செட்டிபுண்ணியம் ஸ்ரீ யோக ஹயக்ரீவர் கோயில் சிறப்புக்கள்

chettipunniyam-hayagreevar

அண்ட சராசரங்களையும் காக்கும் பெருமாள் எனப்படும் மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்கள் பல. அதில் ஒன்று தான் மது – கைடபர் எனும் அரக்கர்களை அழிக்க எடுத்த ஹயக்ரீவ பெருமாள் அவதாரம். குதிரை முக தோற்றம் கொண்டவராக இருக்கும் ஹயக்ரீவ மூர்த்தி ஒரு மனிதனுக்கு சிறந்த அறிவு, கல்வி, ஞானம் ஆகியவற்றை தரக்கூடியவர். அப்படி அவர் கோயில் கொண்டிருக்கும் செட்டிபுண்ணியம் “ஸ்ரீ யோக ஹயக்ரீவர்” பெருமாள் கோயில் பற்றிய சிறப்புகளை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

Hayagriva mantra Tamil

செட்டிபுண்ணியம் ஸ்ரீ யோக ஹயக்ரீவர் கோயில் வரலாறு

சுமார் 500 ஆண்டுகள் பழமையான கோயிலாக இருக்கிறது செட்டிபுண்ணியம் ஸ்ரீ தேவநாத பெருமாள் கோயில். இக்கோயிலின் இறைவனான பெருமாள் ஸ்ரீ தேவநாத பெருமாள் என்கிற பெயரில் அழைக்கப்படுகிறார். ஹயக்ரீவர் மற்றும் ராமர் சந்நிதிகளும் இக்கோயிலில் உள்ளன. 1848 ஆம் ஆண்டு திருவஹீந்திரபுரம் கோயிலிலிருந்து இக்கோயிலுக்கு தேவநாத பெருமாள், ஹயக்ரீவர் மற்றும் ராமரின் திருவுருவச் சிலைகள் கொண்டுவரப்பட்டன. அன்றிலிருந்து இந்த தெய்வங்கள் இக்கோயிலில் அருள்பாளித்து வருகின்றனர். இங்கு குதிரை முகம் கொண்ட ஹயக்ரீவ மூர்த்தி நான்கு கைகளுடன் சங்கு, சக்கரதாரியாக யோக நிலையில் பக்தர்களுக்கு அருள்பாளிக்கிறார்.

செட்டிபுண்ணியம் ஸ்ரீ யோக ஹயக்ரீவர் பெருமாள் கோயில் சிறப்புக்கள்

இக்கோயிலில் இருக்கும் ஹயக்ரீவ பெருமாளை பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ – மாணவிகள் அதிகளவில் வந்து வழிபடுகின்றனர். இங்கு வந்து ஹயக்ரீவரை வழிபட்டு சென்ற பின்பு தங்களால் கல்வியில் சிறப்பாக செயல்படமுடிந்ததாக பல மாணவர்களும் தங்களின் அனுபவத்தை கூறுகின்றனர்.

Hayagriva mantra Tamil

- Advertisement -

பள்ளி, கல்லூரி இறுதி தேர்வுகளின் போது தங்களின் தேர்வறை அனுமதி சீட்டு, எழுதுகோள்கள் போன்றவற்றை ஹயக்ரீவரின் பாதத்தில் வைத்து ஆசீர்வாதம் பெற்று, கோயிலில் பூஜை மற்றும் வழிபாடுகள் செய்து தேர்வெழுதும் மாணவர்கள் பலர் சிறந்த மதிப்பெண்கள் பெற்று, அவர்கள் விரும்பிய உயர்கல்வி படிக்கும் சூழல் அமைவதாக பலரும் கூறுவதால், தேர்வு காலங்களில் இக்கோயிலில் ஏராளமான மாணவ – மாணவியர் வந்து வழிபடுகின்றனர். இதனால் தேவநாத பெருமாள் கோயிலானது காலப்போக்கில் ஹயக்ரீவர் கோயில் என பெயர் பெற்று விட்டது.

கோயில் அமைவிடம்

அருள்மிகு ஸ்ரீ ஹயக்ரீவர் கோயில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு வட்டத்தில் இருக்கும் செட்டிபுண்ணியம் என்கிற கிராமத்தில் அமைந்துள்ளது.

கோயில் நடை திறப்பு

காலை 7 மணி முதல் மதியம் 12 மணிவரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7. 30 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

கோயில் முகவரி

அருள்மிகு ஸ்ரீ யோக ஹயக்ரீவர் கோயில்
செட்டிபுண்ணியம் கிராமம்
செங்கல்பட்டு வட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் – 603204

தொலை பேசி எண்

8675127999

இதையும் படிக்கலாமே:
அஹோபிலம் லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயில் சிறப்புக்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Chettipunniyam temple history in Tamil. It is also called as Chettipunniyam hayagriva temple in Tamil or Chettipunniyam koil in Tamil or Chettipunniyam hayagriva perumal kovil in Tamil.