கடவுள் என்பவர் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்றாலும் கூட, சில தெய்வங்களின் படங்களை நம் வீட்டின் பூஜை அறையில் வைத்திருப்பது சாஸ்திரப்படி முறையாகாது. ஆகையால் வீட்டில் எந்தமாதிரியான சாமி படங்களை வைக்கலாம் என்பதை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்ப்போம் வாருங்கள்.
விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் கூடிய முருகப்பெருமான், ஸ்ரீ லக்ஷ்மியுடன் கூடிய நாராயணன், அம்பிகையுடன் கூடிய சிவபெருமான், பசுவுடன் அல்லது பத்னியுடன் கூடிய கிருஷ்ணர், தனித்த உருவத்துடன் காணப்படும் படங்கள் என்றால் காமாக்ஷி, மீனாக்ஷி, விசாலாக்ஷி மற்றும் லலிதாம்பாள், அஷ்டலக்ஷ்மி. இது தவர பானலிங்கம், சிவலிங்கம்.
(ஒரு ஜான் அளவு அதற்கு மேல் போக கூடாது).
வைக்கக்கூடாத படங்கள் – (உக்கிர வடிவம் கொண்ட ஸ்ரீ காளியம்மன், மகிஷாசுர மர்த்தினி, ஆஞ்சனேயர், நரசிம்ம மூர்த்தி, தனித்த கிருஷ்ணர், முருகர், பிரத்தியங்கிரா தேவி, சரப மூர்த்தி போன்ற உக்கிர படங்கள் வைக்க கூடாது.
(உக்கிர தெய்வங்கள் குல தெய்வமாக இருக்கும் பட்சத்தில் அந்த சாமி படங்களை மட்டும் வைக்கலாம்.)
மேலும் உடைந்த படங்கள், சிதைந்த சாமி சிலைகள் இவைகளை வீட்டில் வைத்து பூஜிக்க கூடாது. சமுத்திரத்திலோ ஆற்றிலோ கோவில்களிலோ அல்லது ஏரியிலோ விட்டுவிட வேண்டும்.
நமது முன்னோர்கள் படங்களை தனியாக இருக்கவேண்டும் பூஜை அறையில் சாமிக்கு நிகராக வைக்க கூடாது.
ஒரு ஜான் (கட்டை விரல் அளவு) மேல் உள்ள விக்கிரங்கள் வைப்பதாக இருந்தால் கண்டிப்பாக தினசரி அன்னம் வைத்து பூஜிக்கப்பட வேண்டும். தினசரியோ அல்லது வாரம் ஒரு முறையோ அபிஷேகம் செய்ய வேண்டும் என சாஸ்த்திரம் தெரிவிக்கிறது.
சக்தி உபாசகர்கள் மட்டுமே ஸ்ரீ சக்ரம், மேரு வைத்து பூஜிக்க தகுதியுள்ளவர்கள் ஆவார்கள். வீட்டில் வலம்புரி சங்கு இருந்தால் அந்த சங்கில் அரிசியோ அல்லது ஜலமோ வைத்து பூஜிக்க வேண்டும். சங்கை காலியாக வைக்கலாகாது.
சங்கை எதுவும் போடாமல் இருக்கும் பட்சத்தில் கமுத்தி வைக்கலாம். சங்கின் நுனி கிழக்கு திசை நோக்கி இருக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே:
கோவிலில் கொடுத்த பூமாலையை என்ன செய்ய வேண்டும் தெரியுமா ?
ஆன்மீக தகவல்கள், ஆன்மீக குறிப்புகள் மற்றும் ஆன்மீகம் சார்ந்த அணைத்து தகவல்களையும் பெற எங்களோடு இணைந்திருங்கள்.
English Overview:
Here we have Pooja room tips in Tamil. We discussed how we need to keep the photos in Pooja room. In Tamil language, it can be called as Poojai arai tips in Tamil.