சனிக்கிழமையில் தப்பி தவறியும் செய்யவே கூடாத 5 விஷயங்கள் என்ன?

sani-pickle

சனிக்கிழமை சனி பகவானுக்கு உரிய கிழமையாகும். அந்நாளில் நாம் செய்யும் நல்லவைகளும், கெட்டவைகளும் சனி பகவானுடைய பார்வையில் கண்டிப்பாக பட்டு விடும். நாம் செய்யும் நல்லவைகளுக்கு நல்ல பலன்களையும், கெட்டவைகளுக்கு கெட்ட பலன்களையும் உடனுக்குடன் கட்டாயம் அனுபவித்தே ஆக வேண்டியிருக்கும். நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களிலும் கவனமாக இருப்பது அவசியமாகும். அந்த வகையில் சனிக்கிழமைகளில் தவறியும் செய்ய கூடாத 5 விஷயங்கள் என்ன? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

curd

சனிக்கிழமையில் பால், தயிர் போன்ற உணவுகளை தவிர்ப்பது நல்லது. சனி கிரகத்திற்கு பகை கிரகமாக சுக்கிரன் இருப்பதால் சுக்ரனுக்கு உரிய பால், தயிர் உணவுகளை அப்படியே சாப்பிடுவது நல்லதல்ல! அதன் நிறத்தை மாற்ற பாலில் குங்குமப்பூ கலந்து சாப்பிடலாம். அது போல் தயிரில் புதினா, வெல்லம் போன்றவற்றை கலந்து சாப்பிடுவது உத்தமம்.

வியாழன் கிழமையில் குபேரனுக்கு உரிய புளிப்பு சுவையுள்ள ஊறுகாய் சாப்பிடுவது சிறந்த பலனை தரும். ஆனால் அதையே சனிக்கிழமையில் நீங்கள் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. புளிப்பு சுவைக்கு சனி பகவானுக்கும் ஆகவே ஆகாது. இதனால் உடல் நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் சனிக்கிழமையில் இவற்றை சேர்க்க வேண்டாம்.

kashmiri-chilli-powder

சனிக்கிழமைகளில் சமைக்கும் பொழுது பச்சை மிளகாயை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் சிவப்பு மிளகாயை தவிர்ப்பது நல்லது. சிவப்பு நிறமானது செவ்வாய் மற்றும் சூரியனுக்கு உகந்த நிறங்களாகும். இவைகள் சனிபகவானுக்கு பகை கிரகங்களாக இருப்பதால் இவற்றை கூடுமானவரை தவிர்ப்பது உத்தமம். சிவப்பு நிறத்தில் இருக்கும் தானியங்களை தவிர்ப்பது நல்லது. சிவப்பு நிறத்தில் இருக்கும் தானியங்களை சேர்க்கும் பொழுது செவ்வாயின் ஆற்றல் அதிகரிப்பதால், சனி பகவானுடைய எதிர்ப்புக்கு ஆளாக வேண்டியிருக்கும், இதனால் உடல்நல கோளாறுகள் ஏற்படும்.

- Advertisement -

சனிக்கிழமையில் மாமிச உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. சனிபகவான் அமைதி மற்றும் இறை வழியில் செல்வதை அதிகமாக விரும்புகிறார் எனவே மாமிசம் சாப்பிட்டால் சனிபகவானுடைய பகைக்கு ஆளாக வேண்டியிருக்கும். பொதுவாகவே வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மாமிசம் தவிர்ப்பது உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. சனிக்கிழமையில் மாமிசம் சாப்பிடுபவர்களுக்கு அஜீரணக் கோளாறுகளும், வாய்வு தொந்தரவுகளும் ஏற்படும். மனதில் மூர்க்க குணம் உண்டாகும். எனவே சனிக்கிழமையில் மாமிசம் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

fish 65 2

சனிக்கிழமைகளில் மது, மாமிசம், புகைப்பிடிப்பது போன்ற செயல்களை செய்யும் பொழுது அவர்களுக்கு விரைவாகவே ஆயுள் குறையும். ஆயுள் காரகனாக இருக்கும் சனிபகவான் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டே இருப்பார். அதிலும் சனிக்கிழமையில் நாம் செய்யும் செயல்களுக்கு தனி கவனம் செலுத்துவார். எனவே சனிக்கிழமைகளில் நாம் செய்யும் சிறு சிறு விஷயங்களில் நமக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை உண்டாக்கும் என்பதால் கூடுமானவரை மேற்கூறிய விஷயங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது.

sani-baghavan

சனிக்கிழமைகளில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்கள் வாங்குவது, இறை வழிபாடுகள் செய்வது, தியானம் மேற்கொள்வது, தானங்கள் செய்வது போன்ற விஷயங்களை தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு வாழ்க்கையில் இன்னல்கள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும். உங்களுக்கு எத்தனையோ துன்பங்கள் இருந்தாலும் சனி பகவானுடைய அருளைப் பெற்று விட்டால் எவரும் அதனை தடுக்க முடியாது. இதை உணர்த்தவே ‘சனி கொடுக்க எவர் தடுப்பார்’ என்ற பழமொழியும் உண்டானது.