ஒரே ராசிக்காரர்கள் ஒரு குடும்பத்தில் இருந்தால் ஆபத்தா ?

711
- விளம்பரம் -

ஒரு குடும்பத்தில் வாழும் ஒன்றிற்கும் மேற்பட்டவர்களுக்கு ஒரே ராசியாக இருந்தால் பிரச்சனைகள் வரும் என்று பலரும் கூறுவது வழக்கம். அனால் உண்மையில் பிரச்சனைகள் மட்டுதான் வருமா ?இதில் நற்பலன்களே இல்லையா? வாருங்கள் இதை பற்றி விரிவாக பார்ப்போம்.

பொதுவாத ஒவ்வொரு ராசிக்கும் சில வருடங்கள் நன்றாகவும் சில வருடங்கள் மந்தமாகவும் இருக்கும். ஒரே வீட்டில் வாழும் பலருக்கு ஒரே ராசி இருக்கும் பட்சத்தில் அந்த ராசிக்குரிய நல்ல நேரங்கள் வரும்போது அந்த கும்பத்தின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

- Advertisement -

உதாரணத்திற்கு ஒருவருக்கு சுக்ர திசை என்றாலே அந்த குடும்பத்தில் பண வரவு நன்றாக இருக்கும் அப்படி இருக்கையில் ஒரே குடும்பத்தில் பலருக்கு சுக்ரதிசை நடந்தால் அந்த குடும்பத்தின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்று நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.

காலசூழச்சியால் தீய பலன்களும் ஒரு ராசிக்கு வரும். உதாரணத்திற்கு ஏழரை சனி நடப்பதாக வைத்துக்கொள்வோம். ஒரே குடும்பத்தில் பலருக்கு ஏழரை சனி என்றால் அந்த குடும்பத்தின் நிலை எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.

ஆகவே ஏழரை சனி, அஷ்டம சனி போன்றவை நடக்கும் சமயங்களில் ஒரே ராசிக்காரர்கள் பிரிந்து இருப்பதே சிறந்தது. ஒரு சிலருக்கு பிரிய முடியாத சூழல் இருக்கும். அப்படி இருப்பவர்களுக்கு சிலர் பரிகாரங்கள் உள்ளன.

பரிகாரங்கள்:
கடலோரங்களில் உள்ள கோவில்களுக்கு சென்று வழிபடுவதே இதற்கு சிறந்த பரிகாரம் என்று நம் முன்னோர்கள் கணித்துவைத்துள்ளனர். ஆகவே
ஆண்டுக்கு ஒரு முறையாவது குடும்பத்தோடு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று நீராடி வழிபடுவது சிறந்தது. மேலும்
சனிக்கிழமைகளில் நவகிரகங்களுக்கு விளக்கேற்றி வழிபடுவது சிறந்தது.

Advertisement
SHARE