எந்த 3 ராசிக்காரர்கள் அதீத நேர்மையுடன், நேர்மையின் சிகரமாக நடந்து கொள்வார்கள் தெரியுமா?

12 ராசிக்காரர்கள் இருக்கும் பொழுது இந்த சில ராசிக்காரர்கள் மட்டும் நேர்மையாக நடந்து கொள்வார்கள் என்று சொன்னால் மற்ற ராசிக்காரர்கள் எல்லாம் நேர்மையற்றவர்கள் என்பது பொருள் இல்லை. மற்ற ராசியினரை விட இந்த 3 ராசிக்காரர்கள் சற்று அதிகமாகவே நேர்மையுடன் நடந்து கொள்வார்களாம்! இவற்றில் உங்கள் ராசியும் இருக்கிறதா? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

நேர்மை என்பது சாதாரண விஷயமல்ல. எல்லோரும் எல்லோருக்கும் நேர்மையாக இருந்து விடவும் முடியாது. ஏதாவது ஒரு கட்டத்தில் நேர்மை தவறி நடந்து தான் ஆக வேண்டும். இது கலியுகத்தின் நியதியாகும். அப்படி இருக்கும் பொழுது இந்த மூன்று ராசிக்காரர்கள் கூடுமானவரை தங்களுடைய நேர்மையில் இருந்து தடம் மாறியது இல்லையாம்!

மிதுனம்:
mithunam-rasi
மிதுன ராசிக்காரர்கள் மிகவும் நேர்மையுடன் நடந்து கொள்வார்கள் என்கிறது ஜோதிடம். மனசாட்சி உறுத்தல் இல்லாமல் நிறைய பேர் நிறைய தவறுகளை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் இவர்களால் ஒரு தவறை செய்யும் பொழுது உறுத்தல் இல்லாமல் செய்ய முடியாது. எல்லோரையும் போல இவர்கள் இருக்க நினைத்தால் கூட இவர்களால் தங்களுடைய மனசாட்சியை மீறி எந்த ஒரு நேர்மையற்ற காரியத்தையும் செய்ய முடியாது. குறிப்பாக தங்களுடைய குடும்பத்திற்கு நேர்மையுடன், விசுவாசத்துடன் நடந்து கொள்வார்கள். பொய் கூறி சுய நலத்துடன் இருக்க தெரியாதவர்களாக இருப்பார்கள். உதாரணத்திற்கு வாங்கிய சம்பள பணத்தை கூட முழுதாக வீட்டிற்கு கொடுத்து விடுவார்கள். அந்த அளவிற்கு நேர்மையின் சிகரம் ஆக இருக்கும் மிதுன ராசிகாரர்களுக்கு நிறைய சவால்கள் இன்னும் காத்திருக்கின்றன.

துலாம்:
thulam-rasi
துலாம் ராசியினுடைய சின்னமாக இருக்கும் தராசை போலவே இவர்களும் நேர்மையுடன் நடந்து கொள்வார்கள். மேலும் இவர்களுக்கு நீதியிலும், நேர்மையிலும் குறை ஏற்பட்டால் அதனைப் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள். சமூகத்தின் மீது இவர்களுக்கு அக்கறை அதிகமாக இருக்கும். நேர்மை தவறி நடந்து கொள்பவர்களை கண்டால் இவர்களுடைய மனோபாவம் அப்படியே தகிக்கும் அனலை போல மாறிவிடும். வேலை செய்யும் துலாம் ராசிக்காரர்கள் முதலாளியிடம் விசுவாசமாக இருப்பார்கள். ஒருபொழுதும் லஞ்சம் வாங்குவது அல்லது கொடுப்பதை இவர்கள் விரும்புவதில்லை. இதனால் பலருக்கும் இவர்களைப் பார்த்தால் முட்டாள் என்று தோன்றிவிடும். ஆனால் உண்மையில் இவரைப் போன்றவர்கள் பல இடங்களில் துன்பப் பட்டாலும் நேர்மையில் தவறுவதில்லை.

கும்பம்:
kumbam-rasi
கும்ப ராசிக்காரர்கள் அதிகம் நேர்மையுடன் நடந்து கொள்வார்கள். நியாயத்திற்கு துணை நிற்கும் இவர்களுடைய போராட்டங்கள் எப்பொழுதும் வெற்றி அடையும். ஒரு சிலர் இவர்களை திசை திருப்ப முயற்சி செய்தாலும் அவர்களால் இவர்களை வெல்ல முடியாது. எவ்வளவு யோசித்தாலும் இவர்களால் நேர்மை தவறாமல் நடந்து கொள்ள முடியாது. தன்னை நம்பி வந்தவர்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள்.

எந்த சூழ்நிலையிலும் அவர்களை ஏமாற்ற பிழைக்க மாட்டார்கள். எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும், தடைகள் ஏற்பட்டாலும் கூட சற்றும் நேர்மையற்ற செயலை செய்ய யோசிக்க கூட மாட்டார்கள். இதனால் இவர்களை பலரும் பிழைக்கத் தெரியாதவர்கள் என்று கூறுவதும் உண்டு. குறுக்கு வழியில் சம்பாதிப்பதை ஒன்றும் பெரிய விஷயமல்ல. நேர்மைக்கு கிடைக்கும் பரிசை அனுபவித்துப் பார்த்தால் தான் தெரியும் என்றெல்லாம் தத்துவம் பேசுவார்கள்.