உடலுக்கு போஷாக்கு தரும் ப்ரோக்கோலி பொரியல் செய்யும் முறை

prokkoli
- Advertisement -

ப்ரோக்கோலி என்பது காலிபிளவர் போன்று ஒரு போன்ற ஒரு காய் வகையை சேர்ந்ததாகும். இந்த ப்ரோக்கோலி பொரியல் வழக்கமாக நாம் சாப்பிடும் பொரியல் வகையிலிருந்து இது சற்று மாறுபட்டு இருக்கும் ஒரு பொரியல் வகை. இதனை நாம் வீட்டில் எப்படி சுலபாக செய்வது என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

pro_1

ப்ரோக்கோலி பொரியல் செய்ய தேவையான பொருட்கள்:

- Advertisement -

ப்ரோக்கோலி – 1
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்
மல்லித்தூள் -1/2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
வெங்காயம் – 1/4 கப்
பச்சைமிளகாய் – 2
கருவேப்பிலை – சிறிதளவு
கடுகு – 1/2 டீஸ்பூன்
துருவிய தேங்காய் – 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்

ப்ரோக்கோலி செய்முறை:

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, பச்சைமிளகாய் மற்றும் வெங்காயம் போட்டு நன்றாக செவரும் வரை வதக்கவும். பிறகு அதனுடன் கறிவேப்பிலை மற்றும் நாம் ஏற்கனவே எடுத்து வைத்துள்ள மசாலாத்தூள் அனைத்தையும் கொட்டி சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கிளறவும்.

- Advertisement -

pro_2

பிறகு ப்ரோக்கோலியை வெதுவெதுப்பான நீரில் கழுவி அதனை கடாயில் போடவேண்டும். பிறகு அதனை சிறிதளவு தண்ணீர் சேர்த்து 5 நிமிடங்கள் வரை மூடிவைக்க வேண்டும்.
5 நிமிடங்கள் கழித்து மூடியை திறந்தால் ப்ரோக்கோலி பொரியல் தயாராகிவிடும்.

pro_3

ப்ரோக்கோலி பொரியல் தயாரானதும் அதன்மீது துருவிய தேங்காயினை கொட்டி நன்றாக கிளறவும் தற்போது சுவையான ப்ரோக்கோலி பொரியல் தயார். பிறகு அதனை எடுத்து நீங்கள் சாப்பிட துவங்கலாம்.

- Advertisement -

pro_4

சமைக்க ஆகும் நேரம் – 10 நிமிடங்கள்
சாப்பிடும் நபர்களின் எண்ணிக்கை – 3

இதையும் படிக்கலாமே:
சுவையான வெனிலா கேக் செய்யும் முறை

இது போன்று மேலும் பல சமையல் குறிப்புக்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

Here we have Broccoli poriyal recipe in Tamil. It is also called as Broccoli poriyal seimurai or Egg 65 Broccoli poriyal in Tamil or Broccoli preparation in Tamil.

- Advertisement -