நாளை (13/4/2021) சந்திரனை பார்ப்பவர்களுக்கு இவ்வளவு பயன்களா? ஏன்? எதனால் தெரியுமா? யுகாதி மகத்துவங்கள்!

vishnu-chandran
- Advertisement -

சிவபெருமான் ஜடாமுடியில் இருக்கும் மூன்றாம் பிறை சந்திரனை தரிசிப்பவர்களுக்கு வாழ்வில் நிம்மதியும், ஆரோக்கியமும் உண்டாகும் என்பது நியதி. மூன்றாம் பிறைச் சந்திரனை தொடர்ந்து தரிசிப்பவர்களுக்கு அந்த ஆண்டு வருமானம் பன்மடங்கு விருத்தியாகும் என்பது சாஸ்திர நம்பிக்கை. அதனால் ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசைக்கு பிறகு சந்திர தரிசனம் அன்று செய்ய கூடிய வழிபாடு மிகவும் விசேஷமானது. அவ்வகையில் நாளை சந்திர தரிசனம் என்ன செய்யலாம்? சந்திர தரிசனத்துடன் நாளை யுகாதி பண்டிகையும் வருகிறது! இதன் சிறப்புகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

Lord Shiva

பொதுவாகவே மூன்றாம் பிறை தரிசனம் செவ்வாய், வெள்ளி கிழமைகளில் வரும் பொழுது அதிக சக்தி கொண்டுள்ளது என்று கூறப்படுகிறது. நாளை தெலுங்கு, கன்னட வருடப் பிறப்பான யுகாதி பண்டிகையும் சேர்ந்து வருவதால் நாளை வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்பவர்களுக்கு ஆண்டு முழுவதும் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. எனவே இதனைத் தவற விடாமல் தொடர்ந்து நாளையும், நாளை மறுநாள் நம்முடைய தமிழ் வருட பிறப்பையும் சேர்த்து கொண்டாடுங்கள்.

- Advertisement -

சந்திரனைத் தரிசனம் செய்ய மாலை வேளையில் வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வழிபடுவது வழக்கம். யுகாதி என்பதற்கு யுகத்தின் தொடக்கம் என்கிற பொருள் உண்டு. கிருஷ்ண பரமாத்மா தன்னுடைய அவதாரத்தின் முடிவில் கலியுகம் தொடங்குவதாக கூறியுள்ளார். எனவே ஸ்ரீ மகா விஷ்ணுவை வழிபடுவது யுகாதி நன்னாளின் சிறப்பு அம்சமாகும்.

bathing

யுகாதி பண்டிகையின் பொழுது எண்ணெய் குளியல் செய்து சகல தோஷங்களையும் நீக்கி, வாசலில் மாவிலை தோரணங்களால் அலங்காரம் செய்து, வீட்டிற்குள் இருக்கும் துஷ்ட சக்திகளை எல்லாம் வெளியில் துரத்தி விடுவார்கள். அதன் பிறகு வாழ்க்கை என்பது அனைத்தும் கலந்த கலவை என்பதை உணர்த்துவதற்கு யுகாதி பண்டிகை அன்று அறுசுவையும் கலந்த பச்சடி செய்வார்கள். இதற்கு ‘யுகாதி பச்சடி’ என்கிற பெயரும் உண்டு.

- Advertisement -

மகிழ்ச்சி, சோகம், வெறுப்பு, பயம், கோபம், ஆச்சரியம் ஆகிய ஆறு வகையான உணர்வுகளுக்கும் ஆறு சுவைகளை ஒப்பிட்டு இந்த பச்சடி செய்யப்படுவது வழக்கம். மகிழ்ச்சிக்கு வெல்லம், சோகத்திற்கு வேப்பம் மரத்தின் மொட்டுகள், வெறுப்பிற்கு புளிச்சாறு கொஞ்சம், பயத்திற்கு உப்பு, கோபத்திற்கு பச்சைமிளகாய், ஆச்சரியத்திற்கு மாங்கொட்டை அல்லது வேப்பம்பூ சேர்த்து இனிப்பு, கசப்பு, புளிப்பு, உப்பு, காரம், துவர்ப்பு ஆகிய ஆறு சுவைகளையும் ஒன்றோடு ஒன்று கலந்து இவ்வுலகிற்கு அனைத்தும் கலந்தது தான் வாழ்க்கை என்பதை உணர்த்துகிறார்கள்.

ugadi-pachadi

இன்றைய நாளில் மகா விஷ்ணுவிற்கு இந்த பச்சடி படைத்து விஷ்ணு சஹஸ்ரநாமம் படித்து பின், மாலை வேளையில் மூன்றாம் பிறைச் சந்திர தரிசனம் செய்பவர்களுக்கு வாழ்வில் சகல யோகங்களும் வருமாம். தொழில் விருத்தி, வியாபார விருத்தி, வருமான விருத்தி, சந்ததி விருத்தி என்று நம் வாழ்க்கைக்குத் தேவையான அத்தனையும் விருத்தியாகும். கடவுளுடைய பரிபூரண அருள் கிடைக்க இந்நாளை தவறவிடாமல் இறைவழிபாடு செய்து அனைவரும் பயன் அடையலாம். இதுவரை இருந்து வந்த துன்ப நிலை மாறி, புத்தம் புதிய வாழ்வு மலர, சந்திர தரிசனம் செய்து தமிழ் வருட பிறப்பை இனிதே வரவேற்போம்! வளம் பெறுவோம்! என்பதை கூறி இப்பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -