அம்மனுக்கு சுடிதார் அலங்காரம் – குருக்களுக்கு நேர்ந்த கதி

Amman in chudithar
- Advertisement -

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறையில் அபயாம்பிகை உடனுறை மயூரநாதர் கோயில் உள்ளது. இங்கு லிங்க வடிவில் மயூரநாதர் காட்சி தருகிறார். அதோடு அபயங்களில் இருந்து பக்தர்களை காத்தருளும் அபயாம்பிகைக்கு தனி சன்னதி உள்ளது. திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான இந்த கோவிலில் அம்பாளுக்கு தினமும் ஆறுகால பூஜை நடைபெறுவது வழக்கம்.

Amman in churidhar

கடந்த 2-ம் தேதி (02-02-2018) தை வெள்ளிக்கிழமையாதலால் அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. அன்று அம்பாளை தரிசிக்க வந்த பக்தர்களுக்கு ஒரு பேர் அதிச்சி காத்திருந்தது. காரணம் அன்று அம்பாளுக்கு அலங்காரம் செய்த ராஜு சிவாச்சாரியார், அம்மனுக்கு சுடிதார் உடையில் சந்தனக்காப்பு அலங்காரம் செய்திருந்தார். இதனை கண்ட பக்தர்கள் பெரும் கோவம் கொண்டனர்.

- Advertisement -

இது குறித்து ராஜு சிவாச்சாரியார் கூறுகையில், பக்தர்கள் எப்போதும் அம்பாளை ஒரே உருவில் பார்ப்பதால் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று நினைத்து சுடிதார் அலங்காரம் செய்தேன். இதை கண்ட சிலர் அற்புதமாக இருக்கிறது என்று கூறினார்கள், சிலர் இது போல செய்யவேண்டாம் என்றும் கூறினார்கள். இது குறித்து ஆதின மேலாளர் என்னிடம் விசாரித்தார், இது போல் இனி செய்யவேண்டாம் என்று என்னை எச்சரித்தார். நானும் இனி இப்படி செய்யமாட்டேன் என்று கூறினேன் என்றார்.

Mayuranadhar temple

அம்மனுக்கு எப்படி அலங்காரம் செய்யவேண்டும் என்பது குறித்து சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள நிலையில், இது போன்ற ஒரு தவறான செய்யயில் ஈடுபட்ட ராஜு சிவாச்சாரியாரை தண்டிக்கும் வகையில் அவரை திருவாடுதுறை ஆதினம் டிஸ்மிஸ் செய்துள்ளது.

- Advertisement -

Mayuranathar Temple

இதையும் படிக்கலாமே:
காஞ்சிபுரம் கோவிலில் கஞ்சா செடி வளர்ப்பு – சிக்கினார் காவலாளி

கலாம் காலமாக கடைபிடித்து வரும் புனிதமான வழக்கங்களை இப்படி தங்கள் இஷ்டத்திற்கு மாற்றும் சில குருக்களால் கோவிலின் புனித தண்மை பாழாகிறது என்பதே உண்மை. இன்று சுடிதார் அணிவித்தவர்கள் நாளை ஜீன்ஸ் பாண்ட் டீ ஷர்ட் அணிவிக்க மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். ஆகையால் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்.

- Advertisement -