கோவிலில் கொடுத்த பூமாலையை வீட்டில் சுவாமி படத்திற்கு அணிவிக்கலாமா?

419
- விளம்பரம் -

பலரும் அறிந்திடாத சில ஆன்மீக கேள்விகளுக்கான விடையை இந்த பதிவில் நாம் பார்ப்போம்.

1-கோவிலில் கொடுத்த பூமாலையை வீட்டில் சுவாமி படத்திற்கு அணிவிக்கலாமா?

- Advertisement -

சுவாமி பிரசாதமாகக் கொடுக்கும் மாலைகளுக்கு நிர்மால்யம் என்று பெயர். இவற்றை மற்ற சுவாமி படங்களுக்கு சாத்தக் கூடாது.

2- புதிதாக செய்த சுவாமி சிலைகளை ஜலவாசமாக நீருக்குள் வைப்பது ஏன்?

மண்ணிலிருந்து எடுக்கும் தங்கம் உடனே ஜொலிக்காது. மீண்டும் மீண்டும் நெருப்பில் இட்டு பக்குவப்படும் போது தான் ஜொலிக்கும். அதுபோல புதிய சிலைகள் அதற்குரிய தெய்வத்தன்மையை தாங்கும் சக்தியைப் பெற, மந்திரப் பூர்வமாக தானிய வாசம், ஜலவாசம், சயன வாசம் ஆகிய சடங்குகளைச் செய்வார்கள்.

3- மீனாட்சி கல்யாணம், சீதா கல்யாணம் என கல்யாணத்திற்கு பெண் தெய்வத்தையே குறிப்பிடுவது ஏன்?

ஒரு ஆண் மகனுக்கு தான, தர்மம், யாகம், முன்னோர் வழிபாடு செய்ய திருமணமான பின்னரே முழு அதிகாரத்தை சாஸ்திரம் அளித்துள்ளது. மற்றொன்று இல்லற வாழ்வின் பொறுப்புணர்ந்து, குடும்பத்திற்காக உழைக்கும் கடமை அவனுக்கு தரப்படுகிறது. இந்த இரண்டையும், ஒரு பெண்ணின் கரத்தை பற்றிய பிறகு தான் ஆண் அடைகிறான். எனவே குடும்ப வாழ்வில் பெண்களே முக்கியத்துவம் பெறுகின்றனர். இதனால் தான் திருமணங்களை பெண் தெய்வங்களின் பெயரால் குறிப்பிடுகின்றனர்.

4- தெற்கு நோக்கிய அம்மன்!

துர்க்கை பெரும்பாலும் வடக்கு நோக்கியே கோவில்களில் காட்சி தருவாள். ஆனால் திருவாரூர் மாவட்டம் ஆந்தக்குடியில் உள்ள சோமேஸ்வரர் கோவிலில் துர்க்கை தெற்கு நோக்கி அருள்பாலிப்பது சிறப்பான அம்சமாகும். மரணபயம் உள்ளவர்கள் இந்த அம்மனை வழிபட்டு அருள் பெறுகின்றனர். நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டவர்கள் கூட இங்கு வழிபட்டு பலனடைகின்றனர்.

5- ஆடியில் திருக்கல்யாணம்!

சிவத்தலமான ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தங்களில், ஆடி மாதத்தில் நீராடுவது புனிதமானதாக கருதப்படுகிறது. இங்கு ராவணனைக் கொன்ற பாவம் நீங்க ராமர் பிரதிஷ்டை செய்த சிவன் லிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். இவரை ராமநாதசுவாமி என்பர்.இங்கு அருள்புரியும் பர்வதவர்த்தினி அம்மனுக்கும், ராமநாத சுவாமிக்கும் ஆடி மாதத்தில் திருக்கல்யாணம் நடக்கிறது. ஆடி அமாவாசையன்று இங்கு நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது மிகுந்த புண்ணியத்தை தருவதாகும்.

Advertisement