காதல் பாதியில் முடிந்தது – காதல் தோல்வி கவிதை

Love kavithai

விடியலுக்கில்லை தூரம் – விடியும்
மனதில் இன்னும் ஏன் பாரம்..
மயிலே உன்னை நான் மயக்கவும் இல்லை
மனதால் என்றும் வெறுக்கவும் இல்லை..

kadhal tholvi kavithai image
kadhal tholvi kavithai image

பாச பந்தங்கள் உண்டானது
அது பாதியில் ஏனோ முடிந்து போனது..
நேசமும் பாசமும் தோற்று போனது
என் நெஞ்சத்தில் ஈரமும் காய்ந்து போனது..

துள்ளி திரிந்த காலம் இன்று
தூரம் சென்று மறைந்து போனது..
துன்பத்தை மட்டுமே ஏந்தி இன்று
துடிக்கும் மனது வெந்து சாகுது..

Love failure kavithai image
Love failure kavithai image

காதலில் தோல்வியுற்றவர்கள் படும் பாடு சொல்லி மாளாது. அதிலும் ஒரு பெண்ணும் ஆணும் பல நாட்கள் காதலித்து விட்டு, குடும்ப சூழ்நிலை காரணமாக பிரிவது என்பது ஆயுள் தண்டனையை காட்டிலும் அதிக வேதனை தருவது. இது போன்ற வேதனையில் இருப்பவர்களுக்கு இந்த கவிதை சமர்ப்பணம்.

இது போன்ற மேலும் பல காதல் தோல்வி கவிதைகள், காதல் கவிதைகள், அன்பை வெளிப்படுத்தும் கவிதைகள் என பல அற்புதமான கவிதை தொகுப்பை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.