள்ளிட்ட பல தகவல்களை அறிய எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have August month Rasi palan in Tamil. This is basically an astrological prediction for all zodiac signs. This August month Rasi palangal covers Mesham to Meenam Rasi.

- Advertisement -