பக்தி பாடல்களை மொபைலில் ரிங்க்டோனாக வைப்பது சரியா?

399
- விளம்பரம் -

பக்தியின் மிகுதியால் பலர் தங்களுடைய மொபைலில் பக்தி பாடல்களை ரிங்க்டோனாக வைப்பது வழக்கமாகிவிட்டது. அனால் அப்படி செய்வது சரியா? வாருங்கள் இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

iyappan

பக்தி பாடல்கள் என்பது நம் மனதை இறைவனிடம் கொண்டு செல்ல உதவும் ஒரு கருவியாக இருப்பதோடு இறைவனையும் ஆனந்தத்தில் ஆழ்தசெய்கிறது. இதை நாம் அனைத்து இடங்களிலும் ஒலிக்கச்செய்வது நிச்சயம் முறையாகாது.

- Advertisement -

உதாரணத்திற்கு ஒருவர் அசைவ உணவை உண்டுகொண்டிருக்கும் சமயத்தில் அவரது மொபைலில் முருகனுக்குரிய ஒரு பக்தி பாடல் ரிங் டோனாக ஒலித்தால் அது அவ்வளவு சரியாகாது.

oom

அதே போல் சிலர் சுப்ரபாதத்தை ரிங்க்டோனாக வைத்திருப்பர். சுப்ரபாதம் என்பது இறைவனை காலையில் மங்களகரமாக போற்றி எழுப்பும் ஒரு பாடல். இதை மதியத்திலும் இரவிலும் மொபைலில் ரிங்க்டோனாக ஒலிக்கசெய்வதில் என்ன நியாயம் இருக்கிறது.

perumal

சுவாமி பாடல்களை மொபைலில் ரிங்க்டோனாக வைக்கவே கூடாத? என்றால் தாராளமாக வைக்கலாம். அனால் எந்த பாடலை வைக்க வேண்டும் என்பதில் நிச்சயம் தெளிவிருக்க வேண்டும். அனைத்து நேரங்களுக்கும், அனைத்து இடங்களுக்கும் பொதுவான ஒரு பக்தி பாடலை ரிங்க்டோனாக வைப்பதே நாம் நமது பக்தியை முறையாக வெளிப்படுத்தும் ஒரு செயலாக அமையும்.

Advertisement