தமிழகத்தில் 144 – என்னவெல்லாம் கிடைக்கும்? கிடைக்காது?

144

இன்று மாலை 6 மணி முதல் தமிழகம் முழுவதுமாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொது மக்கள் மிகவும் குழப்பமான சூழ்நிலையில் இருந்து வருகின்றனர். அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் என்று தமிழக அரசால் தொடர்ந்து கூறப்பட்டு வந்தாலும் மக்கள் பதற்றம் காரணமாக எது கிடைக்கும்? எது கிடைக்காது? என்று புரியாமல் சந்தைகளிலும், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டிலும் கூட்டம் கூட்டமாக வந்த வண்ணம் உள்ளனர்.

cmbt

அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் அன்றாட உணவிற்கு தேவையான அனைத்தும் கிடைக்கும் என்பதை மக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். உணவகங்களும் பார்சல் உணவிற்காக இயங்கும் என்றும் கூறப்படுகிறது. மாநில, மாவட்ட எல்லைகள் தடை செய்யப்படுவதால் மாவட்டங்களையும் மற்றும் மாநிலங்களையும் கடந்து செல்ல முடியாது. அவரர் இல்லங்களில், தங்களை தாங்களே தனிமைபடுத்தினால் தான் இந்த விஷக்கிருமியை வென்று காட்ட முடியும். அதை விடுத்து புரிதலின்றி கூட்டம் கூடுவதால் பாதிப்பு உங்களுக்கு மட்டும் அல்ல. உங்களை சுற்றி இருப்பவர்களையும் தான் என்பதை நினைவில் நிறுத்தி செயல்பட வேண்டும்.

என்னவெல்லாம் கிடைக்கும்?

1. மளிகை கடைகள் வழக்கம் போல் செயல்படும். அன்றாட பயன்பாட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

2. காய்கறிக் கடைகள் இயங்கும். காய்கறிகளை மொத்த மொத்தமாக வாங்க வேண்டிய அவசியம் இல்லை. தொடர்ந்து காய்கறிகள் கிடைக்கும். மீன், இறைச்சியும் கிடைக்கும்.

- Advertisement -

3. ஆவின் பாலகங்கள் திறக்கப்பட்டிருக்கும். பாலிற்கு தட்டுப்பாடு ஏற்பாடாது.

4. உணவகங்கள் செயல்படும். ஆனால் அங்கேயே அமர்ந்து சாப்பிட அனுமதி தடை செய்யப்பட்டுள்ளது. பார்சல் வாங்கிக் கொண்டு செல்லலாம். அம்மா உணவகங்களும் வழக்கம் போல் செயல்படும்.

important-things

5. மருந்துக்கடைகள் இயங்கும். அவசியத் தேவைகளுக்கு மருந்தகங்களை நாடி செல்ல முடியும்.

6. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் தொடர்ந்து செயல்படும். கொரோனா குறித்த அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் உடனே மருத்துவமனையை நாடுவது அவசியமாகும்.

7. ஏ‌டி‌எம் சென்டர்கள், வங்கிகளில் குறிப்பிட்ட சேவைகள் தொடர்ந்து இயங்கும். அவசிய தேவைகளுக்கு மட்டும் அவற்றை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

8. பெட்ரோல் பங்க்குகள் தொடர்ந்து இயங்கும். அரசு மற்றும் அவரச தேவைகளுக்கு அவற்றை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

9. நீதிமன்றங்கள், மாவட்ட நிர்வாகங்கள், தீயணைப்பு துறை, மெட்ரோ குடிநீர் விநியோகம், கேஸ் விநியோகம், மின்வாரியம் போன்றவையும் அவசிய தேவைகளுக்கு இயங்கும்.

என்னவெல்லாம் கிடைக்காது?

train

1. அரசு மற்றும் தனியார் பேருந்துகள் முற்றிலுமாக இயங்காது.

2. வெளி மாநில, மாவட்ட மற்றும் புறநகர் ரெயில் சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

3. தனியார் அலுவலகங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இருக்காது. வீட்டிலேயே செய்யக்கூடிய பணிகளை அவரவர் இல்லங்களில் இருந்தபடியே செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

4. டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்படும்.

5. தியேட்டர்கள், வணிக வளாகங்கள், ரெஸ்டாரண்டுகள் என்று மக்கள் கூடக்கூடிய அனாவசியாமான எந்த கட்டிடங்களும் இயங்காது.

6. ஆட்டோ மற்றும் வாடை கார்கள் முற்றிலும் நிறுத்தப்படும்.

Coronavirus

144 தடை அமலில் இருக்கும் போது வெளியில் செல்லும் போது 5 பேருக்கு மேல் ஒன்றாக செல்வதை தவிர்ப்பது நல்லது. மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவு உள்ளது. 1 மாதம் வரை சிறை தண்டனை மற்றும் ரூபாய் 200 அபராதம் விதிக்கப்படும். மருத்துவர்கள், காவலர்கள், மருத்துவ சார் பணியாளர்கள், ஊடகங்கள் போன்றவர்கள் மட்டும் தேவையான அறிவுரைகளுடன் செயலாற்றப்படுவார்கள்.

எப்படி மனிதரை கொரோனா சென்றடையும்?

உணவு பொருட்கள் மூலம் இந்த கொரோனா வைரஸ் பரவுவதில்லை. காற்றிலும் இது பரவாது. தவறான வதந்திகளை பரப்புவோர் மீது சைபர் க்ரைம் நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தும்மும் போதோ அல்லது இருமும் போதோ வரும் திரவத்திலிருந்து வெளியேறும் இந்த வைரஸ் சில மணி நேரம் வரை உயிருடன் அங்கேயே இருக்கும். அதன் மீது கைகள் வைத்து உடனே முகத்திற்கு அருகில் கொண்டு சென்றால் மூக்கு மற்றும் வாய் வழியாக சுவாசம் மூலம் இந்த வைரஸ் நம் உடலின் உள்ளே செல்லும். அதனால் தான் முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது அறிவுறுத்தப்பட்டுள்ளது. மக்கள் குழப்பமின்றி நிதானமாக அரசிற்கு முழு ஒத்துழைப்பு அளிப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

English Overview:
Here we have 144 in tamilnadu for corona. 144 in tamilnadu today. 144 order in tamilnadu. 144 in tamilnadu. 144 thadai utharavu in Tamil. 144 thadai utharavu in Tamil.