இரவில் தூங்கச் செல்லும் முன் இந்த விஷயத்தை செய்துவிட்டு படுத்தால் யானை போன்ற பலம் வரும்! நோய்க்கிருமிகள் நெருங்கக் கூட செய்யாது.

தினமும் இரவு நேரத்தில் ஒரு டம்ளர் நன்கு காய்ச்சிய பசும்பாலும், இரண்டே இரண்டு பேரீட்சை பழமும் சாப்பிட்டால் நம் உடல் மிகுந்த ஆரோக்கியத்துடன் இருக்கும். பாலில் அனைத்து சத்துக்களும் உண்டு, இரும்பு சத்து பேரிச்சை பழம் கொடுக்கும். ஆக பாலும் பேரிச்சை பழமும் சாப்பிட்டால் நம் உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களும் முழுமையாக கிடைக்கப் பெற்று உடல் வலுவுறும். இன்னும் பேரிச்சை பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றி நாம் தெரிந்து கொண்டால் ஆச்சரியப்படுவோம். இரவில் நன்றாக தூக்கம் வருவதற்கு என்ன செய்யலாம்? தேக ஆரோக்கியம் பெற, இளமையான தோற்றம் பெற என்ன செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள இப்பதிவை தொடர்ந்து படியுங்கள்.

dry-dates

பேரீச்சை பழத்தில் வைட்டமின்கள், மினரல்கள், தாது உப்புக்கள், பாலிபீனால்கள், பிரக்டோஸ், க்ளுகோஸ், கார்போஹைட்ரேட், அயன், மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் உடல் வலிமையை அதிகரிக்க செய்ய வல்லவை. ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 4 வேளை தலா இரண்டு பேரீட்சை பழங்களை சாப்பிட்டால் போதும்! நமக்கு தேவையான அத்தனை சத்துக்களும் கிடைக்கும். உடல் சோர்வு என்பது ஏற்படவே செய்யாது. எவ்வளவு உழைத்தாலும் உடலில் களைப்பு ஏற்படாமல் இருக்க முயற்சி செய்யலாம்.

இரவில் தூங்கச் செல்லும் பொழுது நன்கு காய்ச்சிய பசும்பால் மிதமான சூட்டில் குடித்துவிட்டு, இரண்டு பேரீட்சை பழங்களை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்திற்கு எந்த ஒரு தீங்கும் நேராது. புதிதாக ரத்தம் விருத்தியாகும். இதனால் உடலில் இருக்கும் பாகங்கள் சீராக வேலை செய்யும். இளமையான தோற்றத்தை மீட்டுத்தரும். இளம் வயதிலேயே வயதான தோற்றம் இருப்பவர்கள் தினமும் இரவு இப்படி செய்து பார்க்கலாம். அது போல் எப்பொழுதும் இளமையுடன் இருக்க வேண்டி நினைப்பவர்களும் இதுபோல் செய்யலாம். என்றென்றும் சிரஞ்சீவியாக வாழ பேரிச்சை பழத்தை விட சிறந்த பரிகாரம் எதுவும் இல்லை.

mobile-at-night

அதிகமாக செல்போன் மற்றும் லேப்டாப் உபயோகிப்பவர்கள் இரவு நேரத்தில் ஏற்படும் சோர்வை நீக்க, தினமும் பேரிச்சை பழத்தை சாப்பிட்டு வரலாம். நீங்கள் நினைத்த நேரத்தில் ஒன்றிரண்டு பழங்களை சாப்பிட்டால் கூட போதும். கண்களில் ஏற்படும் அயர்வு நீங்கி புத்துணர்ச்சி பெறும். கண் பாதிப்புகளும் ஏற்படாமல் பாதுகாப்பாக இருக்கும். இப்போது எல்லாம் இளமையிலேயே கண்ணாடி போட்டுக் கொண்டு திரியும் சிறுவர்களையும், சிறுமிகலையும் அதிகமாக பார்க்கிறோம். இது போன்றவர்கள் தினமும் பேரிட்சை பழம் சாப்பிட்டு வருவது நல்லது.

- Advertisement -

எந்த பழங்கள் சாப்பிடும் போதும் உடன் அதிகளவு பாலையும் சேர்த்துக் கொள்வது சக்தியை அதிகரிக்கச் செய்யும். அந்த வகையில் பேரீச்சை பழம் சாப்பிடும் பொழுது உடன் பால் சேர்த்து சாப்பிடுவது மிக மிக நல்லது. பாலும், பேரீச்சை பழம் சாப்பிடும் பொழுது பல் தொடர்பான பிரச்சனைகளும் நீங்கும். பாலில் இருக்கும் கால்சியம் பல் பற்களை வலுவாக இருக்க உதவி செய்யும். பல்லில் இருக்கும் எனாமல் தேய்ந்து போவது தடுக்கப்படும்.

dates 3

பேரீச்சை பழத்தில் இருக்கும் மெக்னீசியம் உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலில் ஏற்படும் வலியை போக்க கூடிய ஆற்றலும் இதற்கு உண்டு. உடலுக்கு அதிக வேலை கொடுத்து இரவு படுக்கும் பொழுது உடல் வலியுடன் படுப்பவர்கள் அடிக்கடி பேரீச்சை பழம் சாப்பிட்டுவர இந்த தொந்தரவுகள் எல்லாம் நீங்கிவிடும். பேரீச்சை பழத்தில் இருக்கும் சத்துக்கள் நரம்பு தொடர்பான நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

maleria-virus

தொற்று நோய் கிருமிகள் நம்மை வெகுவிரைவாக அண்டாமல் இருக்க, தினமும் பேரீச்சை பழமும், பாலும் சாப்பிடுவது நல்லது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும், இரவில் நன்கு தூக்கம் வரவும், உடல் பலம் பெறவும், இளமையான தோற்றத்துடன் இருக்கவும், தினமும் இரவு தூங்கும் முன் பேரிச்சை பழத்தை சாப்பிட்டு, பசும்பால் குடிக்க வேண்டும். மேலும் ஒரு நாளில் குறைந்தது 5 லிருந்து 6 பழங்களை இடைவெளி விட்டு எடுத்துக் கொள்வது நல்லது.