மாரியம்மனை வணங்கி தீமிதிக்கும் சீனர்கள். ஆச்சர்யத்தில் தமிழர்கள்

mariyammanl
- Advertisement -

தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் வருடாவருடம் தீ மிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இதில் தமிழர்கள் பலர் கலந்துகொண்டு தீமிதிப்பதும் வழக்கம். அனால் சிங்கபூருளில் உள்ள ஒரு மாரியம்மன் கோவிலில் வருடாவருடம் சீனர்கள் தீமிதிக்கிறார்கள். வாருங்கள் அந்த கோவிலை பற்றி அறிவோம்.

சிங்கப்பூரில் உள்ள சைனா டவுன் என்று பகுதியில் அமைந்துள்ளது ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில். 1872 ஆண்டு கட்டப்பட்ட இந்த கோவில் இன்றளவும் சிங்கப்பூர் தமிழர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். நோய் தீர்க்கும் தெய்வமாகவும், பல குடும்பங்களின் குல தெய்வமாகவும், காவல் தெய்வமாகவும் இங்கு வீற்றிருக்கிறாள் ஸ்ரீ மகா மாரியம்மன்.

- Advertisement -

ஆரம்பகாலத்தில் ஒரு சின்ன குடிசையில் ‘சின்ன அம்மன்’ என்ற பெயரில் பிரதிஷ்டை செய்யப்பட்ட இந்த அம்மன் இன்று மிக பெரிய ஆலயத்தின் மூலஸ்தானத்தில் வீற்றிருக்கிறாள். 1936ம் ஆண்டில் முதல் கும்பாபிஷேகமும், 1996ம் ஆண்டில் ஐந்தாவது குடமுழுக்கும் நடைபெற்றது.

இங்குள்ள மாரியம்மனை வணங்க தமிழர்கள் மட்டும் அல்லது பல சீனர்களும் வருகின்றனர். அப்படியென்றால் அந்த அம்மன் எவ்வளவு சக்திவாய்ந்தவளாக இருப்பாள் என்று பார்த்துக்கொள்ளுங்கள். இங்கு ஆண்டுதோறும் நடக்கும் தீ மிதி திருவிழாவில் தமிழர்களோடு சேர்ந்து பல சீனர்களும் பங்கேற்று தீ மிதிப்பது வழக்கம்.

- Advertisement -