கருப்பு நிற உடை இந்த ராசிக்காரர்கள் தவறியும் அணிந்து விடாதீர்கள்! கருப்பு ஆடையை தவிர்க்க வேண்டிய ராசிகள்!

black-astro

ஒரு சில வீடுகளில் கருப்பு நிற உடை அணிவதை தவிர்க்க கூறி வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவார்கள். கருப்பு நிற உடை அணிந்தால் நம் குடும்பத்திற்கு ஆகாது என்றெல்லாம் சொல்லி வைத்தார்கள் நம் முன்னோர்கள். இப்படி இருக்க எந்த ராசிக்காரர்கள் கட்டாயம் கருப்பு நிற உடையை தவிர்க்க வேண்டும் என்று ஜோதிடம் கூறுகிறது? என்பதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

black-umbrella

ஒவ்வொரு ராசிக்காரர்களும் ஒவ்வொருவிதமான உடைகளை விருப்பமானதாக உடுத்திக் கொள்வது உண்டு. தங்களுக்கு பிடித்த நிற உடைகளை தவிர்ப்பதை அவர்கள் விரும்புவது இல்லை. வீட்டில் என்ன தான் சொன்னாலும் கருப்பு நிற உடையை சிலர் அணிந்து கொண்டு சுற்றிக் கொண்டு தான் இருப்பார்கள். நல்ல நாள், விசேஷம், கிழமை என்று வரும் பொழுது கருப்பு நிற உடையை உடுத்திக் கொண்டு வருவதை பலரும் எதிர்ப்பார்கள். கருப்பு நிற உடையை அணிந்து கொள்வதால் ரத்த காயம் போன்ற விஷயங்கள் நடைபெறும் என்பதும் முன்னோர்களுடைய நம்பிக்கை.

குறிப்பாக கோவில்களுக்கு செல்லும் பொழுது கருப்பு நிற உடையை உடுத்திக் கொள்வதை தவிர்ப்பது நல்லது என்பார்கள். கருப்பு என்பது சனி பகவானுக்கு உகந்த நிறம் ஆகும். மேலும் சனி பகவானுடைய சன்னிதியில் நேராக நின்று வணங்கக் கூடாது என்றும் கூறுவார்கள். சனியை சாய்வாக நின்று தரிசிக்க வேண்டும். கருப்பு நிற உடையை அணிந்து கொள்ளக் கூடாது என்று கூறுவதற்கும், சனி பகவானை நேராக நின்று வணங்கக் கூடாது என்று சொல்வதற்கும் ஒரே காரணம் தான்.

sani-temple-1

கருப்பு என்பது எதையும் உள்வாங்கக் கூடிய ஒருவகை நிறமாகும். சனி பகவானுடைய அதிகமான ஆற்றல் மற்றும் அவருடைய கருநிறம் ஏற்கனவே ஒரு அதிர்வலைகளை உண்டு பண்ணும். எனவே அவருடைய சந்நிதியில் நேராக நின்று வணங்கும் பொழுது நம்முடைய அதிர்வலைகளை உள்வாங்கக் கூடிய திறன் மட்டுப்படும். மேலும் சனி பகவானுடைய பார்வை நம் மீது படக்கூடாது என்பது நியதி.

- Advertisement -

சனி கிரகத்தின் உடைய ஆற்றல் நம்மை சில சமயங்களில் கருப்புநிற உடையை உடுத்திக் கொள்வதாலும் செயலிழக்க செய்துவிடும். எனவே சில பேர் கருப்பு நிற உடையை அணிந்து கொள்வதை தவிர்ப்பது தான் நல்லது. அது அவரவர்களுடைய சுய ஜாதகம் மற்றும் குடும்பப் பழக்க, வழக்கங்களின் அடிப்படையில் செய்யப்படும் ஒரு நடைமுறையாகும்.

சனி தோஷம் இருப்பவர்கள் கட்டாயம் கருப்பு நிற உடையை உடுத்தக் கூடாது. கண்டக சனி, ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி என்று எவ்விதமான சனி தோஷம் இருந்தாலும் நீங்கள் கருப்பு நிறத்தை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது. லக்ன அடிப்படையில் மேஷ லக்னம், கடக லக்னம், சிம்ம லக்னம், விருச்சிக லக்னம், தனுசு லக்னம், மீன லக்னம் ஆகிய லக்னகாரர்கள் கருப்பு நிற உடையை அணிந்து கொண்டு செல்வதை தவிர்ப்பது உத்தமம்.

ராசியின் அடிப்படையில் மேஷ ராசி, கடக ராசி, சிம்ம ராசி, விருச்சிக ராசி, தனுசு ராசி, மகர ராசி, கும்ப ராசி, மீன ராசி ஆகிய ராசிக்காரர்கள் கட்டாயம் கருப்பு நிற உடைகளை கூடுமானவரை தவிர்த்து கொள்வது நல்லது என்கிறது ஜோதிடம். அப்படி தெரியாமல் தவறி நீங்கள் கருப்பு உடை அணிய நேர்ந்தால் அன்றைய நாளில் கருப்பு நிற நாய் மற்றும் கருப்பு நிற காராம் பசு ஆகிய ஜீவராசிகளுக்கு உணவு தானம் செய்ய நல்லது நடக்கும்.