இந்த ஒரு செடிக்கு இத்தனை மகத்துவமா? தீய சக்தி, கண் திருஷ்டி நம்மை தாக்காமல் இருக்கவும், எதிரிகளைக் கூட நண்பர்களாக மாற்ற, வீட்டு வாசலில் இந்த செடி வைத்தாலே போதுமே!

sembaruthi-sedi
- Advertisement -

நம்முடைய வீட்டிற்குள் கெட்ட சக்தியும், கண் திருஷ்டியும், எதிர்மறை ஆற்றல்களும் வருவது எதனால்? நமக்கு எதிரி தொல்லை இருப்பதன் மூலமாக தான், நம்முடைய வீட்டிற்கு பிரச்சினைகளே வரப்போகின்றது. அந்த எதிரிகளையே நம்முடைய நண்பர்களாக மாற்றி விட்டால், பிரச்சினையே கிடையாது. அதற்கு நாம் பெரியதாக எதுவுமே செய்ய தேவை இல்லை. சுலபமான முறையில் இந்த ஒரு செடியை உங்களுடைய வீட்டு வாசலில் நட்டு வைத்தாலே போதும். அதில் பூத்துக்குலுங்கும் சிவப்பு நிற பூக்களை பார்க்கும்போதே, நேர்மறை ஆற்றல் அதிகரிக்கப்பட்டு, நம் வீட்டிற்கு வரும் எதிரிகள் கூட, மனம் குளிர்ந்து, நம்முடைய நண்பர்களாக, உறவினர்களாக மாறிவிடுவார்கள். அது எந்த செடி என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

sembaruthi

ஐந்து இதழ்களைக் கொண்ட, சிவப்பு நிற ஒற்றைச் செம்பருத்திப் பூ செடி தான் அது. பொதுவாகவே இந்த செடிக்கு குளிர்ச்சித் தன்மை அதிகம் உள்ளது. எல்லோரும் சிவப்பு நிறம் என்றால் அதை டேஞ்சரான நிறம் என்று தானே சொல்லுவார்கள். அதாவது சிவப்பு என்றால் ஆபத்து என்று நினைக்கின்றோம். இதற்கு எப்படி நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் சக்தி உள்ளது என்று சிந்திக்கிறீர்களா?

- Advertisement -

சிவப்பு நிறம் என்றால், எவ்வளவு தூரத்தில் இருந்து பார்த்தாலும் அது நம்முடைய கண்களுக்கு தெரியும். அதனால் தான், ஆபத்து உள்ள இடங்களில் அந்த நிறத்தை பயன்படுத்த தொடங்கினார்கள். காலப்போக்கில் அதுவே, சிவப்பு நிறம் என்றால், அது ஆபத்தானது என்ற ஒரு கருத்தை நம்முடைய மனதில் பதிய வைத்து விட்டது.

ஆனால், நாம் நெற்றியில் வைக்கும் குங்குமமும் சிவப்பு நிறம் தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எப்போதுமே சிவப்பு நிறத்திற்கு ஒரு வசீகரத் தன்மை உண்டு. இந்த சிவப்பு நிற செம்பருத்தி பூக்கள் உங்களுடைய வீட்டு வாசலில் பூத்து இருந்தால் போதும். உங்கள் வீட்டிற்கு கோபத்துடன் வரும் உங்களுடைய உறவுகள் கூட, கோபம் தணிந்து, சாந்தமாக மாறிவிடுவார்கள்.

- Advertisement -

நம் வீட்டிற்கு வருகை தரும் அக்கம்பக்கத்தினர், நம்முடைய உறவினர்கள் இவர்களுடைய எதிர்மறை எண்ணங்கள் தான் நமக்குத் தீய சக்தியாக மாறி விடுகிறது. அவர்களுடைய பொறாமை குணம் தான், நமக்கு கண் திருஷ்டியாக மாறுகின்றது. நம் வீட்டிற்கு வருபவர்கள் கோபம் இல்லாமல், நமக்கு எதிரிகளாக இல்லாமல், சாந்த குணத்தோடு வருகை தரும் பட்சத்தில், நமக்கு என்ன பிரச்சினை வந்துவிடப் போகின்றது! கண் திருஷ்டியும் ஏற்படாது. எதிர்மறை ஆற்றலால் பிரச்சினைகளும் நம் குடும்பத்திற்கு வராதே! நம்முடைய உறவினர்களும் என்றைக்குமே நமக்கு எதிரியாக மாறமாட்டார்கள்.

angry

எப்படிப்பட்ட கோபத்தையும் குறைத்து, வீட்டிற்கு வருபவர்களை நம் வசப்படுத்த கூடிய, வசியத் தன்மை கொண்டதுதான் இந்த, ஒற்றைச் செம்பருத்தி செடி. சண்டை போட வேண்டும் என்று நம்முடைய வீட்டிற்கு வருபவர்களின் மனநிலை கூட, சாந்தமாக மாறிவிடும். அப்படிப்பட்ட சக்தி இந்த செடிக்கு உண்டு என்று சொன்னால் அது மிகையாகாது. இதற்கு காரணம், இந்த செடி இருக்கும் இடம், குளிர்ச்சியான இடமாக மாறிவிடும். நம்முடைய உடலானது குளிர்ச்சியானால், நம்முடைய மனமும் கட்டாயம் கோபம் தணிந்து குளிர்ச்சி நிலைக்கு வந்துவிடும்.

- Advertisement -

kobam2

உடல் சூடு அதிகமாகும் பட்சத்தில் தான் தலையில் இருக்கும் முடி கூட உதிர ஆரம்பிக்கும் என்று சொல்லுவார்கள். தலை முடி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு தருவது செம்பருத்தி பூ, இலை. ஆக செம்பருத்தி செடிக்கு இயற்கையாகவே சூட்டை தணிக்கும் தன்மை அமைந்துள்ளது. செம்பருத்தி செடியின் காற்றை சுவாசிக்கும் போதே ஒற்றைத் தலைவலி குணமாகும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இதோடு மட்டுமல்லாமல், இந்தக் காற்று நம்மீது பட்டால் நம்முடைய கண்பார்வை தெளிவாகும் என்றும் சில குறிப்புகளில் சொல்லப்பட்டுள்ளது.

sembaruthi

உடல் சூட்டினால் நமக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அதிகமாக தான் இருக்கும். அந்தப் பிரச்சனையில் கோபமும் ஒன்று. உடல் சூடு தணியும் பட்சத்தில் கோபமும் கட்டுப்படுத்தப்படும். அந்த உடல் சூட்டை கட்டுப்படுத்தக் கூடிய தன்மையும், எதிர்மறை ஆற்றலை கூட நேர்மறையாக மாற்றக் கூடிய தன்மையும், இந்த செடிக்கு இயற்கையாகவே உள்ளது. இதை ஆராய்ச்சி செய்தெல்லாம் உங்களால் கட்டாயம் உணரவே முடியாது. உங்களுடைய வீட்டின் முன்பு ஒரு ஒற்றை சிகப்பு, செம்பருத்திச் செடி வைத்து பாருங்கள். அனுபவப்பூர்வமாக உங்களால் எல்லாவிதமான நன்மைகளையும் கட்டாயம் உணர முடியும் என்ற கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
இந்த பழைய பொருட்களை இந்த திசையில் மட்டும் உங்கள் வீட்டில் வைத்து விடாதீர்கள்! பணம் செலவாகிக் கொண்டே இருக்குமாம்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -