ஜோதிடம் : ஆகஸ்ட் மாத புதன் பெயர்ச்சி பலன்கள் – 2019

budhan
- Advertisement -

சிறந்த அறிவாற்றல் மற்றும் படைப்பாற்றலுக்கு அதிபதி புதன் பகவான் ஆவார். இந்த புதன் பகவான் ஆகஸ்ட் மாதம் 26 ம் தேதி திங்கட்கிழமையன்று அதிகாலை 2.15 மணிக்கு கடக ராசியிலிருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ளார். இந்த புதன் பெயர்ச்சியால் 12 ராசியினருக்கும் ஏற்படும் பலன்கள் என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்:

- Advertisement -

Mesham Rasi

மேஷ ராசியினருக்கு நான்காம் இடமான கடக ராசியிலிருந்து ஐந்தாம் இடமான சிம்ம ராசிக்கு பெயர்ச்சி அடைந்திருப்பதால் தந்தை உடல்நலம் பாதிக்கக்கூடும். புதிய முயற்சிகளில் தடைகள் மற்றும் தாமதங்கள் ஏற்படும். உடலுக்கு ஓய்வில்லாமல் உழைத்துக் கொண்டேயிருக்கும் சூழல் உண்டாகும். வியாபாரங்களில் சராசரியான லாபங்கள் இருக்கும்.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasi

ரிஷப ராசியினருக்கு மூன்றாம் இடமான கடக ராசியிலிருந்து நான்காம் இடமான சிம்ம ராசிக்கு புதன் பெயர்ச்சியடைந்திருப்பதால் உடல்நலத்தில் பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். சகோதரர்களுடன் மனக்கசப்புகள் ஏற்படலாம். ஒரு சிலர் தங்களின் தேவைக்காக கடன் வாங்கும் சூழல் உருவாகும். புதிய முயற்சிகளை சற்று ஒத்தி வைப்பது நல்லது. பணியிடங்களில் உங்களுக்கெதிரானவர்களின் மறைமுக தொல்லைகளை சந்திப்பீர்கள்.

மிதுனம்:

- Advertisement -

midhunam

மிதுன ராசிக்கு மூன்றாம் இடமாகிய சிம்ம ராசிக்கு புதன் பெயர்ச்சியடைந்திருப்பதால் புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறும். திருமணம் தடை புத்திர பாக்கியம் இல்லாமை போன்ற பிரச்சனைகள் கொண்டவர்களுக்கு அப்பிரச்னைகள் நீங்கும். தாராள தன வரவு இருக்கும். தந்தை வழி உறவுகளால் நன்மைகள் உண்டாகும்.

கடகம்:
Kadagam Rasi

கடக ராசிக்கு இரண்டாம் இடமான சிம்ம ராசிக்கு புதன் பெயர்ச்சியடைந்திருப்பதால் சகோதர வழி உறவுகளால் நன்மைகள் உண்டாகும். உங்களின் பேச்சாற்றல் மூலம் செல்வதை ஈட்டுவீர்கள். புதிய சொத்துக்களை வாங்கும் சூழ்நிலைகள் உண்டாகும். பெண்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வெளிநாடுகள் செல்லும் முயற்சிகள் வெற்றி பெறும்.

சிம்மம்:
simmam

சிம்ம ராசியியிலேயே புதன் பெயர்ச்சியடைந்திருப்பதால் உடல் நலம் நன்றாக இருக்கும். பேச்சாற்றல் மூலம் செல்வம் சேரும். வழக்கு, சொத்து பங்கு பெறுதல் போன்றவற்றில் உங்களுக்கு சாதமான நிலை ஏற்படும். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் உங்களுக்கு மதிப்பு ஏற்படும். விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் ஏற்பட்டு லாபம் அதிகம் கிடைக்கும்.

கன்னி:

Kanni Rasi

கன்னி ராசியினருக்கு பன்னிரெண்டாம் இடமாகிய சிம்ம ராசிக்கு புதன் பெயர்ச்சியடைந்திருப்பதால் தாயாரின் உடல் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகளால் மகிழ்ச்சியான நிலை உண்டாகும். பணம் கொடுக்கல், வாங்கல்களில் தாமதங்கள் ஏற்பட்டதாலும் உங்களின் பணம் வந்து சேரும். பெரியோர்களால் அனுகூலங்கள் ஏற்படும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். தொழில், வியாபாரங்களில் சராசரியான வருமானம் இருக்கும்.

துலாம்:
Thulam Rasi

துலாம் ராசிக்கு பதினோராம் இடமாகிய சிம்ம ராசிக்கு பெயர்ச்சியடைந்திருப்பதால் கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். உடல் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டும். உஷ்ண சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும். தொழில், வியாபாரங்களில் சுமாரான லாபங்களே ஏற்படும். மறைமுக எதிரிகளின் தொல்லைகள் ஒழியும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது.

விருச்சகம்:
Virichigam Rasi

விருச்சிக ராசிக்கு பத்தாம் இடமாகிய சிம்ம ராசிக்கு புதன் பெயர்ச்சியடைந்திருப்பதால் உடல்நலம் அடிக்கடி பாதிப்பிற்குள்ளாகும். வேலை தேடுபவர்களுக்கு சற்று அலைச்சல்களுக்கு பிறகு வேலை கிடைக்கும். பழைய கடன் பாக்கிகளை அடைக்க முடியும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வுகள் உண்டாகும். உறவினர்கள் மத்தியில் உங்களுக்கு செல்வாக்கு உண்டாகும்.

தனுசு:

Dhanusu Rasi

தனுசு ராசிக்கு ஒன்பதாம் இடமாகிய சிம்ம ராசிக்கு புதன் பெயர்ச்சியடைந்திருப்பதால் பெண்களுக்கு உடல்நலத்தில் சிறு பிரச்சனைகள் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். பொருளாதார நிலை சீராக இருக்கும். பிறருக்கு கடன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். வெளிநாடுகள் செல்லும் முயற்சிகள் சற்று தாமதமாகும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

மகரம்:

Magaram rasi

மகர ராசிக்கு எட்டாமிடமாகிய சிம்ம ராசிக்கு பெயர்ச்சியடைந்திருப்பதால் உடல் நல பாதிப்பு ஏற்பட்டு நீங்கும். தொழில், வியாபாரங்களில் லாபங்கள் கிடைத்தாலும் மறைமுக எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும். அவசிய தேவைகளுக்காக கடன் வாங்க நேரிடும். குடும்பத்தில் பெரியவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

கும்பம்:
Kumbam Rasi

கும்ப ராசிக்கு ஏழாம் இடமாகிய சிம்மத்திற்கு புதன் பெயர்ச்சியடைந்திருப்பதால் உடல் நலம் மேம்படும். சராசரியான பொருள்வரவு இருக்கும். ஒரு சிலர் ஆன்மீக பயணங்களை மேற்கொள்வார்கள். வெளிநாடுகள் செல்லும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும். ஒரு சில பெண்களுக்கு புதிய ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். கலைதுறையில் இருப்பவர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும்.

மீனம்:

Meenam Rasi

மீன ராசிக்கு ஆறாமிடமாகிய சிம்ம ராசிக்கு புதன் பெயர்ச்சியடைந்திருப்பதால் கணவன் மனைவிக்குள்ளாக கருத்து வேறுபாடுகள் எழும். திருமண முயற்சிகளில் தாமதங்கள், தடைகள் போன்றவை ஏற்படும். அரசியல் துறையில் இருப்பவர்கள் எதிலும் கவனமுடன் இருக்க வேண்டும். பணவரவிற்கு குறைவிருக்காது. சிலர் பழைய கடன்களை எல்லாம் வட்டியுடன் கட்டி முடிப்பீர்கள்.

இதையும் படிக்கலாமே:
ஆகஸ்ட் மாத சூரிய பெயர்ச்சி பலன்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Budhan peyarchi palangal august 2019 in Tamil. It is also called as Budhan graha peyarchi in Tamil.

- Advertisement -