100 ஆண்டுகளுக்கு பிறகு திருப்பதி கோயிலில் செய்யப்பட்டுள்ள மாற்றம். பக்தர்கள் மகிழ்ச்சி

Kovil
- Advertisement -

திருமலை திருப்பதியில் வீற்றிருந்து பக்தர்கள் அனைவருக்கும் அருள்புரிந்து வருகிறார் ஏழுமலையான். இந்த கோவிலுக்கு வருடம் தோறும் பல லட்சம் பக்தர்கள் சென்று பெருமாளை தரிசித்துவருவது வழக்கம். இந்த கொரோனா சமயத்தில் திருப்பதியில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பது நாம் அறிந்ததே. திருப்பதி என்றாலே அனைவருக்கும் பெருமாளை அடுத்து ஞாபகம் வருவது லட்டு தான். அதே சமயம் அங்கு செல்லும் பக்தர்களுக்கு பலதரப்பட்ட சுவையான அன்னதானமும் வழங்கப்படுவதுண்டு. இதில் தற்போது பெரிய அளவிலான ஒரு மாற்றத்தை கொண்டு வர உள்ளது திருமலை திருப்பதி தேவஸ்தானம்.

tirupathi0

சமீபத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் சார்பாக புதிதாக ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது ஆர்கானிக் முறையில் நெய்வேத்யங்களை தயாரித்து வழங்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவுசெய்துள்ளது. இந்த முறையானது 100 வருடங்களுக்கு முன்பு செயல்பாட்டில் இருந்ததாகவும், தற்போது மீண்டு அதை நடைமுறை படுத்த இருப்பதாகவும் தேவஸ்தான நிர்வாகம் கூறி உள்ளது. அதன் படி இந்த மாத தொடக்கத்தில் இருந்து அது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

அது என்ன ஆர்கானிக் முறை நெய்வேத்யம்?
ஆர்கானிக் விவசாயம் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் அல்லவா. அதன் படி இயற்கையான முறையில் எந்த ஒரு ரசாயனமும் இல்லாமல் விளைவிக்கப்பட்ட பொருட்களில் இருந்து தயாராகும் நெய்வேத்யம் தான் ஆர்கானிக் நெய்வேத்யம்.

tirupati

அரிசி முதல் காய்கறிகள், பழங்கள் இப்படி எல்லாமே அந்த காலத்தில் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்டு இறைவனுக்கு படைக்கப்பட்டது. ஆனால் கடந்த 100 ஆண்டுகளாக அந்த நிலை மாறி பூச்சிக்கொல்லி, ரசாயன உரம் இப்படி பலவற்றின் துணை கொண்டே பயிர்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. அதையே கடவுளுக்கும் படைத்தது வருகிறோம். ஆனால் தற்போது மீண்டு பழைய நிலைக்கே திரும்ப திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் முடிவுசெய்துள்ளது.

- Advertisement -

இந்த முறையானது சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டு பக்தர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதால் தற்போது முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆர்கானிக் முறையில் தயாரான நெய்வேத்தியத்தின் சுவையும் தரமும் சிறப்பாக இருந்ததாக பக்தர்கள் கூறியதன் பொருட்டு இது முழுமையாக தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.

laddu

அதே சமயம் ஆர்கானிக் முறையில் விளைந்த பெங்கால் கிராம், வெல்லம் ஆகியவற்றைக் கொண்டே இனி திருப்பதி லட்டு வும் தயாரிக்கப்படும் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கமாவே திருப்பதி லட்டு என்றால் அதன் சுவை வேற ரகத்தில் இருக்கும். இப்போது ஆர்கானிக் முறையில் லட்டு என்றால் சொல்லவேண்டியதில்லை.

- Advertisement -