பாரதிதாசன் வாழ்க்கை வரலாறு

Bharathidhasan

பாரதிதாசன் அவர்கள் பிரெஞ்சு மொழியில் ஆரம்பகால பள்ளிப்படிப்பினை மேற்கொண்டாலும் அவர் தமிழ் மொழி மீது கொண்ட ஈடுபாடு காரணமாக தமிழ் மொழியினை கற்க ஆரம்பித்து 16 வயதிலேயே தமிழ் மொழியில் புலமை அடைந்தார். பாரதிதாசன் அவரகள் தமிழ் இலக்கிய வார்த்தை மொழிகளின் சொந்தக்காரரான பாரதியார் மீது மீது கொண்ட ஈர்ப்பினால் அவரது பெயரினை பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றின் தொகுப்பினை கீழே காணலாம்.

barathi dasan-2

பாரதிதாசன் பிறப்பு:

பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் தமிழகத்தின் அருகில் உள்ள பாண்டிச்சேரி என்கிற
புதுவையில் ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி 1891ஆம் ஆண்டு பிறந்தார். இவருடைய பெற்றோர்களின் பெயர் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மையார் என்கிற தம்பதிக்கு மகனாய் பிறந்தார்.இவருடைய இயற்பெயர் “சுப்புரத்தினம்” இவர் தனது தந்தையின் மீது கொண்ட அளவு கொண்ட பாசத்தினால் அவரது பெயரின் முதற் பாதியில் கனகசபை என்கிற அவரது அப்பாவின் பெயரினை சேர்த்து கனக சுப்புரத்தினம் என்று சேர்த்துக்கொண்டார். பிறகு அவரது பள்ளிப்படிப்பு முதல் அவர் கனகசுப்புரத்தினம் என்றே அனைவராலும் அழைக்கப்பட்டார்.

இயற்பெயர் – கனகசுப்புரத்தினம்
மருவிய பெயர் – பாரதிதாசன்
பிறந்த தேதி மற்றும் ஆண்டு – ஏப்ரல் 29 1891
பிறந்த இடம் – புதுவை

பாரதிதாசன் கல்வி மற்றும் படிப்பு:

பாரதிதாசன் அவர்களின் தந்தையான கனகசுப்புரத்தினம் அவர்கள் புதுவையில் ஒரு மிக பெரிய செல்வந்தராக வலம் வந்தார். அந்த சமயத்தில் ஆங்கிலேயர் ஆதிக்கம் புதுவையில் இருந்ததால் அவர் பிரெஞ்சு பள்ளியில் தனது ஆரம்ப படிப்பை தொடங்கினார். இருப்பினும் அவருக்கு தமிழ் மொழியின் மீது இருந்த அன்பின் காரணமாக தமிழ் மொழியினை முறையாக கற்க ஆரம்பித்தார்.

- Advertisement -

barathi dasan-1

பிறகு அவரது கல்லூரி படிப்பில் தமிழ் மொழியினை தேர்ந்தெடுத்து இளங்கலை தமிழ் பயின்று பல்கலைகழகத்தில் முதல் மாணவராக தேர்ச்சிபெற்றார். பிறகு அவர் காரைக்காலில் உள்ள அரசு கல்லூரியில் தமிழ் ஆசிரியராக பணியாற்ற துவங்கினார்.

பாரதியார் மற்றும் பாரதிதாசன் இடையேயான சந்திப்பு:

ஒருமுறை பாரதிதாசன் அவர்கள் அவருடைய நண்பரின் திருமண விழாவிற்கு சென்றிருந்த போது ஒரு பாடலை பாடினார். அந்த விழாவிற்கு பாரதியாரும் வந்திருந்தார் அந்த பாடலே பாரதிதாசனை பாரதியாருக்கு அறிமுகம் செய்ய வைத்தது.

அந்த பாடல் பாரதியாருக்கு மிகவும் பிடித்து போக அந்த பாடலை தனது சுதேசமித்திரன் இதழில் அவர் வெளியிட்டார்.

barathi dasan-3

பாரதிதாசனின் மனைவி மற்றும் குழந்தைகள்:

பாரதிதாசன் அவர்கள் தனது 29 ஆம் வயதில் 1920 ஆம் ஆண்டு பழநி அம்மையாரை மணந்தார். பிறகு இவர்கள் இருவருக்கும் 8 ஆண்டுகள் கழித்து 1928ஆம் ஆண்டு ஒரு மகன் பிறந்தார். பிறகு அந்த தம்பதிக்கு 3 பெண் பிள்ளைகள் பிறந்தனர். பாரதிதாசன் அவர்களின் பிள்ளைகளின் பெயர்கள் முறையே கீழே உள்ளது.

மகன் – மன்னர்மன்னன்

மகள்கள் – சரஸ்வதி, வசந்தா மற்றும் ரமணி

பாரதிதாசனின் அரசியல் ஈடுபாடு:

தமிழ் மொழிக்காக தனது தொண்டினை ஆற்றிய அவர் அரசியலிலும் தனது தொண்டினை ஆற்ற தவறவில்லை. ஆம் பாரதிதாசன் அவர்கள் 1954ஆம் ஆண்டு புதுவை சட்டமன்ற தேர்தலில் நின்று தனது முதல் தேர்தலிலேயே சட்டமன்ற உறுப்பினர் ஆனார். பிறகு 1960ஆம் ஆண்டு மீண்டும் தேர்தலில் நின்று அவர் தோல்வியை தழுவினார்.

பெரியாரின் கொள்கைகளில் ஆர்வம் நிறைந்த அவர் தனது பாடல்கள் மூலம் கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு மற்றும் மத எதிர்ப்பு போன்ற பெரியாரின் கொள்கைகளை தழுவி தனது பங்கினை அவரது பாடல்கள் மூலம் வழங்கினார்.

barathi dasan-4

பாரதிதாசன் சிறப்பு பெயர்கள் :

பாவேந்தர்

புரட்சிக்கவி

புரட்சி கவிஞர்

பாரதிதாசன் நூல்கள்:

பாரதிதாசன் மொத்தம் 86 நூல்களை எழுதியுள்ளார் மற்றும் பல்வேறு திரைப்பட வசனங்கள் மற்றும் பாடல்களை எழுதியுள்ளார். மேலும் இவர் குயில் என்ற வார இதழை வெளியிட்டு வந்தார்.

அவரது படைப்பில் சில முக்கியமான படைப்புகளை கீழே காணலாம்.

பாண்டியன் பரிசு

இருண்ட வீடு

அழகின் சிரிப்பு

குடும்பவிளக்கு

இசைஅமுது

எதிர்பாராத முத்தம்

குறிஞ்சித்திட்டு

முல்லைக்காடு

விடுதலை வேட்கை

பாரதிதாசன் மறைவு:

பாரதிதாசன் அவர்கள் தனது 73 ஆவது வயதில் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி 1964ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக மறைந்தார்.

English Overview:
Here we have Barathi Dasan biography in Tamil. Above we have Barathi Dasan history in Tamil. We can also say it as Barathi Dasan varalaru in Tamil or Barathi Dasan essay in Tamil or Barathi Dasan Katturai in Tamil.

ஜான்சி ராணி வாழ்க்கை வரலாறு பற்றி தெரிந்துகொள்ள இங்கு கிளிக் செய்யவும்