சிறு குழந்தை ஆடும் அசத்தலான பரத நாட்டியம் வீடியோ

Barathanatiyam

பரத நாட்டியம் என்பது தமிழ்நாட்டிற்குரிய ஒரு மிக சிறந்த நடனமாகும். பல்லாயிரம் வருடங்களுக்கு முன் தோன்றிய இந்த கலையின் கடவுளாக சிவ பெருமான் இருக்கிறார். இன்றும் பிரதம ஆடும் பலர் முதலில் வணங்குவது நடராஜ பெருமானை தான். பரதத்தில் கை தேர்ந்த பலரும் தமிழகத்தில் உள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் ரசிக்கும் வண்ணம் ஒரு சிறு குழந்தையின் நடனம் உள்ளது. இதோ அதன் காட்சி.

பரத நாட்டியம் குறித்த சுருக்கமான வரலாறு:

பரதம் என்ற சொல்லுக்குள்ள பல பொருள்கள் உள்ளன. இதில் ப என்ற எழுத்து “பாவம்” என்ற சொல்லை குறிக்கிறது, ர என்ற எழுத்து “ராகம்” என்ற சொல்லை குறிக்கிறது. த என்ற எழுத்து “தாளம்” என்ற சொல்லை குறிக்கிறது. ஆரம்பத்தில் தமிழகத்தில் இருந்த இந்த கலை தற்போது இந்தியாவையும் தாண்டி உலக அளவில் பிரசித்தி பெற்று விளங்குகிறது.

நவரசங்களையும் முகத்தில் வெளிப்படுத்தக்கூடிய இந்த கலையை ஆரம்பகாலத்தில் தமிழகத்தில் இறைபணி செய்து வந்த தேவதாசி பெண்கள் ஆடி வந்தனர். இன்றும் இந்த நடனத்தை கற்பதில் பெண்களுக்கே ஆர்வம் அதிகம் உள்ளது. இந்த கலையை அறிந்த ஆண்கள் வெகு சிலர் தான். இந்த நடனத்தை ஆடுவதற்கு இசை கருவிகள் அவசியமாகிறது. இசை இன்றி இந்த நடனத்தை ஆடுவது கடினம். அதே போல எந்த வித உணர்ச்சியையும் இந்த நடனத்தின் மூலம் உணர்த்த முடியும் என்பது குறிப்பிட தக்கது.