சதா இட்லி தோசைன்னு செஞ்சு செஞ்சு அழுத்து போச்சா? ஹெல்தியான ஈஸி டிபன் இப்படி செஞ்சு கொடுக்க ட்ரை பண்ணுங்க. தட்டுல கொஞ்சம் கூட மிஞ்சாது.

aval-upma2

டெய்லி இட்லி, தோசை, உப்புமா செஞ்சி அலுத்து போனவர்களுக்கு இந்த டிஷ் ரொம்பவே பயனுள்ளதாக இருக்கும். இந்த டிஷ் ரொம்பவும் ஹெல்தியான உடலுக்கு தேவையான சத்துக்களும் அடங்கியிருப்பதால் கட்டாயம் அடிக்கடி செய்து சாப்பிடுவது நல்லது. அதிலும் குறிப்பாக குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் இதை அடிக்கடி செய்து கொடுத்தால் ஆரோக்கியமாக இருப்பார்கள். அப்படி என்ன ஒரு டிஷ் என்று அதிகம் நீங்கள் யோசிக்கத் தேவையில்லை. சாதாரண கடைகளில் கிடைக்கும் அவல் கொண்டு தயாரிக்கப்படும் புதுவகையான அவல் கிச்சடி என்று சொல்லிக் கொள்ளலாம். அவல் கிச்சடி எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

aval-upma

அவல் கிச்சடி செய்ய தேவையான பொருட்கள்:
அவல் – 1 கப், கடுகு, உளுந்து, சீரகம் – தலா 1/2 டீஸ்பூன், பூண்டு – மூன்று பல், வெங்காயம் – 1, தக்காளி – 1, மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன், மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன், மல்லித் தூள் – 1/2 டீஸ்பூன், பெருங்காயம் – ஒரு சிட்டிகை, கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு – 150 கிராம். எண்ணெய் – தேவையான அளவு.

அவல் கிச்சடி செய்முறை விளக்கம்:
அவல் ஒரு கப் அளவிற்கு எடுத்து கொள்ள வேண்டும். வெள்ளை அல்லது சிவப்பு எந்த அவலாக இருந்தாலும் பரவாயில்லை. மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். பின்னர் லேசாக தண்ணீர் ஊற்றி புட்டு பதத்திற்கு உதிரி உதிரியாக உதிர்த்து வைத்துக் கொள்ளுங்கள். அதனை இட்லி பாத்திரத்தில் 5 நிமிடம் வைத்து அவித்து எடுத்துக் கொள்ளுங்கள்.

aval

பின்னர் ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, சீரகம் முறையே அரை டீஸ்பூன் அளவிற்கு சேர்த்து தாளித்தம் செய்யவும். பின்னர் மூன்று பல் பூண்டை பொடிப் பொடியாக நறுக்கி சேர்த்து வதக்கவும். இப்போது நறுக்கிய வெங்காயம் சேர்த்து அதனுடன் கறிவேப்பிலை ஒரு கொத்து சேர்த்து வதக்கிக் கொள்ளவும். வெங்காயம் நன்கு வறுபட்டதும் தக்காளி சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

- Advertisement -

தக்காளி மசிந்து நன்கு வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், பெருங்காயத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். மசாலா வாசனை போக வதங்கியதும் நறுக்கி வைத்துள்ள காய்கறிகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். இந்த இடத்தில் காய்கறிக்கு பதிலாக அசைவம் சாப்பிடுபவர்கள் முட்டை சேர்த்து வதக்கிக் கொள்ளலாம்.

aval-upma1

காய்கறிகள் நன்கு வறுபட்டதும் உதிர்த்து வைத்துள்ள அவலை சேர்த்து நன்கு பிரட்டி எடுத்து உப்பு சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். அவ்வளவு தாங்க ரொம்ப ரொம்ப சுவையான அவல் கார கிச்சடி ரெடி. அவல் கிச்சடி உடலுக்கு ஆரோக்கியம் தரும் என்பதால் சதா இட்லி தோசை என்று செய்து சாப்பிட்டவர்கள் இது போல் புதிதாக அடிக்கடி தாராளமாக உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

aval1

காலையிலேயே அவல் சாப்பிடுவதன் மூலம் உடல் உஷ்ணம் தணிந்து நாள் முழுவதும் உற்சாகத்துடன் வைத்திருக்க உதவும். சிறிதளவு சாப்பிட்டாலும் வயிறு நிரம்பி விடும். செய்வதற்கும் மிகவும் சுலபமான முறை தான். வித்தியாசமான சுவையில் புதுவிதமான டிபன் உங்கள் வீட்டில் நீங்களும் செய்து அசத்துங்கள்.

இதையும் படிக்கலாமே
பரோட்டா சாப்பிட இனிமே ஹோட்டலுக்கு போக வேண்டாம். நம்ம வீட்டிலேயே ஈசியா, ஹோட்டல் சுவையில் இப்படி பரோட்டா செஞ்சு பாருங்க!

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.