நான்முகனாகிய ‘பிரம்மனுக்கு’ ஆதியில் 5 முகங்கள் இருந்ததாம்! அந்த 1 முகத்தை துண்டித்தது யார்? அது எதனால் தெரியுமா?

bramma-bairavar

பழம்பெரும் கோயில்களில் எல்லாம் பிரம்மதேவர் ஐந்து முகங்களுடன் காட்சி தருகிறார். ஐந்து முகங்கள் என்று தான் புராணங்களும் கூறுகின்றன. பிரம்மன் தோன்றிய காலத்தில் ஐந்து முகங்கள் தான் கொண்டிருந்தார். ஆனால் இப்போது நம்முடைய கோவில்களில் கூட நான்கு முகங்களுடன் தான் பிரம்ம தேவர் காட்சி தருகின்றார். நான்முகக் கடவுள் என்று தான் பிரம்ம தேவரை வேதங்களும் குறிப்பிடுகிறது. எனில் ஐந்து முகங்கள் கொண்டிருந்த பிரம்மதேவனுக்கு என்ன ஆனது?

bramma1

உண்மையில் பிரம்ம தேவருக்கு ஐந்து முகங்கள் இருந்தனவா? அந்த ஒரு முகம் துண்டிக்கப்பட்டதன் அதன் காரணம் என்ன? அவர் அப்படி என்ன தவறு செய்தார்? யார் அந்த ஒரு தலையை துண்டித்தது? என்பது போன்ற வினாக்களுக்கு உரிய விடையை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள். வாருங்கள் பதிவிற்கு போகலாம்.

மும்மூர்த்திகளில் ஒருவராக விளங்கும் பிரம்ம தேவர் படைத்தல் தொழிலை செய்கிறார். உலகில் உள்ள ஒவ்வொரு ஜீவராசிகளும் இவரால் படைக்கப்பட்டவை. ஆனால் இவருக்கு அந்த பதவியை அளித்தவர் யார்? ஹரியும், சிவனும் ஒன்று என்கிற கூற்று இருந்தாலும் அதில் பிரம்ம தேவருக்கு இடமில்லை என்பதை உணர்ந்திருக்கிறீர்களா? ஆக அவனின்றி அணுவும் அசையாது. அப்படி இருக்கும் பொழுது சிவன் அளித்த இந்த பதவியை ஏற்றுக் கொண்டதால் அவரே சிவமாக மாறி விட முடியாது.

bramma

ஆனால் சிவனுக்கும் ஐந்து தலைகள், தனக்கும் ஐந்து தலைகள் என்கிற கர்வம் பிரம்ம தேவருக்கு ஒரு முறை ஏற்பட்டது. இதனால் தன்னையும் மற்றவர்கள், போற்றி துதிக்க வேண்டும் என்று சித்த, ரிஷி, முனிவர்களை வற்புறுத்த ஆரம்பித்தார். இதனைப் பொறுக்க முடியாத ரிஷிகளும், முனிவர்களும் சிவனை அடைந்து நடந்தவற்றை எல்லாம் விவரித்தனர். இதனைக் கேட்ட சிவபெருமானுக்கு கோபம் வரவே அவர் பைரவரை அழைத்தார்.

- Advertisement -

பைரவர் சிவனின் ஸ்வரூபமே என்பதற்கு பல இடங்களில் சான்றுகள் உள்ளன. கொடூர அசுரர்களை அழிக்கவே சிவபெருமான் தன்னுடைய இதய அக்னியிலிருந்து பைரவரை உருவாக்கினார். அந்த அக்னி பிழம்பு ஒன்றிலிருந்து எட்டாகி, எட்டிலிருந்து அறுபத்து நான்கு வரை பிரிந்து அசுரர்களை அழித்து வெற்றி வாகை சூடியது. ஆக பைரவரும் சிவனின் ஸ்வரூபமே. அசுரர்களை அழிப்பதற்காகவே அவதாரம் எடுத்தவர் பைரவ மூர்த்தி. இவரை வணங்குபவர்களுக்கு யமபயம் நீங்கும். பகைவர்கள் தொல்லை அகலும். பில்லி, சூனியம், ஏவல் என்று எத்தகைய தீய சக்திகளும் நெருங்கக் கூட முடியாது.

bramma-5th-head

பைரவ மூர்த்தியை அழைத்து பிரம்ம தேவனின் ஆணவத்தை அடக்க, ஒரு தலையை நீக்கி எடுத்து வருமாறு ஆணையிட்டார். பைரவரும் அப்படியே பிரம்ம தேவருடைய ஒரு முகத்தை மட்டும் நீக்கி எடுத்து வந்து விட்டார். இதனால் ஐந்து முகம் கொண்ட பிரம்மதேவர், ‘நான்முகன்’ ஆகினார். ஆணவத்தை அழிப்பதற்கு கால பைரவரை வணங்குவது வழக்கம். ஆணவம் தன்னையும் அழித்து, மற்றவர்களையும் அழித்துவிடும் ஆற்றல் கொண்டது. ஆணவம் என்பது பேராபத்து! என்பதால் கால பைரவரை வணங்கி ஆணவம் நீக்கி வாழ்க்கையில் முன்னேறலாம்.

bairavar

அசுரர்களிடம் இருந்து தேவர்களை காத்ததால் 64 பைரவர்களுக்கு, 64 யோகினிகளை தேவர்கள் திருமணம் செய்து வைத்தனர். 64 பைரவர்கள் இருந்தாலும் அவற்றில் எட்டு பைரவர்களை மட்டுமே நாம் வழக்கத்தில் வணங்கி வருகின்றோம். அவர்கள் யாரெல்லாம் என்று பார்ப்போம். அசிதாக பைரவர், குரு பைரவர், சண்ட பைரவர், குரோதன பைரவர், உன்மத்த பைரவர், கபால பைரவர், பீஷண பைரவர், சம்ஹார பைரவர் ஆகியோர் ஆவார்கள்.

இதையும் படிக்கலாமே
உங்களுடைய வீட்டில் சந்தோஷம் நிரந்தரமாக நிலைத்திருக்க, மஞ்சள் கிழங்கை எப்போதும் இந்த இடத்தில் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.