தொட்ட உடனே நோய்களை தீர்க்கும் அதிசய மனிதர் – வீடியோ

varma kalai swaminathan

மருத்துவ சிகிச்சை என்பது மனிதன் மற்றும் பிற உயிர்களின் உடல் பாதகங்களை நீக்கும் ஒரு உன்னதமான கலையாகும். அத்தகைய ஒரு மருத்துவ முறை தான் நம் சித்தர்கள் கண்டுபிடித்த “வர்மக்கலை”. 20 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ஒரு தமிழ் திரைப்படம் மூலமாகவே, இப்படிப்பட்ட ஒரு அற்புதமான கலையைப் பற்றி பெரும்பாலான மக்கள் தெரிந்து கொண்டார்கள். தற்காப்பு கலையாக மட்டுமே அறியப்பட்ட இக்கலை உண்மையில் ஒரு மருத்துவ சிகிச்சை முறையாகும். இந்த அற்புதமான “வர்மக்கலையை” “போக சித்தரின்” அருளாசியுடன் மக்களை குணப்படுத்தும் ஒரு நபரைப் பற்றி இந்த வீடியோவில் காண்போம்.

தஞ்சை மாவட்டம் பட்டுகோட்டைக்கருகே வசிக்கும் வர்ம மருத்துவர் ஒருவர், தனக்கு போக சித்தர் கொடுத்த “மெய்தீண்டா காலம்” எனப்படும் தீட்சை அருளினால், தன்னை நாடி வரும் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறுகிறார். ஒவ்வொரு மனிதனின் உடலிலும் நேர்மறை மற்றும் எதிர்மறை சக்திகள் இருப்பதாகவும், இதில் ஏதேனும் ஒன்றின் சமநிலை பாதிக்கப்படும் போது நம் உடல்நிலை நோய்வாய்ப்படுவதாக கூறுகிறார்.

சிறு வயதிலிருந்தே தன் முன்னோர்களிடம் இந்த வர்மக் கலை பயின்றதாகவும், தீவிரமான தியானப் பயிற்சியின் மூலம் போகர் அருளாற்றல் பெற்று, அதன் மூலம் தன்னை நாடிவரும் மக்களின் நோய்களை தீர்ப்பதாக கூறும் அதே நேரத்தில் புற்று நோய் போன்ற சில நோய்களை தன்னால் தீர்க்க முடியாது என்று வருபவர்களுக்கு தான் முன்பே கூறிவிடுவதாக சொல்கிறார்.

அதுமட்டுமல்லாது நல்ல குரு பக்தியும், போகரின் ஆசியும் இருப்பதாக தாம் கருதுபவர்களுக்கு, தான் இக்கலையை இலவசமாக கற்று கொடுப்பதாகவும், அத்தகைய பயிற்சி காலத்தில் தாம் கற்றுத் தரும் சில மந்திரங்களை 48 நாட்கள் தொடர்ந்து உச்சரிக்கும் போது, அவர்கள் போக சித்தரின் “சூட்சம தரிசனத்தை” பெறமுடியும் என்றும், மேலும் அவரின் தீட்சை பெற்று அவர்களும் பிறருக்கு “வர்ம சிகிச்சை” அளிக்க முடியும் என்று கூறுகிறார்.
சித்தர்களின் பாதம் பணிவோர்களுக்கு அனைத்தும் வெற்றியே.