இக்கோயிலின் பிரசாதம் சாப்பிட்டால் கல்வி, கலைகளில் சிறக்கலாம்

basara-saraswathi
- Advertisement -

செல்வமகளான லட்சுமி எந்த ஒரு மனிதனிடமும் நிரந்தமாக நிலை கொள்ள தன்மை படைத்தவள். ஆனால் கலைமகளான சரஸ்வதி தேவியின் கடாட்சம் ஒரு மனிதனின் மீது பட்டால் உலகமே அவனது காலடியில் விழுந்து வணங்கும் அளவிற்கு கல்வி அறிவையும், ஞானத்தையும் வணங்குவாள். அந்த வகையில் பக்தர்களுக்கு அருள்மழை பொழிகின்ற பஸாரா “ஸ்ரீ ஞானசரஸ்வதி கோயில் சிறப்புக்கள்” குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.

saraswathi 2

அருள்மிகு பஸாரா ஞானசரஸ்வதி கோயில் வரலாறு

மிகவும் புராதனமான கோயில் என்று பெயர்பெற்றது இந்த பஸாரா ஞானசரஸ்வதி கோயில். இக்கோயிலின் தெய்வமாக இருப்பவள் கலைமகளான சரஸ்வதி தேவி ஆவாள். அவள் இங்கு ஞானசரஸ்வதி என்கிற பெயரில் அழைக்கப்படுகிறாள். சாளுக்கிய மன்னர்களால் கட்டப்பட்ட கோயில் என்று தல வரலாறு கூறுகிறது. இக்கோயிலின் தீர்த்தமாக அருகில் ஓடும் கோதாவரி நதி இருக்கிறது.

- Advertisement -

Goddess Saraswathi

புராணங்களின் படி இந்த தலத்திற்கு பாரத நாட்டின் இரு பெரும் காவியங்களான ராமாயணம், மகாபாரதம் தந்த வால்மீகி மற்றும் வேத வியாசர் ஆகியோர் வந்து வழிபட்டுள்ளனர். வால்மீகி இங்குள்ள சரஸ்வதி தேவியை வணங்கிய பின்பே தனது ராமாயண காவியத்தை இயற்றியதாக கூறப்படுகிறது. வேத வியாசருக்கு இத்தலத்தில் காட்சி தந்த சரஸ்வதி தேவி லட்சுமி, சரஸ்வதி, சக்தி ஆகிய மூன்று தேவியர்களின் தன்மை கொண்ட ஒரு அம்மன் கோயிலை உருவாக்க சொல்லி, சரஸ்வதியின் கட்டளை படி வியாசர் உருவாக்கிய கோயில் தான் இந்த ஞானசரஸ்வதி தேவி கோயில் என கூறப்படுகிறது.

அருள்மிகு பஸாரா ஞானசரஸ்வதி கோயில் சிறப்புகள்

- Advertisement -

நாட்டில் சரஸ்வதி தேவிக்கென்று இருக்கும் ஒரு சில ஆலயங்களில், மிகவும் புகழ் பெற்ற ஆலயமாக பஸாரா ஞானசரஸ்வதி கோயில் இருக்கிறது. இந்த கோயிலின் கொடிமரத்தை தாண்டி உள்ளே நுழையும் போது சூர்யேஸ்வர சுவாமி சிவன் சந்நிதி இருக்கிறது. இந்த சிவலிங்கத்தின் மீது வருடம் முழுவதும் சூரியனின் ஒளி விழுவதால் இவர் சூர்யேஸ்வர சுவாமி என்று அழைக்கப்படுகிறார். இந்த ஆலயத்தை சுற்றி இந்திரன், சூரியன், வியாசர், வால்மீகி, விஷ்ணு, விநாயக, புத்ர, சிவன் ஆகிய பெயர்களில் எட்டு தீர்த்தங்கள் உள்ளன.

இங்கு மூன்று தேவியருக்கும் தனி தனி சந்நிதிகள் இருந்தாலும் ஞானசரஸ்வதி தேவியே பிரதான தெய்வமாக வணங்கப்படுகிறார். எப்போதும் மஞ்சள் காப்புடன் இருக்கும் சரஸ்வதியின் மீதிருக்கும் மஞ்சளே பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது. இப்பிரசாதத்தை சாப்பிடுவதால் கல்வி, கலைகளில் சிறக்கலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

- Advertisement -

இக்கோயிலில் வியாசர், வால்மீகி ஆகியோருக்கு தனி சந்நிதிகள் இருக்கின்றன. அவர்களை வழிபடுபவர்களுக்கு பல நன்மைகள் ஏற்படும் என பக்தர்கள் கூறுகிறார்கள். இந்த பஸாரா பகுதியில் தத்தாத்ரேயர் பகவானுக்கும் கோயில் இருக்கிறது. இங்கு வழிபடுவதால் அனைத்திலும் ஞானம் பெற முடியும் என்பது ஐதீகம்.

சரஸ்வதி பூஜை, விஜயதசமி தினங்களில் இக்கோயிலில் குழந்தைகளுக்கு நடக்கும் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து தங்கள் பக்தர்கள் தங்கள் குழந்தைகளுடன் கலந்து கொள்கின்றனர். அப்போது சரஸ்வதியை வணங்கி குழந்தைகளுக்கு எழுத்தறிவிப்பதால் குழந்தைகள் கல்வி மற்றும் கலைகளில் சிறப்பதாக கூறுகிறார்கள்.

கோயில் அமைவிடம்

அருள்மிகு ஞானசரஸ்வதி கோயில் தெலங்கானா மாநிலத்தில் இருக்கும் அடிலாபாத் மாவட்டத்தில் பஸாரா என்கிற ஊரில் அமைந்துள்ளது.

கோயில் நடை திறந்திருக்கும் நேரம்

அதிகாலை 4 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மாலை 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும்.

கோயில் முகவரி

அருள்மிகு ஞானசரஸ்வதி அம்மன் கோயில்
பஸாரா
அடிலாபாத் மாவட்டம் – 504101
தெலங்கானா மாநிலம்

தொலைபேசி எண்

48752 – 243503

இதையும் படிக்கலாமே:
செட்டிபுண்ணியம் கோயில் சிறப்புக்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Basara saraswati temple details in Tamil. It is also called Basara gnana saraswati In Tamil or Telangana temples in Tamil or Basara gnana saraswati temple history In Tamil.

- Advertisement -